WTCFinal : ஆஸ்திரேலிய அணியை தடுத்து நிறுத்தனும்னா இதை செய்ஞ்சே ஆகனும் – இல்லனா அவ்ளோதான்

Shardul-Thakur
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியானது ஜூன் 7-ஆம் தேதி நேற்று லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் தங்களது அணி பந்துவீசும் என்று அறிவித்தார். அதன்படி நேற்றைய முதல்நாள் ஆட்டத்தில் தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது முதல்நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 327 ரன்கள் என்கிற நல்ல நிலையில் உள்ளது.

Rohit

- Advertisement -

ஆஸ்திரேலிய அணி சார்பாக ஸ்டீவ் ஸ்மித் 95 ரன்களுடனும், டிராவிஸ் ஹெட் 146 ரன்களுடனும் ஆட்டம் இழக்காமல் களத்தில் உள்ளனர். இந்த போட்டியின் போது நான்காவது விக்கெட்டுக்கு கைகோர்த்த ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியாரது ஜோடி 251 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வலுவாக சென்று கொண்டிருக்கிறது.

முதல் நாள் ஆட்டத்திலேயே ஆஸ்திரேலிய அணி 300 ரன்களை கடந்துள்ளதால் இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தில் அவர்கள் மேலும் மிகப்பெரிய ரன் குவிப்பை நோக்கி செல்ல வாய்ப்புள்ளது. ஒருவேளை முதல் நாள் ஆட்டத்தைப் போன்றே இன்றும் அவர்கள் சிறப்பாக விளையாடிவிட்டால் ஆஸ்திரேலிய அணி நிச்சயம் 550 ரன்கள் முதல் 600 ரன்கள் வரை அடித்து விடும்.

Shami

அப்படி ஆஸ்திரேலிய அணி ஒருவேளை முதல் இன்னிங்சில் பெரிய ரன்களை குவித்து விட்டால் நிச்சயம் இந்த போட்டியில் இந்திய அணியின் சற்று பின்னடைவை சந்திக்கும். எனவே இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை தடுத்த நிறுத்த இந்திய அணி என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த சில தகவலை இங்கு காணலாம்.

- Advertisement -

அதன்படி போட்டி நடைபெறும் இரண்டாம் நாளான இன்று இந்திய அணி முதல் செஷனிலேயே செட் பேப்பர்களான ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோரை அடுத்தடுத்து வீழ்த்தினால் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்து நிச்சயம் ஆஸ்திரேலிய அணி 450 – 475 ரன்களுக்குள் சுருண்டு விட அதிக வாய்ப்புள்ளது. அதே வேளையில் இரண்டாம் நாளான இன்று இந்திய அணி தங்களது முதல் இன்னிங்சை ஆரம்பித்தால் நாளை மூன்றாம் நாளில் பெரிய ரன்குவிப்பை நோக்கி செல்லலாம்.

இதையும் படிங்க : WTC Final : அப்டினா இந்தியா தோல்வி கன்ஃபார்ம் – அடித்து நொறுக்கும் ஆஸி, வரலாறு படைத்த ஹெட் – ஸ்மித், சாதனை புள்ளிவிவரம் இதோ

எனவே இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி தடுத்து நிறுத்த வேண்டுமெனில் முதல் ஓரிரு மணி நேரத்திலேயே ஆஸ்திரேலியா அணியின் செட் பேட்ஸ்மேன்களான ஸ்டீவ் ஸ்மித் மற்றும் ட்ராவிஸ் ஹெட் ஆகியோரை வீழ்த்த வேண்டும். அந்த திட்டம் சரியாக பலித்தால் நிச்சயம் இந்திய அணி இந்த போட்டியில் ஆதிக்கம் செலுத்த வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement