பாகிஸ்தான் அணியை வீழ்த்தனும்னா இந்திய அணியில் இந்த மாற்றம் நடந்தே ஆகனும் – ஆகாஷ் சோப்ரா கருத்து

Chopra
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது இந்தியாவில் நடைபெற்று வரும் 13-வது 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று அசத்தலான பயணத்தை துவங்கியுள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் பெற்ற வெற்றி இந்திய அணியானது புள்ளி பட்டியலில் வலுவான நிலையில் உள்ளது.

அதனை தொடர்ந்து இந்திய அணி அடுத்ததாக பாகிஸ்தான் அணிக்கு எதிராக நாளை அக்டோபர் 14-ஆம் தேதி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் விளையாட இருக்கிறது. இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களுமே தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

- Advertisement -

இவ்வேளையில் இந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னர் இந்திய அணியில் என்னென்ன மாற்றங்கள் நிகழலாம் என்பது குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் நாம் வெற்றி பெற வேண்டுமெனில் ஷர்துல் தாகூருக்கு பதிலாக முகமது ஷமியை இணைத்து விளையாட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : முகமது ஷமி மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர். முழுநேர பந்துவீச்சாளராக இருக்கும் அவர் இருந்தால் எதிரணிக்கு நிச்சயம் நெருக்கடியை வழங்க முடியும். அதேவேளையில் எட்டாவது இடத்தில் களமிறங்கி பேட்டிங் செய்யக் கூடியவர் ஷர்துல் தாகூர். அப்படி எட்டாவது இடத்தில் ஒரு பேட்ஸ்மேன் வேண்டும் என்பதாலேயே அவர் வாய்ப்புகளை பெற்று வருகிறார்.

- Advertisement -

ஆனால் என்னை பொருத்தவரை எட்டாவது பேட்டிங் செய்யும் வீரர் பெரும்பாலும் அதிக அளவில் தேவைப்பட மாட்டார் என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் பெரும்பாலும் 50 ஓவர் போட்டிகளில் எட்டாவது இடத்தில் விளையாடும் வீரருக்கு பெரியளவில் பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைக்காது. ஒருவேளை கிடைத்தாலும் அந்த போட்டியில் பந்துக்கு இணையான ரன்களையே அடிக்கும் வீரராக ஷர்துல் தாகூர் இருக்கிறார்.

இதையும் படிங்க : கம்பேர் பண்ணாதீங்க.. அப்ரிடியை விட அந்த 3 திறமை கொண்டுள்ள பும்ரா தான் கிரேட்.. கம்பீர் அதிரடி கருத்து

ஏற்கனவே ஷர்துல் தாகூர் மற்றும் ஷமி ஆகியோரில் யார் விளையாட வேண்டும்? என்ற விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நானும் இந்த விவாதத்தில் ஷமியை தான் முன்னிறுத்தி அவரே விளையாட வேண்டும் என்று நினைக்கிறேன். பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஷமி விளையாடினால் இந்திய அணிக்கு வெற்றி கிடைக்கும் என்றும் நான் நம்புகிறேன் என ஆகாஷ் சோப்ரா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement