அது இப்போ இருந்திருந்தா சச்சின் 200 சதங்கள் அடிச்சுருப்பாரு.. ஜெயசூர்யா, வக்கார் யூனிஸ் ஆதங்கம்

Sanath Jayasuriya
Advertisement

கிரிக்கெட்டில் தற்போது ரசிகர்களை மகிழ்விப்பதற்காக பல்வேறு விதிமுறைகள் பேட்டிங்க்கு சாதகமாக மாற்றப்பட்டுள்ளன. அதாவது எவ்விதமான போட்டியாக இருந்தாலும் இதில் ஒரு பவுலர் விக்கெட்டை எடுப்பதை விட பேட்ஸ்மேன் சிக்ஸர் அடிப்பதையே பெரும்பாலான ரசிகர்கள் விரும்புவார்கள் என்பதால் இப்போது பல்வேறு அம்சங்கள் பேட்டிங்க்கு சாதகமாக மாற்றப்பட்டுள்ளது.

எடுத்துக்காட்டாக ஒருநாள் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் 2 புதிய பந்துகள் பயன்படுத்தப்படுவது, உள்வட்டத்திற்கு வெளியே 5 ஃபீல்டர்கள் மற்றும் அனுமதிக்கப்படுவது, பவுலர்கள் நோ பால் போட்டால் ஃப்ரீ ஹிட், ஒரு ஓவருக்கு 2 பவுன்சர்கள் மேல் வீசக்கூடாது போன்ற அடிப்படை விதிமுறைகளை பேட்டிங்க்கு சாதகமாக அமைக்கப்பட்டுள்ளது. இது போக முன்பெல்லாம் மைதானத்தின் சுற்றுச்சுவர் தான் பவுண்டரிகளாக இருக்கும்.

- Advertisement -

ஜெயசூர்யா அதிருப்தி:
ஆனால் இப்போதெல்லாம் ரசிகர்களை மகிழ்விப்பதற்காக ஐசிசியே 55 – 75 மீட்டர் என்ற பெரிய எட்ஜ் கொடுத்தாலே பந்து சிக்ஸர் பறக்கும் அளவுக்கு பவுண்டரிகளின் அளவை குறைத்துள்ளது. இது போக நடுவர்கள் தவறான தீர்ப்பு வழங்கினால் அதிலிருந்து தப்புவதற்காக டிஆர்எஸ் போன்ற பல்வேறு விதிமுறைகள் வந்து விட்டதால் ஒரு காலத்தில் 50 ஓவர்களில் 250 ரன்கள் அடிப்பதற்கே திண்டாடிய பேட்ஸ்மேன்கள் தற்போது 400 – 450 ரன்களை அடித்து நொறுக்கி சாதனைகளை படைத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஒருநாள் போட்டிகளுக்கான விதிமுறை பேட்ஸ்மேன்களுக்கு அதிக சாதகமாக இருப்பதால் அதில் ஐசிசி மாற்றம் செய்ய வேண்டும் என்று முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் வக்கார் யூனிஸ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “ஒருநாள் போட்டிகள் அதிகமாக பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கிறது. குறிப்பாக போட்டி துவங்கும் போது 2 புதிய பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன”

- Advertisement -

“ஆனால் அதில் ஒன்றை 30 ஓவருக்கு பின் வெளியே எடுத்து விட்டு மற்றொன்றில் மட்டுமே போட்டி நடைபெறுகிறது. இறுதியில் அந்த பந்து வெறும் 35 ஓவர்கள் மட்டுமே பழையதாக இருக்கிறது. அதனால் இறுதியில் மட்டும் லேசான ரிவர்ஸ் ஸ்விங்கை மட்டுமே பார்க்க முடிகிறது. எனவே ரிவர்ஸ் ஸ்விங் எனும் கலையை காப்பாற்றுவது பற்றி அனைவரும் கருத்து சொல்லுங்கள்” என்று புகைப்படத்துடன் ஐசிசியை டேக் செய்து பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: லீக் போட்டியிலே செய்ஞ்ச தப்பை.. அரையிறுதியிலும் பண்ணா ஆட்டம் க்ளோஸ் – இந்திய அணி கவனிக்க வேண்டிய விடயம்

அதை பார்த்த முன்னாள் இலங்கை ஜாம்பவான் வீரர் சனாத் ஜெயசூர்யா தற்போதுள்ள விதிமுறைகள் இருந்திருந்தால் சச்சின் 200 சதங்களும் இருமடங்கு ரன்களும் அடித்திருப்பார் என்று பதிலளித்துள்ளது பின்வருமாறு. “வக்கார் யூனிஸ் கருத்தை ஏற்கிறேன். சில மாற்றங்கள் தேவை. ஒருவேளை தற்போதைய பவர் பிளே விதிமுறைகளுடன் 2 புதிய பந்துகள் எங்களுடைய சகாப்தத்தில் இருந்திருந்தால் சச்சின் டெண்டுல்கர் அடித்த ரன்களும் சதங்களும் இரு மடங்காக இருந்திருக்கும்” என்று கூறியுள்ளார்.

Advertisement