சச்சினின் அந்த ஒரு சாதனையை மட்டும் விராட் கோலியால் உடைக்க முடியாது.. லாரா கருத்து

Brian Lara
- Advertisement -

நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி கடந்த 15 வருடங்களாக 3 வகையான கிரிக்கெட்டிலும் மிகச்சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகிறார். குறிப்பாக ஜாம்பவான் சச்சின் விடைபெற்ற 2013க்குப்பின் உலகின் அனைத்து டாப் அணிகளையும் மிகச் சிறப்பாக எதிர்கொண்டு வரும் அவர் 26,000 ரன்களையும் 80 சதங்களையும் அடித்து நவீன கிரிக்கெட்டின் நாயகனாக ஜொலித்து வருகிறார்.

மேலும் ஏற்கனவே ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 10,000 ரன்கள் குவித்தவர் போன்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை உடைத்துள்ள அவர் நடைபெற்று முடிந்த 2023 உலகக்கோப்பையில் 765 ரன்கள் விளாசி ஒரு தொடரில் அதிக ரன்கள் (2003இல் 673)குவித்த வீரர் என்ற மற்றுமொரு சாதனையை உடைத்தார். அது போக ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சினை (49) முந்தி 50 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற மாபெரும் உலக சாதனையும் விராட் கோலி படைத்துள்ளார்.

- Advertisement -

லாரா கணிப்பு:
அந்த வகையில் யாராலும் தொடமுடியாமல் இருந்த சச்சின் டெண்டுல்கரின் சாதனைகளை உடைத்த அவர் விரைவில் 100 சதங்கள் உலக சாதனையையும் உடைப்பார் என்று ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் உறுதியாக நம்ப துவங்கியுள்ளனர். இந்நிலையில் சச்சினின் 100 சதங்கள் சாதனையை உடைக்க வாய்ப்பிருந்தாலும் அதை விராட் கோலி சாதித்து காட்டுவது மிகவும் கடினம் என்று ஜாம்பவான் பிரைன் லாரா தெரிவித்துள்ளார்.

ஏனெனில் சில சமயங்களில் உங்களுடைய செயல்பாடுகள் நின்றாலும் வயது அதிகரிப்பது நிற்காது என்று தெரிவிக்கும் அவர் அடுத்த 4 வருடங்களில் தலா 5 சதங்கள் அடித்து சச்சினின் சாதனையை உடைப்பது கடினம் என்று கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “விராட் கோலி தற்போது 35 வயது நிரம்பியுள்ளார் அல்லவா. தற்போது 80 சதங்கள் அடித்துள்ள அவருக்கு இன்னும் 20 தேவைப்படுகிறது”

- Advertisement -

“ஒருவேளை ஒவ்வொரு வருடமும் 5 சதங்கள் அடித்தால் கூட சச்சின் சாதனை சமன் செய்வதற்கு அவருக்கு இன்னும் 4 வருடங்கள் தேவைப்படும். அப்போது அவர் 39 வயதை தொட்டு விடுவார் என்பதால் அதை உடைப்பது மிகவும் கடினமான வேலையாக இருக்கலாம். இருப்பினும் அதை யாராலும் உடைக்க முடியாது என்று சொல்ல முடியாது”

இதையும் படிங்க: அவங்க விராட் கோலி மீதான பொறாமையில் அப்படி சொல்றாங்க.. விமர்சனத்துக்கு லாரா பதிலடி

“சச்சினின் சாதனையை விராட் கோலி உடைப்பார் என்று சொல்பவர்கள் கிரிக்கெட்டின் லாஜிக்கை பார்க்காதவர்கள். ஏனெனில் 20 சதங்கள் என்பது இன்னும் நீண்ட தூரம் உள்ளது. அதை நிறைய வீரர்கள் தங்களுடைய வாழ்நாளில் கூட அடித்ததில்லை. எனவே விராட் கோலி அதை கண்டிப்பாக செய்வார் என்று நான் சொல்ல மாட்டேன். காரணம் உங்களுடைய வயது எப்போதும் எதற்காகவும் நிற்காது. எனவே விராட் கோலி நிறைய சாதனைகளை உடைத்தாலும் 100 சதங்கள் சாதனையை உடைப்பது கடினமாக இருக்கும்” என்று கூறினார்.

Advertisement