WTCFinal : டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் முதல் வீரராக மகத்தான சாதனையை நிகழ்த்திய – டிராவிஸ் ஹெட்

Travis-Head
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி டெஸ்ட் போட்டிகளின் மீது ரசிகர்களின் கவனத்தை திருப்பும் வகையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை நடத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது இரண்டாவது முறையாக நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த இறுதிப் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

Travis Head 2

- Advertisement -

அந்த வகையில் ஜூன் 7-ம் தேதி நேற்று துவங்கிய இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி தற்போது ஆஸ்திரேலிய அணியானது தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வருகிறது. நேற்றைய முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுகளை இழந்து 327 ரன்கள் குவித்துள்ளது.

வேகப்பந்து வீச்சிற்கு சாதகமான இந்த மைதானத்தில் ஆஸ்திரேலிய அணியானது மிகச் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்து வருகிறது. நேற்றைய முதல்நாள் ஆட்டத்தில் உஸ்மான் கவாஜா ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்த வேளையில் டேவிட் வார்னர் 43 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதேபோன்று மார்னஸ் லாபுஷேன் 26 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

Travis Head 1

பின்னர் நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் நேற்றைய முதல்நாள் ஆட்டநேர முடிவு வரை மேலும் விக்கெட் ஏதும் சரியாமல் பார்த்துக்கொண்டனர். அவர்கள் இருவரும் 4 விக்கெட்டிற்கு இதுவரை 251 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தியுள்ளனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது அதிரடியாக விளையாடி 103 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்த ஆஸ்திரேலிய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் முதல் நபராக ஒரு தனித்துவமான சாதனையை நிகழ்த்தி வரலாற்றில் தனது பெயரை பதித்துள்ளார். அந்த வகையில் நேற்றைய போட்டியில் 103 பந்துகளில் சதம் அடித்த அவர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் சதம் அடித்த முதல் வீரராக தனது பெயரை பதிந்துள்ளார்.

இதையும் படிங்க : WTCFinal : டீமில் இருந்து நீக்கினாலும் ஈகோ இல்லாமல் அஷ்வின் பண்ண இந்த விஷயத்தை பாத்தீங்களா? – என்ன மனுஷன்யா

ஒட்டுமொத்தமாக ஆஸ்திரேலிய அணிக்காக அவர் அடிக்கும் ஆறாவது சதமாக இந்த சதம் அமைந்துள்ளது. அதோடு ஆஸ்திரேலியாவிற்கு வெளியில் அவர் அடிக்கும் முதல் சதமாகவும், இந்திய அணிக்கு எதிராக அடிக்கும் முதல் சதமாகவும் இந்த சதம் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement