கோழைக்கு இடமில்ல.. அந்த கவலை இல்லாத பாகிஸ்தான் கண்டிப்பா இந்தியாவை தோற்கடிக்கும்.. அக்தர் பேட்டி

Shoaib Akhtar 3
- Advertisement -

பரபரப்பாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 14ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் முக்கியமான லீக் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுவது அனைவரிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் 1992 முதல் இதுவரை உலகக்கோப்பையில் சந்தித்த 7 தோல்விகளை நிறுத்தி இந்தியாவை முதல் முறையாக தோற்கடிக்கும் முனைப்புடன் பாகிஸ்தான் களமிறங்குகிறது.

ஆனால் சொந்த மண்ணில் வலுவான அணியாக திகழும் இந்தியா 2023 ஆசிய கோப்பையில் தெறிக்க விட்டதை போலவே இம்முறையும் பாகிஸ்தானை வீழ்த்தி 8வது முறையாக வெற்றி வாகை சூடும் லட்சியத்துடன் விளையாட உள்ளது. இந்நிலையில் போட்டியில் தைரியமாக விளையாடினால் வெற்றி காணலாம் என்று தெரிவிக்கும் சோயப் அக்தர் கோழையாக விளையாடுபவர்களுக்கு தோல்வியே பரிசாக கிடைக்கும் என்று எச்சரித்துள்ளார்.

- Advertisement -

கோழைங்க இல்லை:
மேலும் ஏற்கனவே 7 போட்டிகளில் வென்றதால் இம்முறையும் வெல்லும் என்று ஊடகங்கள் தங்களின் டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்துவதற்காக இந்தியாவுக்கு எக்ஸ்ட்ரா அழுத்தம் கொடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மறுபுறம் அது போன்ற எவ்விதமான அழுத்தமும் பாகிஸ்தானுக்கு இல்லாத காரணத்தால் ஆக்ரோசமாக விளையாடி இம்முறை இந்தியாவை தோற்கடிக்கும் என்ற நம்பிக்கை தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய நிகழ்ச்சியில் பேசியது பின்வருமாறு.

“நீங்கள் தைரியமாக இருந்தால் மகிழ்ச்சியடைவீர்கள். நீங்கள் கோழையாக இருந்தால் இப்போட்டி மயக்கம் உள்ளவர்களுக்கானதல்ல. இது அழுத்தமான சூழ்நிலையில் அசத்தி தனக்கான பெயர் எடுக்க வேண்டும் சூப்பர் ஸ்டாராக வேண்டும் என்று நினைப்பவர்களுக்கான போட்டியாகும். கடந்த வருடம் அப்போட்டியின் போது நான் துபாயில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தேன். அங்கே அனைத்தும் இந்தியாவுக்கு சாதகமாக இருப்பது போல் நீல நிறத்தில் வடிவமைக்கப்பட்டு பாகிஸ்தானை கண்டிப்பாக இந்தியா நசுக்கும் என்று பேசிக் கொண்டிருந்தார்கள்”

- Advertisement -

“இது போன்ற அழுத்தத்தை உருவாக்குவது யார்? அப்படி நீங்கள் எங்களை பின்தங்கியவர்களாக மாற்றும் சமயமே எங்களுடைய அழுத்தம் முடிந்து போகிறது. இப்போது எங்களால் என்ன செய்ய முடியும்? ஏனெனில் நாங்கள் தோற்பதற்கு எதுவுமில்லை. ஏனெனில் இங்கே இந்திய ஊடகங்கள் தங்களுடைய மிகப்பெரிய டிஆர்பி பெறுவதற்காக மட்டுமே பாகிஸ்தான் இருக்கிறது. அதன் காரணமாக இந்தியாவை இம்முறை பாகிஸ்தான் எளிதாக தோற்கடிக்கும் என்று நான் நம்புகிறேன்”

இதையும் படிங்க: இந்தியாவுக்கு எதிரா அவர் 50 கூட அடிக்கல.. பலமே பலவீனமாகிடுச்சு.. பாகிஸ்தானின் ஓட்டைகளை உடைத்த ஆகாஷ் சோப்ரா

“ஏனெனில் நீங்கள் தான் டிவி உரிமை, ஸ்பான்சர்ஷிப் போன்ற அழுத்தத்தில் சிக்கியுள்ளீர்கள். நாங்கள் இல்லை. எனவே பாபர் அசாம் தலைமையிலான அணியினர் ஆக்ரோசத்துடன் சாதுரியமாக விளையாட வேண்டும். இந்திய மைதானங்களில் நீங்கள் எளிதாக வெல்லலாம். குறிப்பாக இந்தியாவை தோற்கடித்து அகமதாபாத் நகரில் நடைபெறும் ஃபைனலில் விளையாடுங்கள். நான் உங்களுடன் இருக்கிறேன்” என்று கூறினார்.

Advertisement