இந்தியா – பாக் போட்டி நடைபெறும் அஹமதாபாத் மைதானம் எப்படி? வரலாற்று புள்ளிவிவரம்.. பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

Motera
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 14ஆம் தேதி அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி மதியம் 2 மணிக்கு நடைபெறுகிறது. ஆசிய கண்டத்தின் பரம எதிரிகளான இவ்விரு அணிகளும் கிரிக்கெட்டை கௌரவமாக கருதி முழுமூச்சுடன் மோதிக் கொள்வார்கள் என்பதாலேயே இந்தியா – பாகிஸ்தான் போட்டி உலக அளவில் பிரசித்தி பெற்றதாக இருக்கிறது.

அதில் கடந்த 2 போட்டிகளில் நெதர்லாந்து மற்றும் இலங்கையை தோற்கடித்த பாகிஸ்தான் இப்போட்டியில் இந்தியாவையும் சொந்த மண்ணில் தோற்கடித்து காலம் காலமாக உலகக் கோப்பைகளில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்தி சரித்திரத்தை மாற்றும் முனைப்புடன் களமிறங்குகிறது. மறுபுறம் சொந்த மண்ணில் எப்போதுமே அசைக்க முடியாத அணியாக திகழும் இந்தியா தங்களுடைய முதல் போட்டியில் வலுவான ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது.

- Advertisement -

அகமதாபாத் மைதானம்:
குறிப்பாக 2023 ஆசிய கோப்பையில் இலங்கையில் பந்தாடியதை போலவே இம்முறை சொந்த மண்ணில் பாகிஸ்தானை பந்தாடி உலக கோப்பையில் 8வது வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் இந்தியா களமிறங்குகிறது. அதனால் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள இப்போட்டி அகமதாபாத் நகரில் இருக்கும் உலகின் மிகப்பெரிய மைதானத்தில் நடைபெற உள்ளது.

1. கடந்த 1982இல் தோற்றுவிக்கப்பட்டு தற்போது 1,32,000 ரசிகர்கள் அமரும் அளவுக்கு நவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பட்ட உள்ள இம்மைதானத்தில் இதுவரை 29 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளது. அதில் 18 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 10 வெற்றிகளையும் 8 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது. 2005இல் இங்கு முதலும் கடைசியுமாக இந்தியாவுக்கு எதிராக விளையாடிய பாகிஸ்தான் வெற்றியை பதிவு செய்துள்ளது.

- Advertisement -

2. இந்த மைதானத்தில் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் (342) அடித்த வீரராக தற்போதைய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் முதலிடத்தில் இருக்கிறார். இங்கு அதிக சதங்கள் அடித்த வீரர்களாக ராகுல் டிராவிட் மற்றும் கிறிஸ் கெயில் ஆகியோர் முதலிடத்தில் இருக்கும் (தலா 2) நிலையில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வீரராக சௌரவ் கங்குலி (144 ரன்கள்) சாதனை படைத்துள்ளார்.

3. இங்கு அதிக விக்கெட்களை (10) எடுத்த பவுலராக ஜாம்பவான் கபில் தேவ் ஜொலிக்கும் நிலையில் சிறந்த பவுலிங்கை பதிவு செய்த பவுலராக பிரசித் கிருஷ்ணா (4/12) இருக்கிறார். இந்த மைதானத்தில் இந்தியா பதிவு செய்து அதிகபட்ச ஸ்கோர் 325 ரன்களாகும்.

- Advertisement -

வெதர் ரிப்போர்ட்:
அகமதாபாத் நகரில் அக்டோபர் 14ஆம் தேதி மழை பெய்வதற்கான வாய்ப்பில்லை என்றும் லேசான மேகமூட்டத்துடன் கூடிய வானிலை நிலவும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவிப்பதால் இப்போட்டி முழுமையாக நடைபெறும் என்று நம்பலாம்.

பிட்ச் ரிப்போர்ட்:
இத்தொடரில் இதுவரை பெரும்பாலும் பேட்ஸ்மேன்கள் ராஜாங்கம் நடத்தி வரும் நிலையில் இப்போட்டி நடைபெறும் அகமதாபாத் மைதானம் பேட்டிங் பவுலிங் ஆகிய இரண்டுக்கும் சமமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இங்கே செம்மண், கருமண் ஆகியவற்றால் நிறைய பிட்ச்கள் இருக்கிறது. இதில் கருமண்ணால் உருவாக்கப்பட்ட பிட்ச்சுகள் வெள்ளைப்பந்து போட்டிகளுக்கும் செம்மண் பிட்ச்கள் டெஸ்ட் போட்டிகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே இப்போட்டியில் வேகப்பந்து வீச்சாளர்கள் எக்ஸ்ட்ரா பவுன்ஸ் பயன்படுத்தி நல்ல தாக்கத்தை ஏற்படுத்துவார்கள்.

இதையும் படிங்க: அப்படி பேசுனது தப்பு தான் மன்னிச்சுடுங்க.. இந்தியாவை விட்டு வெளியேறிய பாக் தொகுப்பாலினி அறிக்கை

அதே போல மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்கள் கணிசமான விக்கெட்டுகளை எடுப்பார்கள். அதே சமயம் நன்கு செட்டிலாகி விளையாடும் பேட்ஸ்மேன்கள் இங்கு எளிதாக பெரிய ரன்கள் குவிக்கலாம். குறிப்பாக இங்கே இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் நியூசிலாந்து 9 வித்தியாசத்தில் எளிதாக வென்றதை பார்த்தோம். அந்த வகையில் இரவில் பனியின் தாக்கம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இப்போட்டியில் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்து வீசி பின்னர் திறம்பட சேசிங் செய்வது வெற்றிக்கு வித்திடலாம்.

Advertisement