அவங்க விராட் கோலி மீதான பொறாமையில் அப்படி சொல்றாங்க.. விமர்சனத்துக்கு லாரா பதிலடி

Brian Lara
- Advertisement -

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நிறைவு பெற்ற ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் தொடர்ச்சியாக 10 வெற்றிகளை பெற்ற இந்தியா இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை சந்தித்தது கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சங்களை உடைத்தது. அதனால் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் மிகச் சிறப்பாக விளையாடியும் கோப்பையை வெல்ல முடியாததால் களத்திலேயே கண்கலங்கி நின்றார்கள்.

குறிப்பாக நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 765 ரன்களை குவித்து ஒரு உலகக் கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரராக சச்சின் டெண்டுல்கரின் சாதனையை உடைத்து முழு மூச்சுடன் வெற்றிக்கு போராடியும் கோப்பையை வெல்ல முடியாததால் ஏமாற்றத்தை சந்தித்தார். முன்னதாக இந்த தொடரில் விராட் கோலி தன்னுடைய சொந்த சாதனைகளுக்காக சுயநலத்துடன் விளையாடுவதாக சில முன்னாள் வீரர்கள் விமர்சித்தார்கள்.

- Advertisement -

லாரா பதிலடி:
குறிப்பாக 90 ரன்களை எட்டியதும் அணிக்காக தொடர்ந்து அதிரடியாக விளையாடாமல் தன்னுடைய சொந்த சாதனையை படைப்பதற்காக விராட் கோலி மெதுவாக சுயநலத்துடன் விளையாடியதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் முகமது ஹபீஸ் போன்றவர்கள் விமர்சித்தார்கள். இந்நிலையில் விராட் கோலி மீதான பொறாமை காரணமாகவே சிலர் அவரை சுயநலவாதி என்று விமர்சித்ததாக தெரிவிக்கும் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரைன் லாரா தம்முடைய கேரியரிலும் இது போன்ற விமர்சனங்களை சந்தித்ததாக கூறியுள்ளார்.

அத்துடன் சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை விராட் கோலி உடைப்பதற்கு வாழ்த்துவதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “அப்படி சொல்பவர்கள் அனைவரும் அவர் மீது பொறாமை கொண்டவர்கள். விராட் கோலி அடித்த ரன்களை கண்டு அவர்கள் பொறாமைப்படுகிறார்கள். இதை என்னுடைய கேரியரிலும் நான் சந்தித்துள்ளேன்”

- Advertisement -

“சச்சினின் 100 சதங்கள் சாதனையை விராட் கோலியால் மட்டுமே நெருங்க முடியும். அனைத்து போட்டிகளிலும் அவர் மிகச் சிறப்பாக தயாராகி தன்னுடைய முழு செயல்பாடுகளை கொடுக்கிறார். அதனால் நீங்கள் எப்படி அவருடைய ரசிகராக இல்லாமல் போக முடியும். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். சச்சின் டெண்டுல்கர் போல அவர் 100 சதங்கள் அடித்தால் நான் மகிழ்ச்சியடைவேன்”

இதையும் படிங்க: என்னது ரோஹித் பண்ணது தப்பா? அதை பத்தியே மட்டும் ஏன் பேசுறீங்க.. – கெவின் பீட்டர்சன் பதிலடி

“எசச்சின் னக்கு மிகவும் நெருக்கமான அன்பான நண்பர். அதே சமயம் ஏற்கனவே சொன்னது போல் நான் விராட் கோலியின் மிகப்பெரிய ரசிகன்” என்று கூறினார். முன்னதாக ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சினை முந்தி 50 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற மாபெரும் உலக சாதனையையும் படைத்த விராட் கோலி அடுத்ததாக தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement