அந்த பிளான் ஏற்கனவே வெச்சுருந்தேன்.. நெனச்சு பாக்காத இந்தியாவை சந்திக்க வரோம்.. ஆட்டநாயகன் ஹெட் பேட்டி

Travis head
Advertisement

இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நவம்பர் 16ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெற்ற 2வது செமி ஃபைனலில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. அதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா சுமாராக விளையாடி 49.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 212 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக டேவிட் மில்லர் சதமடித்து 101, ஹென்றிச் கிளாசின் 47 ரன்கள் எடுத்தனர்.

ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக கேப்டன் கமின்ஸ் மற்றும் மிட்சேல் ஸ்டார்க் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதை தொடர்ந்து 213 ரன்களை தூரத்திய ஆஸ்திரேலியாவுக்கு டிராவிஸ் ஹெட் 62, டேவிட் வார்னர் 29 ரன்கள் விளாசி ஆரம்பத்திலேயே அதிரடியான துவக்கத்தை கொடுத்தனர். அதனால் மிடில் ஆர்டரில் ஸ்மித் 30, லபுஸ்ஷேன் 18, மேக்ஸ்வெல் 1, ஜோஸ் இங்லிஷ் 28, மிட்சேல் ஸ்டார்க் 16*, கேப்டன் கமின்ஸ் 14* ரன்கள் எடுத்ததே ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு போதுமானதாக அமைந்தது.

- Advertisement -

இந்தியாவுடன் ஃபைனல்:
அதனால் 47.2 ஓவரிலேயே இலக்கை எட்டிய ஆஸ்திரேலியா 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்று நவம்பர் 19ஆம் தேதி நடைபெறும் ஃபைனலில் இந்தியாவை எதிர்கொள்ள தகுதி பெற்றது. மறுபுறம் டாஸ் அதிர்ஷ்டத்தை பெற்றும் பேட்டிங்கில் சொதப்பிய தென்னாப்பிரிக்கா கோட்சி, சம்சி அதிகபட்சமாக தலா 2 விக்கெட்டுகள் எடுத்தும் வெற்றி காண முடியாமல் மீண்டும் சோக்கர் என்ற பட்டத்துடன் பரிதாபமாக வெளியேறியது.

இப்போட்டியில் 24/4 என சரிந்த தென்னாப்பிரிக்காவை டேவிட் மில்லருடன் சேர்ந்து அதிரடியாக 47 (47) ரன்கள் குவித்து காப்பாற்றப் போராடிய ஹென்றிச் கிளாஸின் உட்பட ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை எடுத்த ட்ராவிஸ் ஹெட் பேட்டிங்கில் 62 (48) ரன்கள் விளாசி ஆல்ரவுண்டராக அசத்தியதால் ஆட்டநாயகன் விருதை வென்றார். இப்படி முக்கிய நேரத்தில் பந்து வீசும் திட்டத்தை ஏற்கனவே வைத்திருந்ததாக தெரிவிக்கும் அவர் ஃபைனலில் எதிர்கொள்வோம் என்று கனவிலும் நினைக்காத இந்தியாவை சந்திக்க தயாராக இருப்பதாக பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“பரபரப்பாக முடிந்த இந்த போட்டி அபாரமாக இருந்தது. நாங்கள் நாற்காலியை விட்டு நகராமல் இருந்தோம். கடந்த 4 நாட்களாக இன்று நாங்கள் இருந்ததால் எப்படி பிட்ச் இருக்கும் என்பதை நாங்கள் தெரிந்து கொண்டோம். இருப்பினும் இவ்வளவு பெரிய சூழல் இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்றாலும் அதை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருந்தோம். சமீபத்தில் சந்தித்த காயத்தால் இப்போட்டியில் விளையாட மாட்டேன் என்று நான் நினைத்த போதிலும் ஆஸ்திரேலியாவின் வெற்றியில் பங்காற்றியது மகிழ்ச்சியளிக்கிறது”

இதையும் படிங்க: 8வது முறை.. இந்தியாவை மிரட்ட வரும் ஆஸி.. அனல் பறந்த செமி ஃபைனலில் முக்கிய தவறால் மீண்டும் சோக்கரான தெ.ஆ

“க்ளாஸென் எனது பந்துகளை அதிரடியாக எதிர்கொண்டும் கடைசியில் விக்கெட்டை எடுத்தது மகிழ்ச்சியை கொடுத்தது. இப்படி சில ஓவர்கள் வீசி பந்து வீச்சில் பங்கேற்ற நான். அந்த வழியில் நேர்மறையாக விளையாடிய எங்களில் மகாராஜுக்கு எதிராக நான் அவுட்டானது ஏமாற்றத்தை கொடுத்தது. இந்திய பவுலிங் அட்டாக் நம்ப முடியாததாக இருக்கிறது. கூர்மையாக பந்து வீசும் பவுலர்களைக் கொண்டுள்ள அவர்கள் இத்தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். அவர்களை ஃபைனலில் எதிர்கொள்வோம் என்று நாங்கள் கனவிலும் நினைக்கவில்லை” என்று கூறினார்.

Advertisement