அந்த 2 விக்கெட் போதும். பும்ராதான் உலகின் டேஞ்சரான பவுலர்னு சொல்றதுக்கு – கவுதம் கம்பீர் பாராட்டு

Gambhir-and-Bumrah
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் 13-ஆவது உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி தாங்கள் விளையாடிய முதல் இரண்டு ஆட்டங்களிலும் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி இந்த தொடரில் அசத்தலான துவக்கத்தை கண்டுள்ளது.

அடுத்ததாக இந்திய அணி அக்டோபர் 14-ஆம் தேதி நாளை அகமதாபாத் நகரில் நடைபெற இருக்கும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பலப்பரீட்சை நடத்த காத்திருக்கிறது. இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களிலுமே இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினர்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 10 ஓவர்களை வீசிய அவர் 39 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதிலும் டெல்லி மைதானம் முழுக்க முழுக்க பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருந்தும் அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்திய பும்ராவின் செயல்பாடு அனைவரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இந்த போட்டிக்கு முன்னதாக இந்திய வீரர் பும்ரா மற்றும் பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் அப்ரிடி ஆகியோரை ஒப்பிட்டு பலரும் பேசி வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான கௌதம் கம்பீர் பும்ரா தான் தற்போதைய உலகின் அபாயகரமான பந்துவீச்சாளர் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்த தொடரின் முதலாவது போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் மிட்சல் மார்ஷ் மற்றும் இரண்டாவது போட்டியில் இப்ராஹிம் ஆகியோரின் விக்கெட்டை வீழ்த்திய பும்ராவின் பந்துவீச்சை பார்க்கும்போது தற்போதைய கிரிக்கெட் உலகின் முழுமையான மற்றும் ஆபத்தான வேகப்பந்து வீச்சாளர் என்றால் அது பும்ரா தான்.

இதையும் படிங்க : கோழைக்கு இடமில்ல.. அந்த கவலை இல்லாத பாகிஸ்தான் கண்டிப்பா இந்தியாவை தோற்கடிக்கும்.. அக்தர் பேட்டி

பும்ரா மற்றும் ஷாஹீன் அப்ரிடி ஆகிய இருவரையும் ஒப்பிட்டு பார்த்தாலும் பெரிய வித்தியாசம் உள்ளது. ஏனெனில் வேகப்பந்து வீச்சாளர்கள் பொதுவாக புதிய பந்தில் அல்லது டெத் ஓவர்களில் மட்டுமே சிறப்பாக செயல்படுவார்கள். ஆனால் பும்ரா மட்டும்தான் மிடில் ஓவர்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் பவுலராக இருக்கிறார் என கம்பீர பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement