மோசமான கெட்ட வார்த்தையால் திட்டுனாரு.. அதான் விராட் கோலி மதிக்கல.. கம்பீரை விளாசிய ஸ்ரீசாந்த்

Sreesanth Gambhir 2
- Advertisement -

ஓய்வு பெற்ற நட்சத்திரம் முன்னாள் வீரர்கள் விளையாடும் லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் 2023 சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதில் டிசம்பர் 6ஆம் தேதி நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் பார்த்தீவ் பட்டேல் தலைமையிலான குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த கௌதம் கம்பீர் தலைமையிலான இந்தியா கேப்பிட்டல் அணி குவாலிபயர் 2 போட்டிக்கு தகுதி பெற்றது.

சூரத் நகரில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா கேப்பிட்டல்ஸ் கௌதம் கம்பீர் 51, கெவின் பீட்டர்சன் 26, பென் டங்க் 30, சிப்லி 35 ரன்கள் எடுத்த உதவியுடன் 224 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதை துரத்திய குஜராத் அணிக்கு நட்சத்திர வீரர் கிறிஸ் கெயில் அதிரடியாக 84 ரன்கள், கெவின் ஓ’ப்ராயன் 51 ரன்கள் எடுத்த போதிலும் ஜேக் காலிஸ் 11, ரிச்சர்ட் லெவி 17, பார்திவ் படேல் 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

களத்தில் சண்டை:
அதனால் 20 ஓவரில் 211/7 ரன்களுக்கு அந்த அணியை சுருட்டி வென்ற இந்தியா கேப்பிட்டல்ஸ் சார்பில் அதிகபட்சமாக ரஸ்டி தேரன் மற்றும் ஈஸ்வர் பாண்டே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். முன்னதாக அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கேப்பிட்டல்ஸ் அணிக்கு கௌதம் கம்பீர் ஆரம்பத்திலேயே ஸ்ரீசாந்த்க்கு எதிராக பவுண்டரி மற்றும் சிக்சர்களை அடித்து அதிரடியாக விளையாடினார்.

அப்போது அந்த இருவருக்கும் இடையே வாக்குவாதமும் சண்டையும் ஏற்பட்ட நிலையில் நடுவர்களும் சக வீரர்களும் உள்ளே புகுந்து தடுத்தார்கள். இந்நிலையில் அந்த சமயத்தில் மிகவும் மோசமான கெட்ட வார்த்தைகளால் கௌதம் கம்பீர் தம்மை திட்டியதாக போட்டியின் முடிவில் ஸ்ரீசாந்த் ஆதங்கத்துடன் தெரிவித்து பேசியது பின்வருமாறு. “எந்த காரணமும் இல்லாமல் சக வீரர்கள் மற்றும் அனைவரிடமும் சண்டை போடக்கூடிய கௌதம் கம்பீருடன் என்ன நடந்தது என்பதை பற்றி கொஞ்சம் தெளிவுபடுத்த விரும்புகிறேன்”

- Advertisement -

“சேவாக் உட்பட நிறைய சீனியர் வீரர்களே அவர் மீது மதிப்பை வைத்திருக்கவில்லை. அதுதான் இன்று நடந்தது. எந்த தூண்டுதலும் இல்லாமல் என்னை அழைத்துக் கொண்டே இருந்த அவர் சொல்லக்கூடாத ஒன்றை சொன்னார். அந்த சமயத்தில் என் மீது தவறு எதுவுமில்லை என்று நான் சொல்ல விரும்புகிறேன். கம்பீர் என்ன சொன்னார் என்பதை நீங்கள் விரைவில் தெரிந்து கொள்வீர்கள். அவர் சொன்ன வார்த்தைகள் ஏற்றுக்கொள்ள முடியாதது”

இதையும் படிங்க: 21 போட்டிகளில் 34 விக்கெட்.. அதற்குள் ரவி பிஷ்னாய் டி20 கிரிக்கெட்டில் நம்பர் 1 பவுலராக மாறியது எப்படி? – விவரம் இதோ

“உங்களுடைய சக வீரர்களை மதிக்கவில்லை என்றால் நீங்கள் மக்களின் பிரதிநிதியாக இருப்பதில் என்ன பயன்? விராட் கோலியிடம் இதைப் பற்றி கேட்டாலும் கம்பீரை பற்றி பேசாமல் வேறு எதையாவது பேசுவார். மேற்கொண்டு நான் எந்த விவரத்தையும் சொல்லவில்லை. அவருடைய வார்த்தைகளால் நானும் என்னுடைய குடும்பமும் மனதளவில் உடைந்துள்ளோம். நான் அவரை திட்டாத போதும் அவர் என்னை தொடர்ந்து மோசமான வார்த்தைகளால் பேசினார்” என்று கூறினார்.

Advertisement