- Advertisement -
இந்திய கிரிக்கெட்

நிறைய முன்னேறிட்டாரு.. இப்போதெல்லாம் அவருக்கு எதிரா பந்து வீசுவது கஷ்டம்.. ஜோஸ் ஹேசல்வுட் பேட்டி

ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி விளையாட உள்ள 2024 – 25 பார்டர் கவாஸ்கர் கோப்பை வரும் நவம்பர் மாதம் துவங்குகிறது. கடைசியாக ஆஸ்திரேலியாவில் விளையாடிய 2 தொடர்களையும் முதல் முறையாக வென்று இந்தியா சரித்திரம் படைத்தது. அந்த வரிசையில் இம்முறை ரோகித் சர்மா தலைமையில் களமிறங்கி ஆஸ்திரேலியாவில் ஹாட்ரிக் வெற்றியை பெறும் முனைப்புடன் இந்தியா களமிறங்க உள்ளது.

இந்தியாவின் கடந்த 2 வெற்றிகளில் புஜாரா, ரஹானே ஆகியோர் மிகவும் முக்கிய பங்காற்றினர். ஆனால் இம்முறை அவர்கள் சுமாரான ஃபார்ம் காரணமாக இந்திய அணியில் கழற்றி விடப்பட்டுள்ளனர். எனவே இம்முறை ஆஸ்திரேலியாவில் வெற்றி பெற நம்பிக்கை நட்சத்திரங்கள் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சிறப்பாக விளையாட வேண்டியது அவசியமாகிறது.

- Advertisement -

ஹேசல்வுட் பாராட்டு:

இந்நிலையில் முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் ரோகித் சர்மா மிடில் ஆர்டரில் விளையாடியதாக ஜோஸ் ஹேசல்வுட் கூறியுள்ளார். ஆனால் கடந்த தொடரில் துவக்க வீரராக விளையாடிய ரோஹித் சர்மா நிறைய முன்னேற்றத்தை சந்தித்து ஆஸ்திரேலியா பவுலர்களுக்கு சவாலை கொடுத்ததாகவும் ஹேசல்வுட் தெரிவித்துள்ளார். எனவே ரோஹித்துக்கு எதிராக பந்து வீசுவது கடினம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு.

“ஒருமுறை இந்தியா விளையாட வந்த போது ரோஹித் 5 அல்லது 6வது இடத்தில் களமிறங்கியது நினைவிருக்கிறது. கடைசியாக அவர் துவக்க வீரராக விளையாடினார். அப்போது புதிய பந்தை நிறைய எதிர்கொண்ட அவர் வேகப்பந்து வீச்சாளர்களை நம்ப முடியாத வகையில் விளையாடியதாக உணர்ந்தேன். எக்ஸ்ட்ரா பவுன்ஸ் மற்றும் நகர்வு அவருக்கு கவலையை ஏற்படுத்துவதாக தெரியவில்லை”

- Advertisement -

முன்னேறிய ரோஹித் சர்மா:

“அவரிடம் போதுமான டைமிங் இருக்கிறது. எனவே அவருக்கு எதிராக பந்து வீசுவது எனக்கு கொஞ்சம் கடினமாக இருப்பதாக உணர்கிறேன்” என்று கூறினார். அவர் கூறுவது போல ஆரம்பக் காலங்களில் மிடில் ஆர்டரில் தடுமாறிய ரோஹித் சர்மா 2013 முதல் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் துவக்க வீரராக களமிறங்கினார். அந்த வாய்ப்பில் எதிரணிகளை பந்தாடிய அவர் இந்தியாவின் மேட்ச் வின்னராக உருவெடுத்தார்.

இதையும் படிங்க: கான்பூர் டெஸ்ட்டில் 3 ஆவது சுழற்பந்து வீச்சாளராக அவரை சேருங்க – சஞ்சய் மஞ்சரேக்கர் வலியுறுத்தல்

அதைத்தொடர்ந்து 2019 முதல் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ரோகித் சர்மா துவக்க வீரராக விளையாடுகிறார். அந்த வாய்ப்பில் 2021 லண்டன் ஓவல் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக சதமடித்த அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் தம்மால் சாதிக்க முடியாது என்று விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்தார். அப்போதிலிருந்து வெளிநாடுகளிலும் ரோஹித் சர்மா நல்ல பேட்டிங்கை வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -