இருப்பதிலேயே நான் தான் மோசமானவன்.. நல்லவேளை நான் பவுலரா இல்ல.. டெல்லியை விளாசிய ஹெட் பேட்டி

- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 20ஆம் தேதி நடைபெற்ற 35வது லீக் போட்டியில் டெல்லியை 67 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் தோற்கடித்தது. அதனால் புள்ளிப்பட்டியலில் 5வது வெற்றியை பதிவு செய்த அந்த அணி 2வது இடத்திற்கு முன்னேறி அசத்தியது. தலைநகர் டெல்லியில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் 20 ஓவரில் 266/7 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 89, அபிஷேக் சர்மா 46, சபாஷ் அஹ்மத் 59* ரன்கள் எடுத்த நிலையில் டெல்லி சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத் தொடர்ந்து 267 ரன்களை துரத்திய டெல்லிக்கு பிரிதிவி ஷா 16, டேவிட் வார்னர் 1, ட்ரிஷன் ஸ்டப்ஸ் 10 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

மோசமான பவுலர்:
அதனால் ஜேக் ப்ரேஷர்-மெக்குர்க் 65, அபிஷேக் போரேல் 42, கேப்டன் ரிஷப் பண்ட் 44 ரன்கள் எடுத்தும் 19.1 ஓவரில் 199 ரன்கள் மட்டுமே எடுத்த டெல்லி தோல்வியை சந்தித்தது. அந்தளவுக்கு பந்து வீச்சிலும் சிறப்பாக விளையாடி வெற்றி கண்ட ஹைதராபாத் சார்பில் அதிகபட்சமாக தமிழக வீரர் நடராஜன் 4 விக்கெட்டுகள் எடுத்தார். இந்த வெற்றிக்கு 89 ரன்கள் அடித்து முக்கிய பங்காற்றிய டிராவிஸ் ஹெட் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில் பகுதிநேர பவுலரான தாம் இப்போட்டியில் பந்து வீசிய மற்ற அனைத்து பவுலர்களை மிகவும் மோசமான பவுலர் என்று டிராவிஸ் ஹெட் கலகலப்பாக கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நாங்கள் ஒரு வெற்றி நடையில் இருக்கிறோம். எங்கள் இளம் வீரர்கள் நன்றாக விளையாடி மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். நீங்கள் நல்ல ஃபார்மில் இருக்கும் போது மிகவும் எளிமையாக விளையாடி பந்துக்கு ரியாக்சன் கொடுத்தால் போதும்”

- Advertisement -

“அபிஷேக் சர்மா பவர் பிளேவில் நன்றாக விளையாடினார். ஸ்பின்னர்களுக்கு எதிராக ஆக்ரோசமாக விளையாடும் அவர் தன்னுடைய வேலையை செய்தார். அவருடன் இணைந்து விளையாடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. மற்ற பவுலர்களை விட நான் மிகவும் மோசமான பவுலர். எங்களுடைய அணியில் நிறைய வீரர்கள் பவுலிங் செய்கின்றனர். அதனால் இம்பேக்ட் வீரர் யார் என்பதை தேர்வு செய்வதில் சவால் இருக்கிறது”

இதையும் படிங்க: மே 1-க்குள் டி20 உலகக்கோப்பை டீமை அறிவிச்சாகனும்.. குழப்பத்தில் சிக்கியுள்ள ரோஹித் சர்மா மற்றும் தேர்வுக்குழுவினர்

“எங்களுடைய பவுலர்களும் பவர் பிளே ஓவர்களில் கடினத்தை எதிர்கொண்டனர். ஆனால் நாங்கள் இன்றிரவு அணியாக நல்ல வேலையை செய்தோம். நான் மீண்டும் டி20 கிரிக்கெட்டில் அதுவும் டாப் ஆர்டரில் விளையாடுவது நல்ல உணர்வை கொடுக்கிறது” என்று கூறினார். முன்னதாக இந்தப் போட்டியில் 16 பந்துகளில் 50 ரன்கள் தொட்ட அவர் ஹைதராபாத் அணிக்காக வேகமாக அரை சதமடித்த வீரர் என்ற அபிஷேக் சர்மா சாதனையை சமன் செய்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement