இந்தியாவுக்கு எதிரா அவர் 50 கூட அடிக்கல.. பலமே பலவீனமாகிடுச்சு.. பாகிஸ்தானின் ஓட்டைகளை உடைத்த ஆகாஷ் சோப்ரா

Aakash Chopra 2
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 14ஆம் தேதி உலகின் மிகப்பெரிய அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டிக்கு அனைவரிடமும் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. அதில் வரலாற்றில் இதுவரை சந்தித்த 7 தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து இம்முறை இந்தியாவை அதன் சொந்த மண்ணில் முதல் முறையாக உலகக்கோப்பையில் பாகிஸ்தான் தோற்கடிக்குமா என்று எதிர்பார்ப்பு அந்நாட்டு ரசிகர்களிடம் காணப்படுகிறது.

மறுபுறம் 2023 ஆசிய கோப்பையில் தோற்கடித்ததை போல உலகின் நம்பர் ஒன் அணியாக இருக்கும் இந்தியா இம்முறை பாகிஸ்தானை சொந்த மண்ணில் ஒரு லட்சம் ரசிகர்கள் முன்னிலையில் மண்ணை கவ்வ வைக்குமா என்ற எதிர்பார்ப்பு இந்தியர்களிடம் காணப்படுகிறது. இவ்விரு அணிகளை பொறுத்த வரை இந்திய அணியில் கிட்டத்தட்ட பெரும்பாலான வீரர்கள் நல்ல ஃபார்மில் இருக்கும் நிலையில் பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம், பகார் ஜமான், இமாம் போன்ற பேட்ஸ்மேன்கள் கடந்த போட்டிகளில் தடுமாற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

- Advertisement -

பலமே பலவீனம்:
மேலும் ஏற்கனவே நாசீம் ஷா காயத்தால் வெளியேறிய நிலையில் ஷாகின் அப்ரிடி தற்போது தன்னுடைய கையில் லேசான காயத்தை சந்தித்துள்ளார். அத்துடன் ஹரிஷ் ரவூப் இலங்கைக்கு எதிராக கடந்த போட்டியில் ரன்களை வாரி வழங்கினார். அதனால் பாகிஸ்தானின் முதன்மை பலமாக கருதப்படும் வேகப்பந்து வீச்சு துறையே தற்போது பலவீனமாக மாறியுள்ளதாக ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

அதை விட பாபர் அசாம் இந்தியாவுக்கு எதிராக இதுவரை ஒருநாள் போட்டிகளில் அரை சதம் கூட அடித்ததில்லை என்ற உண்மையையும் தெரிவிக்கும் அவர் பாகிஸ்தான் அணியில் இருக்கும் ஓட்டைகள் பற்றி தன்னுடைய யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு. “பாகிஸ்தான் அணியில் தற்போது அதிகப்படியான தன்னம்பிக்கை இருப்பதை உங்களால் பார்க்க முடியவில்லை. தங்களால் இப்போட்டியில் வெல்ல முடியும் என்ற தன்னம்பிக்கை அவர்களிடம் இருப்பதாக தெரியவில்லை”

- Advertisement -

“ஏனெனில் அவர்களுடைய அணியில் நிறைய ஓட்டைகள் தெளிவாக தெரிகின்றன. குறிப்பாக பவுலிங் தான் பாகிஸ்தானின் பலமாகும். ஆனால் தற்போது அதுவே அவர்களுடைய பலவீனமாக இருக்கிறது. போதாகுறைக்கு சாகின் அப்ரிடியின் 3வது விரல் காயத்தை சந்தித்துள்ளதால் பந்தை சரியாக பிடிக்க முடியாமல் தடுமாறுவதாக செய்திகள் வருகின்றன. தற்போது அவர் சிறப்பாக விளையாடுவதற்கு கடினத்தை சந்தித்து வருகிறார்”

இதையும் படிங்க: பாகிஸ்தான் அணியை வீழ்த்தனும்னா இந்திய அணியில் இந்த மாற்றம் நடந்தே ஆகனும் – ஆகாஷ் சோப்ரா கருத்து

“அதே போல ஹசன் அலி தொடர்ந்து சிறப்பாக அசத்துவாரா என்று உங்களால் உறுதியாக சொல்ல முடியாது. ஹரிஷ் ரவூப் கடந்த போட்டியில் சுமாராக செயல்பட்டார். மேலும் சடாப் கான், முகமத் நவாஸ் ஆகியோர் பந்தை சரியான இடத்தில் பிட்ச் செய்ய முடியாமல் தடுமாறிய நிலையில் உஷாமா மிர் விளையாடுவாரா என்பது தெரியாது. அத்துடன் இந்தியாவுக்கு எதிராக பாபர் அசாம் அரை சதமடித்ததில்லை. இமாம்-உல்-ஹக் எப்போதுமே ஷார்ட் பிட்ச் பந்துகளில் ஆட்டமிழக்கிறார். இப்திகார் லோயர் ஆர்டரில் பெரிய ரன்கள் அடிப்பதில்லை” என்று கூறினார்.

Advertisement