21 போட்டிகளில் 34 விக்கெட்.. அதற்குள் ரவி பிஷ்னாய் டி20 கிரிக்கெட்டில் நம்பர் 1 பவுலராக மாறியது எப்படி? – விவரம் இதோ

Ravi-Bishnoi
- Advertisement -

சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது அண்மையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடியது. இந்த தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது நான்குக்கு ஒன்று (4-1) என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றி அசத்தியது.

இந்த தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக சுழற்பந்து வீச்சாளர்கள் பார்க்கப்படுகின்றனர். அதிலும் குறிப்பாக அக்சர் பட்டேல் மற்றும் ரவி பிஷ்னாய் ஆகியோரது பந்துவீச்சு இந்த தொடரில் மிகச் சிறப்பாக இருந்தது. ரவி பிஷ்னாய் இந்த தொடரில் ஐந்து ஆட்டங்களில் ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தி தொடர் நாயகன் விருதினையும் வென்று அசத்தியிருந்தார்.

- Advertisement -

ஆஸ்திரேலிய அணிக்கெதிரான இந்த டி20 முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களான ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டிருந்த வேளையில் தனக்கு கிடைத்த வாய்ப்பை அற்புதமாக பயன்படுத்திய ரவி பிஷ்னாய் இந்த தொடரில் மிகச் சிறப்பாக பந்துவீசி இனிவரும் தொடர்களிலும் தனது இடத்தை உறுதி செய்துள்ளார்.

இந்த தொடரில் அவர் விளையாடிய 5 போட்டிகளோடு சேர்த்து இதுவரை டி20 கிரிக்கெட்டில் 21 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 34 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ள வேளையில் அண்மையில் வெளியான சர்வதேச டி20 பவுலர்கள் தரவரிசை பட்டியலில் அவர் முதலிடத்திற்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்டது. இப்படி ஒரு தொடரிலேயே எப்படி அவர் உலகின் நம்பர் 1 பவுலராக மாறியுள்ளார்? என்ற கேள்வி அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது.

- Advertisement -

அதற்கான விளக்கத்தை தான் நாங்கள் இந்த பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். அந்த வகையில் இந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடருக்கு முன்னதாக 603 புள்ளிகளுடன் டி20 கிரிக்கெட்டில் 19-வது இடத்தை பிடித்திருந்த ரவி பிஷ்னாய் முதல் போட்டியின் முடிவில் மேலும் 11 புள்ளிகளை பெற்று 614 புள்ளிகளுடன் 18-வது இடத்திற்கு முன்னேறினார்.

இதையும் படிங்க : தனது தந்தையின் உடல்நிலை குறித்த தகவலை வெளியிட்ட தீபக் சாஹர் – தெ.ஆ தொடரில் விளையாடுவாரா?

அதன் பின்னர் இரண்டாவது போட்டியின் முடிவில் மேலும் 34 புள்ளிகளை பெற்ற அவர் 648 புள்ளிகளுடன் 11-வது இடத்திற்கு முன்னேறினார். அதன் பின்னர் மூன்றாவது போட்டியின் முடிவில் மேலும் 17 புள்ளிகளை பெற்ற அவர் தரவரிசை பட்டியலில் 665 புள்ளிகளுடன் 5-ஆவது இடத்திற்கு முன்னேறினார். பின்னர் நான்காவது போட்டியின் முடிவில் மேலும் 27 புள்ளிகளை பெற்ற அவர் 692 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு சென்றார். இறுதியாக ஐந்தாவது போட்டியின் முடிவில் மேலும் 7 புள்ளிகளை சேர்க்க 699 புள்ளிகளுடன் அவர் முதலிடத்தில் நீடிப்பதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement