கம்பேர் பண்ணாதீங்க.. அப்ரிடியை விட அந்த 3 திறமை கொண்டுள்ள பும்ரா தான் கிரேட்.. கம்பீர் அதிரடி கருத்து

gautam gambhir 3
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் முக்கியமான போட்டி அக்டோபர் 14ஆம் தேதி உலகின் பெரிய அகமதாபாத் மைதானத்தில் மதியம் 2 மணிக்கு நடைபெற உள்ளது. அதில் காலம் காலமாக உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்தும் முனைப்புடன் பாகிஸ்தான் விளையாடும் உள்ளது.

மறுபுறம் ஏற்கனவே 2023 ஆசிய கோப்பையில் தோற்கடித்த இந்தியா இம்முறையும் தங்களுடைய சொந்த மண்ணில் பாகிஸ்தானை 8வது முறையாக உலகக்கோப்பையில் தோற்கடித்து வெற்றி நடையை தொடரும் லட்சியத்துடன் களமிறங்குகிறது. இந்த சூழ்நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி இப்போட்டியில் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற இந்திய வீரர்களுக்கு சவாலை கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

- Advertisement -

கம்பீர் கருத்து:
குறிப்பாக புதிய பந்தை ஸ்விங் செய்து வலதுகை பேட்ஸ்மேன்களுக்கு சவாலை கொடுக்கும் திறமையை கொண்டுள்ள அவர் 2021 டி20 உலகக் கோப்பையில் முதல் முறையாக இந்தியாவை தோற்கடிக்க முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார். அதன் காரணமாக இந்தியாவின் பும்ராவை விட ஷாஹீன் அப்ரிடி மிகவும் உலகத்தரம் வாய்ந்த நம்பர் ஒன் பவுலராக இருப்பதாக அந்நாட்டை சேர்ந்தவர்கள் கொண்டாடுவதையும் பேசுவதையும் வழக்கமாக வைத்திருக்கின்றனர்.

இந்நிலையில் ஷாஹீன் அப்ரிடி புதிய பந்தில் பவர் பிளே ஓவரில் மட்டுமே தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவராக இருப்பதாக கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ஆனால் பவர் பிளே, மிடில் மற்றும் டெத் ஓவர்கள் என ஒரு போட்டியின் 3 விதமான சூழ்நிலைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வெற்றியை இந்தியாவின் பக்கம் திறமை பும்ராவிடம் இருப்பதாக கம்பீர் பாராட்டியுள்ளார்.

- Advertisement -

எனவே ஷாஹீனை விட தரத்தில் பும்ரா பெரிய வித்தியாசத்தை கொண்டிருப்பதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் மிட்சேல் மார்ஷ் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இப்ராஹிம் ஜாட்ரான் ஆகியோரை பும்ரா அவுட்டாக்கிய விதம் அபாரமாக இருந்தது. எனவே இந்த உலகில் முழுமையான தரத்தை கொண்ட அதிரடி பவுலர் என்றால் அது பும்ரா ஆவார்”

இதையும் படிங்க: இந்தியா – பாக் போட்டி நடைபெறும் அஹமதாபாத் மைதானம் எப்படி? வரலாற்று புள்ளிவிவரம்.. பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

“ஆரம்பத்தில் நாம் பும்ரா மற்றும் சாகின் ஆகியோரை ஒப்பிட்டோம். இருப்பினும் அதில் பெரிய வித்தியாசம் இருக்கிறது. அதாவது போட்டியின் அனைத்து சூழ்நிலைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு பவுலரின் பெயரை என்னிடம் சொல்லுங்கள். ஏனெனில் இங்குள்ள பல பவுலர்கள் ஒன்று புதிய பந்தில் அல்லது டெத் ஓவர்களில் மட்டும் அசத்துவார்கள். ஆனால் பும்ரா புதிய அல்லது பழைய பந்தில் ஏற்படுத்தும் அதே தாக்கத்தை மிடில் ஓவர்களிலும் ஏற்படுத்தும் தன்மையை கொண்டுள்ளார்” என்று கூறினார்.

Advertisement