கான்பூர் டெஸ்ட்டில் 3 ஆவது சுழற்பந்து வீச்சாளராக அவரை சேருங்க – சஞ்சய் மஞ்சரேக்கர் வலியுறுத்தல்

Sanjay
- Advertisement -

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டி செப்டம்பர் 19-ஆம் தேதி துவங்கி நடைபெற்ற வேளையில் அந்த போட்டியில் அசத்தலானா ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 280 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியது.

3 ஆவது சுழற்பந்து வீச்சாளர் வேண்டும் :

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தற்போது இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இவ்வேளையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது நாளை செப்டம்பர் 27-ஆம் தேதி கான்பூர் நகரில் நடைபெற இருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் மூன்றாவது சுழற்பந்து வீச்சாளராக குல்தீப் யாதவை கொண்டுவர வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்ரேக்கர் தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

முதல் டெஸ்ட் போட்டியில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளம் என்பதனால் ஆகாஷ் தீப்பை விளையாட வைத்தது சரியான முடிவு தான். இவ்வேளையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூர் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த மைதானத்தில் சுழற்பந்து வீசும் குல்தீப் யாதவை கொண்டுவர வேண்டும்.

- Advertisement -

ஏனெனில் பிளாட்டான மைதானத்தில் கூட பந்தை திருப்பி விக்கெட்டுகளை வீழ்த்தும் திறமை உடைய அவரை இந்த போட்டியில் விளையாட வைத்தால் இந்திய அணிக்கு அது கூடுதல் சாதகத்தை தரும்.

இதையும் படிங்க : ஆளை மாத்திடுவாங்க.. இந்தியா டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஜெய்க்க விராட் கோலி இதை செய்யணும்.. ப்ராட் ஹோக்

எனவே என்னை பொறுத்தவரை இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களை தக்கவைத்து மூன்றாவதாக ஒரு சுழற்பந்து வீச்சாளராக குல்தீப் யாதவை இந்த போட்டியில் விளையாட வைக்க வேண்டும் என சஞ்சய் மஞ்சரேக்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement