அது மட்டும் கிடைச்சா போதும்.. இந்தியாவை செமி ஃபைனலில் நியூஸிலாந்து தோற்கடிக்கும்.. சைமன் டௌல் பேட்டி

Simon Doull
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 தொடரின் முதல் செமி ஃபைனல் நவம்பர் 15 ஆம் தேதி மதியம் 2 மணிக்கு மும்பை நகரில் நடைபெறுகிறது அதில் லீக் சுற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா மற்றும் 4வது இடம் பிடித்த கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

அதில் நியூசிலாந்து எப்போதுமே ஐசிசி தொடர்களில் இந்தியாவுக்கு எதிராக மிகச்சிறப்பாக செயல்பட்டு அதிக வெற்றிகளை பெற்றுள்ளது. 2019 செமி ஃபைனலில் மறக்க முடியாத தோல்வியை பரிசளித்த அந்த அணி நாக் அவுட் சுற்றில் இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் இந்தியாவை வீழ்த்தியுள்ளது. அதே உத்வேகத்துடன் இம்முறையும் வெற்றி காணும் முனைப்புடன் நியூசிலாந்து தயாராக இருக்கிறது.

- Advertisement -

வெற்றியின் சாவி:
மறுபுறம் சொந்த மண்ணில் இதுவரை இந்த உலகக் கோப்பையில் தோற்காத இந்தியா லீக் சுற்றில் 20 வருடங்கள் கழித்து ஐசிசி தொடரில் நியூசிலாந்தை வீழ்த்திய உத்வேகத்துடன் இப்போட்டியில் வெற்றிக்காக போராட களமிறங்குகிறது. இந்நிலையில் இந்த போட்டியில் டாஸ் அதிர்ஷ்டம் நியூசிலாந்துக்கு கிடைத்தால் முதலில் பேட்டிங் செய்து இந்தியாவை தோற்கடிக்க அதிக வாய்ப்புள்ளதாக முன்னாள் வீரர் சைமன் டௌல் தெரிவித்துள்ளார்.

ஏனெனில் இப்போட்டி நடைபெறும் வான்கடே கிரிக்கெட் மைதானம் முதல் பேட்டிங்க்கு சாதகமாக இருப்பதால் அந்த வாய்ப்பு கிடைத்தால் 300க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்து நியூசிலாந்து வெல்லும் என்று நம்பிக்கை தெரிவிக்கும் அவர் இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் பேசியது பின்வருமாறு. “நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்வதற்காக டாஸ் முக்கியமாகும். சொல்லப்போனால் டாஸ் வெல்வது இரு அணிகளுக்குமே முக்கியமாகும்”

- Advertisement -

“ஏனெனில் மும்பையில் நீங்கள் வெல்வதற்கு முதலில் பேட்டிங் செய்வது சிறந்த வழியாக இருக்கிறது. எனவே நியூசிலாந்தின் கண்ணோட்டத்தில் முதலில் பேட்டிங் செய்து 300க்கும் மேற்பட்ட ரன்களை இலக்காக நிர்ணயிக்க வேண்டும். குறிப்பாக பெரிய இலக்கை நிர்ணயித்தால் அவர்கள் பந்து வீச்சில் இந்தியாவுக்கு அழுத்தத்தை கொடுக்க முடியும். கடந்த 12 வருடங்களில் நாக் அவுட்டில் என்ன நடந்தது என்பதை எந்த இந்திய ரசிகர்களும் நினைக்க விரும்ப மாட்டார்கள்”

இதையும் படிங்க: அதோட இலக்கணத்தையே மாத்துனீங்க.. ஸ்பெஷல் ஐசிசி விருதை வென்ற சேவாக்கை பாராட்டிய கங்குலி

“ஆனாலும் இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ள அணியாக களமிறங்குகிறது. எனவே நியூசிலாந்து வெற்றிக்கு போராடுவதற்கான வழியை மட்டும் கண்டறிய வேண்டும். அவர்களால் அதை செய்ய முடியும்” என்று தெரிவித்தார். அவர் கூறுவது போல மும்பையில் 2023 உலகக் கோப்பையில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 372 ரன்களாகவும் 2வது இன்னிங்ஸில் 187 ரன்களாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement