WTCFinal : டீமில் இருந்து நீக்கினாலும் ஈகோ இல்லாமல் அஷ்வின் பண்ண இந்த விஷயத்தை பாத்தீங்களா? – என்ன மனுஷன்யா

Ashwin
- Advertisement -

உலக கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று ஜூன் 7-ஆம் தேதி துவங்கிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியானது லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். அதன்படி நேற்றைய முதல்நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 327 ரன்கள் குவித்துள்ளது.

Travis Head

- Advertisement -

ஆஸ்திரேலியா அணி சார்பாக டிராவிஸ் ஹெட் 146 ரன்களுடனும், ஸ்டீவ் ஸ்மித் 95 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். அதனை தொடர்ந்து இன்று ஆஸ்திரேலிய அணி தங்களது இரண்டாம் நாள் ஆட்டத்தை விளையாட உள்ளது. இந்நிலையில் நேற்றைய போட்டியின் போது டாசிற்கு பிறகு இந்திய அணியில் உள்ள மாற்றங்கள் குறித்து அறிவித்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா :

மைதானத்தின் தன்மையை கணக்கில் கொண்டு நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஒரு சுழற்பந்து வீச்சாளருடன் செல்வதாகவும் அப்படி விளையாடும் அந்த ஒரு ஸ்பின்னர் ஜடேஜா என்றும் அறிவித்தார். அப்படி ரோகித் சர்மா அறிவித்ததுமே சமூக வலைதளத்தில் அஸ்வின் நிராகரிக்கப்பட்டது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. மேலும் முன்னாள் வீரர்கள் பலரும் அஸ்வினை இந்த போட்டியில் அமர வைத்தது தவறு என்றும் கூறி வருகின்றனர்.

Ashwin

ஏனெனில் உலகின் நம்பர் 1 டெஸ்ட் பந்துவீச்சாளராக இருக்கும் அஸ்வினையே அமர வைத்து இந்திய அணி விளையாடி வருவது தவறு என்றும் சுட்டிக்காட்டி வருகின்றனர். அதோடு டெஸ்ட் கிரிக்கெட்டில் இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக நெருக்கடி அளித்து விக்கெட்டுகளை கைப்பற்றும் அற்புதமான பந்துவீச்சாளரான திகழ்ந்து வரும் அஸ்வின் இல்லாதது இந்திய அணிக்கு ஒரு பின்னடைவு என்றே கூறலாம்.

- Advertisement -

இப்படி ஒரு பக்கம் அஸ்வின் குறித்து பல்வேறு கருத்துக்கள் உலா வரும் வேளையில் அஸ்வின் அணியில் இடம்பெறவில்லை என்றாலும் அவர் நேற்றைய போட்டியில் செய்த சில செயல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பாராட்டினை பெற்று வருகிறது. அந்த வகையில் நேற்றைய முதல்நாள் ஆட்டத்தில் இந்திய அணியில் அவர் இடம்பெறவில்லை என்றாலும் போட்டி முழுவதையும் வெளியில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்.

இதையும் படிங்க : WTCFinal : ஆஸ்திரேலிய அணியை தடுத்து நிறுத்தனும்னா இதை செய்ஞ்சே ஆகனும் – இல்லனா அவ்ளோதான்

அதுமட்டுமின்றி விக்கெட்டுகள் விழாமல் இருந்த வேளையில் இடைவெளியின் போது குளிர்பானங்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் என அனைத்தையும் எடுத்துக் கொண்டு வாட்டர் பாயாக களத்திற்குள் வந்த அஸ்வின் கேப்டன் ரோகித்துக்கும், மற்ற பந்துவீச்சாளர்களுக்கும் என்னென்ன செய்யலாம் என்பது குறித்த அறிவுரைகளையும் வழங்கிவிட்டு சென்றார். இப்படி சுயநலமற்ற அஸ்வினின் செயல் தற்போது ரசிகர்கள் மத்தியில் பாராட்டினை பெற்று வருகிறது.

Advertisement