லீக் போட்டியிலே செய்ஞ்ச தப்பை.. அரையிறுதியிலும் பண்ணா ஆட்டம் க்ளோஸ் – இந்திய அணி கவனிக்க வேண்டிய விடயம்

IND-vs-NZ
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான நடப்பு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியானது இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு செல்லும் என்பதால் இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் இடையே கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோன்று 13-ஆவது முறையாக நடைபெறும் இந்த ஐ.சி.சி 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்று மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற வேண்டுமெனில் இன்றைய அரையிறுதியில் இந்திய அணி வெற்றி பெற்றே ஆக வேண்டும். இல்லையெனில் இந்த போட்டியுடன் வெளியேற வேண்டியதாக இருக்கும்.

- Advertisement -

இதனால் இந்த அரையிறுதி ஆட்டமானது இந்திய அணிக்கு மிக முக்கியமான போட்டியாக மாறியுள்ளது. இந்நிலையில் லீக் போட்டியில் செய்த தவறுகளை போன்றே மீண்டும் இந்த அரையிறுதி போட்டியில் செய்ய வேண்டாம் என்றும் அந்த தவறுகளை எல்லாம் சரி செய்து கொள்ளுங்கள் என்று ரசிகர்களும் ஒரு சில நிகழ்வுகளை சுட்டிக்காட்டி உள்ளனர்.

அந்த வகையில் இந்த உலகக்கோப்பை தொடரின் 21-வது லீக் ஆட்டத்தில் விளையாடிய நியூசிலாந்து அணி இந்திய அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்து 273 ரன்களை குவித்தது. இருந்தாலும் அந்த போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியை சேசிங் செய்து வீழ்த்தி இருப்பினும் பீல்டிங்கின் போது அந்த போட்டியில் இந்திய வீரர்கள் பல்வேறு தவறுகளை செய்திருந்தனர்.

- Advertisement -

குறிப்பாக அந்த போட்டியில் இந்திய அணிக்கு எதிராக டேரல் மிட்சல் 130 ரன்கள் குவித்தார். ஆனால் அவர் 60 ரன்களில் இருந்தபோதே ஒரு எளிதான கேட்சை கே.எல் ராகுல் தவறவிட்டார். அதேபோன்று பும்ராவும் அவருக்கு ஒரு கேட்சை தவறவிட்டிருந்தார். அதன் காரணமாகவே அவர் பெரிய ரன் குவிப்புக்கு சென்றார். அதேபோன்று முகமது ஷமி ஓவரில் ரச்சின் ரவீந்திரா கொடுத்த கேட்சை ரவீந்திர ஜடேஜா கோட்டை விட்டார். மேலும் அந்த போட்டி முழுவதுமே அனைவரது பீல்டிங்கும் சற்று மந்தமாகவே இருந்தது.

இதையும் படிங்க : ஆஸி – தெ.ஆ செமி ஃபைனலில் வெல்லப்போவது யார்? வரலாற்று புள்ளிவிவரம் சொல்வது என்ன.. விரிவான அலசல்

இதுபோன்ற பீல்டிங் குறைபாடுகளை இன்றைய அரையிறுதி போட்டியில் இந்திய அணி சரி செய்துகொள்ள வேண்டும். அப்படி இல்லையென்றால் எதிரணிக்கும் வாய்ப்புகள் அதிகமாகும் என்று ரசிகர்கள் இந்த குறிப்பிட்ட இடங்களை சுட்டி காட்டியுள்ளனர். எது எப்படி இருப்பினும் இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement