பிரட் லீ’யை முந்திய ட்ரெண்ட் போல்ட் அபார சாதனை.. நியூஸிலாந்து அட்டாக்கில் நங்கூரமாக நின்ற வங்கதேசம்

Trent Boult
- Advertisement -

விறுவிறுப்பாக இந்தியாவில் நடைபெற்று வரும் ஐசிசி உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 13ஆம் தேதி மதியம் 2 மணிக்கு நடைபெற்ற 11வது லீக் போட்டியில் வலுவான இங்கிலாந்து அணியை வங்கதேசம் எதிர்கொண்டது. தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இருக்கும் சேப்பாக்கத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதை தொடர்ந்து களமிறங்கிய வங்கதேசத்திற்கு ட்ரெண்ட் போல்ட் வீசிய முதல் ஓவரில் முதல் பந்திலேயே அதிரடி வீரர் லிட்டன் தாஸ் கோல்டன் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அதே போல மறுபுறம் சவாலை கொடுத்த மற்றொரு துவக்க வீரர் டன்சித் ஹசனை 16 ரன்களில் அவுட்டாக்கிய லாக்கி பெர்குசன் இளம் நட்சத்திர வீரர் மெஹதி ஹசனையும் 30 ரன்களில் காலி செய்தார்.

- Advertisement -

போல்ட் சாதனை:
போதாகுறைக்கு அடுத்ததாக வந்த நஜ்முல் சான்டோவும் 7 ரன்களில் ஆட்டமிழந்ததால் 56/4 என ஆரம்பத்திலேயே தடுமாறிய வங்கதேசம் 200 ரன்கள் கூட தொடாது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் மிடில் ஆர்டரில் சாகிப் அல் ஹசன் மற்றும் அனுபவ வீரர் முஸ்ஃபிகர் ரஹீம் ஆகியோர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சரிவை சரி செய்தனர்.

அந்த வகையில் 30 ஓவர்கள் வரை நங்கூரமாக நின்று 5வது விக்கெட்டுக்கு 94 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வங்கதேசத்தை ஓரளவு காப்பாற்றிய இந்த ஜோடியில் சாகிப் 40 ரன்களில் அவுட்டாக அடுத்த சில ஓவர்களில் மறுபுறம் நிதானமாக விளையாடிய முஸ்பிகர் ரஹீம் 6 பவுண்டரி 2 சிக்சருடன் 66 (75) ரன்களில் ஆட்டமிழந்தார். அவர்களைத் தொடர்ந்து முகமதுல்லா தம்முடைய நிதானத்தை வெளிப்படுத்தி 41* (49) ரன்களும் தவ்ஹீத் ஹ்ரிடாய் 13 ரன்களும் தஸ்கின் அஹமத் 17 ரன்களும் எடுத்தனர்.

- Advertisement -

அதனால் 50 ஓவர்களில் ஆல் அவுட்டாகாமல் நங்கூரமாக தாக்குப்பிடித்த வங்கதேசம் 245/9 ரன்கள் எடுத்தது. மறுபுறம் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்ட நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக லாக்கி பெர்குசன் 3 விக்கெட்டுகளும் ட்ரெண்ட் போல்ட், மாட் ஹென்றி தலா 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர். அதிலும் குறிப்பாக 2 விக்கெட்களை வீழ்த்திய ட்ரெண்ட் போல்ட் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 200 விக்கெட்டுகள் எடுத்த 3வது பவுலர் என்ற ஆஸ்திரேலியாவின் பிரட் லீ சாதனையை உடைத்து புதிய சாதனை படைத்தார்.

இதையும் படிங்க: பிரட் லீ’யை முந்திய ட்ரெண்ட் போல்ட் அபார சாதனை.. நியூஸிலாந்து அட்டாக்கில் நங்கூரமாக நின்ற வங்கதேசம்

கடந்த 2012இல் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகி உலகின் மிகச்சிறந்த இடது கை வேகப்பந்து வீச்சாளராக மிரட்டி வரும் அவர் இதுவரை 107 போட்டிகளில் 200 விக்கெட்களை சாய்த்து அதிவேகமாக 200 விக்கெட்டுகள் எடுத்த நியூஸிலாந்து பவுலர் என்ற சரித்திரமும் படைத்தார். அந்த பட்டியல்:
1. மிட்சேல் ஸ்டார்க் : 102
2. சக்லைன் முஸ்தாக் : 104
3. ட்ரெண்ட் போல்ட் : 107*
4. பிரட் லீ : 112
5. ஆலன் டொனால்ட் : 117

Advertisement