என்னது ரோஹித் பண்ணது தப்பா? அதை பத்தியே மட்டும் ஏன் பேசுறீங்க.. – கெவின் பீட்டர்சன் பதிலடி

Pietersen-and-Rohit
- Advertisement -

இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதம் 5-ஆம் தேதி துவங்கிய ஐசிசி-யின் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது நவம்பர் 19-ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெற்ற மாபெரும் இறுதிப்போட்டியுடன் நிறைவு பெற்றது. அந்த இறுதிப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது. இதன் காரணமாக மீண்டும் ஒருமுறை இந்திய அணி ஐ.சி.சி கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பை இழந்தது.

லீக் சுற்று போட்டிகளின் முடிவில் எந்த ஒரு அணியிடமும் தோல்வியை சந்திக்காமல் அரையிறுதியிக்கு முன்னேறிய இந்திய அணி அரையிறுதியில் நியூசிலாந்து அணியை எளிதாக வீழ்த்தியதால் இறுதிப் போட்டியில் இந்திய அணியே வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் கடைசி போட்டியில் விளையாடிய இந்திய அணி 240 ரன்கள் மட்டுமே அடித்ததால் ஆஸ்திரேலிய அணி எளிதாக அதனை சேசிங் செய்து வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி பெற்ற தோல்விக்கு ரோகித் சர்மாவும் ஒரு காரணம் என விமர்சகர்கள் பலரும், முன்னாள் வீரர்கள் சிலரும் தங்களது விமர்சனத்தை முன்வைத்திருந்தனர்.

ஏனெனில் துவக்க வீரரான சுப்மன் கில் போட்டியின் ஆரம்பத்திலேயே 4 ரன்களில் ஆட்டமிழந்த வேளையில் சற்று நிதானித்து விளையாடாமல் தொடர்ச்சியாக அதிரடியை வெளிப்படுத்திய ரோஹித் மேக்ஸ்வெல் வீசிய ஓவரில் 2 பவுண்டரிகளை அடித்த வேளையில் அதே ஓவரில் மூன்றாவது பவுண்டரியையும் அடித்து விட வேண்டும் என்று ஆசைப்பட்டு தூக்கி அடித்து ஆட்டமிழந்தார் என்று அவர் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

- Advertisement -

ஆனால் இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக தற்போது இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான கெவின் பீட்டர்சன் கூறியுள்ள ஒரு கருத்தில் : ரோகித் சர்மா அடித்த ஷாட்டை பற்றி மட்டுமே ஏன் அனைவரும் பேச வேண்டும்? இந்த உலகக் கோப்பை தொடர் முழுவதுமே அவர் இந்திய அணிக்காக சிறப்பான துவக்கத்தை அளித்துள்ளார். அவர் கொடுக்கும் அதிரடியான துவக்கத்தினாலே இந்திய அணி பெரிய ரன் குவிப்பை நோக்கி சென்றது.

இதையும் படிங்க : மோசமான கெட்ட வார்த்தையால் திட்டுனாரு.. அதான் விராட் கோலி மதிக்கல.. கம்பீரை விளாசிய ஸ்ரீசாந்த்

அதேபோன்று தான் இறுதிப்போட்டியிலும் அதே பாணியை கடைப்பிடித்தார். அதில் தவறு ஒன்றும் இல்லை அதே போன்று ரோகித் சர்மா அடித்த அந்த ஷாட் பற்றி பேசுகிறீர்கள் ஆனால் டிராவிஸ் ஹெட் அதனை மிகவும் அற்புதமாக கேட்ச் பிடித்திருந்தார் நாம் அதனை பாராட்டுவோம். ரோஹித் மீது எந்த தவறும் இல்லை என கெவின் பீட்டர்சன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement