அதோட இலக்கணத்தையே மாத்துனீங்க.. ஸ்பெஷல் ஐசிசி விருதை வென்ற சேவாக்கை பாராட்டிய கங்குலி

Sourav Ganguly
- Advertisement -

நட்சத்திர முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் இந்தியா கண்டெடுத்த அதிரடி வீரர்களில் முதன்மையானவராக போற்றப்படுகிறார். குறிப்பாக பெரும்பாலான போட்டிகளில் எதைப் பற்றியும் கவலைப்படாமல் முதல் பந்திலேயே பவுண்டரியை பறக்க விடுவதை வழக்கமாக வைத்திருந்த அவர் 99, 199, 299 ரன்களில் இருக்கும் போது மற்ற பேட்ஸ்மேன்களை போல் தடுமாறாமல் அசால்டாக சிக்சரை விளாசி சதத்தை தொடும் ஸ்டைலை வைத்திருந்தார்.

அதை விட டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அதிரடியாக விளையாடி அனைத்து ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்த அவர் சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் போன்ற யாராலும் முடியாத முச்சதத்தை 2 முறை அடித்த ஒரே இந்தியராக மாபெரும் சாதனை படைத்துள்ளார். அந்த வகையில் அதிரடி எனும் வார்த்தைக்கு இந்திய கிரிக்கெட்டில் உண்மையான இலக்கணத்தை காண்பித்த அவருக்கு “ஹால் ஆஃப் பேம்” எனும் உயரிய விருதை ஐசிசி கொடுத்து கௌரவித்துள்ளது

- Advertisement -

கங்குலி பாராட்டு:
கிரிக்கெட்டுக்கு பெருமை சேர்த்த ஜாம்பவான்களுக்கு வழங்கும் இந்த விருதை இம்முறை இந்தியாவின் மகளிர் ஜாம்பவான் வீராங்கனை டயானா எடுல்ஜி, வீரேந்திர சேவாக், இலங்கையின் அரவிந்தா டீ சில்வா ஆகியோருக்கு ஐசிசி கொடுத்து கௌரவித்துள்ளது. இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட் பேட்டிங்கின் இலக்கணத்தை அதிரடியாக விளையாடி மாற்றிய நீங்கள் சுனில் கவாஸ்கருக்கு பின் மகத்தான துவக்க வீரர் என்று சேவாக்கிற்கு முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி பாராட்ட தெரிவித்துள்ளார்.

சொல்லப்போனால் இளம் வீரராக இருந்த சேவாக்கிற்கு வாய்ப்பு கொடுத்து வளர்த்த கங்குலி தம்முடைய மாணவன் இன்று விருது வாங்கியதற்காக மகிழ்ச்சியுடன் ஐசிசி இணையத்தில் இது பற்றி பாராட்டி பேசியது பின்வருமாறு. “நீங்கள் விளையாடிய விதமே உங்களை ஸ்பெஷல் வீரராக மாற்றியுள்ளது. குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் டாப் ஆர்டரில் விளையாடுவதற்கான இலக்கணத்தை நீங்கள் மாற்றினீர்கள். நீங்கள் விளையாடிய காலமும் வித்தியாசமாக இருந்தது”

- Advertisement -

“2000ஆம் ஆண்டின் ஆரம்ப காலங்களில் டெஸ்ட் போட்டிகள் மிகவும் தரமானதாக உலகம் முழுவதிலும் தரமான பவுலர்கள் நிறைந்ததாக இருந்தது. ஆனால் நீங்கள் டெஸ்ட் பேட்டிங்கின் கலையை முற்றிலுமாக மாற்றினீர்கள். இலங்கைக்கு எதிராக 2009இல் நீங்கள் அடித்த 293 இன்னிங்ஸ் அதற்கு ஒரு எடுத்துக்காட்டாகும். குறிப்பாக முத்தையா முரளிதரன் போன்ற பவுலர்களுக்கு எதிராக ஒரே நாளில் அவ்வளவு ரன்கள் அடித்தது அபாரமானதாகும்”

இதையும் படிங்க: அது இப்போ இருந்திருந்தா சச்சின் 200 சதங்கள் அடிச்சுருப்பாரு.. ஜெயசூர்யா, வக்கார் யூனிஸ் ஆதங்கம்

“மேலும் முல்தானில் கடினமான சூழ்நிலைகளில் நீங்கள் அடித்த முச்சதம் எனக்கு மிகவும் பிடித்தது. குறிப்பாக 200, 300 ரன்களை சிக்ஸர்களால் அடித்து தொடுவேன் என்று நீங்கள் எங்களிடம் ஆரம்பத்திலேயே சொன்னதை செய்து காட்டினீர்கள். இந்த விருதுக்கு சரியானவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சுனில். கவாஸ்கருக்கு பின் நீங்கள் மிகச்சிறந்த ஓப்பனிங் பேட்ஸ்மேன்” என்று பாராட்டினார்.

Advertisement