முதல் போட்டியிலேயே கான்வே – மில்லர் சேர்ந்து மாஸ் காட்டுனா எப்டி இருக்கும், ரசல் அதிரடியை சூப்பர் கிங்ஸ் உடைத்தது எப்படி?

TSK vs LKR MLC
- Advertisement -

நவீன கிரிக்கெட்டில் ஐபிஎல் போன்ற டி20 தொடர்கள் விஸ்வரூப வளர்ச்சி கண்டுள்ள நிலையில் இந்த வருடம் தென்னாபிரிக்கா மற்றும் துபாயில் புதிதாக உருவாக்கப்பட்ட 2 டி20 தொடர்களில் மும்பை, கொல்கத்தா போன்ற ஐபிஎல் தொடரில் அணிகளை வைத்துள்ள நிர்வாகங்கள் தங்களுடைய கிளைகளை வாங்கின. அந்த வரிசையில் கிரிக்கெட் மிகவும் பிரபலமில்லாத அமெரிக்காவில் மேஜர் லீக் டி20 என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள புதிய தொடர் ஜூலை 13ஆம் தேதி துவங்கியது. இந்திய நேரப்படி இன்று காலை 6 மணிக்கு துவங்கிய அந்த தொடரின் முதல் போட்டியில் சென்னை நிர்வாகம் நிர்வகிக்கும் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நிர்வாகம் நிர்வகிக்கும் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதின.

டாலஸ் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் டாஸ் வென்ற லாஸ் ஏஞ்சல்ஸ் கேப்டன் சுனில் நரேன் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய டெக்சாஸ் அணிக்கு ஆரம்பத்திலேயே கேப்டன் டு பிளேஸிஸ் கோல்டன் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அந்த நிலைமையில் மறுபுறம் நட்சத்திர வீரர் டேவோன் கான்வே அதிரடியாக விளையாடிய நிலையில் அடுத்து வந்த லகிரு மிலாந்தா சற்று தடுமாற்றமாகவே செயல்பட்டு 17 (14) ரன்களில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

டிஎஸ்கே அசத்தல்:
இருப்பினும் அடுத்து வந்த நம்பிக்கை நட்சத்திரம் டேவிட் மில்லர் தமது பாணியில் களமிறங்கிய முதல் பந்திலிருந்தே அதிரடியை துவங்கினார். அப்போதிலிருந்து ஒவ்வொரு ஓவரிலும் பவுண்டரியும் சிக்ஸரும் அடித்து ரசிகர்களை மகிழ்வித்த இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 77 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து டெக்சாஸ் அணியை வலுப்படுத்திய போது 7 பவுண்டரி 1 சிக்சருடன் டேவோன் கான்வே 55 (37) ரன்கள் ஆட்டமிழந்தார்.

அடுத்த சில ஓவர்களிலேயே மறுபுறம் அதிரடியாக விளையாடிய டேவிட் மில்லர் 2 பவுண்டரி 4 சிக்சரை பறக்க விட்டு 61 (41) ரன்கள் குவித்து அவுட்டானார். இறுதியில் நம்பிக்கை நட்சத்திரங்கள் மிட்சேல் சாட்னர் 2 சிக்சருடன் 21 (14) ரன்களும் ட்வயன் ப்ராவோ 1 சிக்சருடன் 16* (6) ரன்களும் எடுத்து சூப்பர் பினிஷிங் கொடுத்ததால் 20 ஓவர்களில் டெக்சாஸ் 181/6 ரன்கள் எடுத்தது. லாஸ் ஏஞ்சல்ஸ் சார்பில் அதிகபட்சமாக லாக்கி பெர்குசன் மற்றும் அலி கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

- Advertisement -

அதைத் தொடர்ந்து 182 ரன்களை துரத்திய லாக் ஏஞ்சல்ஸ் அணிக்கு முதல் ஓவரிலேயே மார்ட்டின் கப்தில் டக் அவுட்டாக உன்முக்த் சந்த் 4 (6) ரிலீ ரோசவ் 4 (3) நிதிஷ் குமார் 0 (3) என முக்கிய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்த ஓவர்களில் டெக்சாஸ் அணியின் மிரட்டலான பந்து வீச்சில் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து பெரிய பின்னடைவை ஏற்படுத்தினர். அதனால் 20/4 என ஆரம்பத்திலேயே சரிந்த லாஸ் ஏஞ்சல்ஸ் தோல்வியின் பிடியில் சிக்கிய நிலையில் நம்பிக்கை நட்சத்திரம் ஆண்ட்ரூ ரசல் அதிரடியாக விளையாடி வெற்றிக்கு போராடினார்.

ஆனால் அவருக்கு உறுதுணையாக எதிர்ப்புறம் ஜஸ்கரன் மல்கோத்ரா 2 பவுண்டர் 2 சிக்சருடன் 22 (11) ரன்களும் கேப்டன் சுனில் நரேன் 15 (13) ரன்களும் எடுத்து போராடி அவுட்டாகி சென்றனர். அதனால் மறுபுறம் அழுத்தம் அதிகரித்த நிலையில் 7 பவுண்டரியையும் 3 சிக்சரையும் பறக்க விட்ட ரசலும் 55 (34) ரன்கள் குவித்து அதிரடியாக போராடி ப்ராவோ வேகத்தில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

இறுதியில் அடுத்து வந்த வீரர்களையும் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாக்கி லாஸ் ஏஞ்சஸ் அணியை 14 ஓவரில் 112 ரன்களுக்கு சுருட்டி 69 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை சுவைத்த டெக்சாஸ் சார்பில் அதிகபட்சமாக முகமது மோசின் 4 விக்கெட்டுகளும் ஜெரால்டு கோட்சி மற்றும் ரஷ்டி தேரன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். இந்த வெற்றிக்கு 61 (42) ரன்கள் எடுத்து முக்கிய பங்காற்றிய டேவிட் மில்லர் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இதையும் படிங்க:IND vs WI : முதல் போட்டியிலேயே அடிச்ச சதத்த அவங்களுக்கு டெட்கேட் பண்றேன் – கண் கலங்கிய ஜெய்ஸ்வால் உணர்ச்சியுடன் பேசியது என்ன

அப்படி இந்த தொடரை டு பிளேஸிஸ் தலைமையில் வெற்றிகரமாக டெக்ஸாஸ் துவக்கியுள்ளது சென்னை ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. அந்த வகையில் வரும் ஜூலை 26 வரை நடைபெறும் இத்தொடரின் லீக் சுற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு சென்று ஜூலை 31ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் கோப்பைக்காக மோத உள்ளது.

Advertisement