ஆஸி – தெ.ஆ செமி ஃபைனலில் வெல்லப்போவது யார்? வரலாற்று புள்ளிவிவரம் சொல்வது என்ன.. விரிவான அலசல்

- Advertisement -

இந்தியாவில் உலக சாம்பியனை தீர்மானிப்பதற்காக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நவம்பர் 16ஆம் தேதி மதியம் 2 மணிக்கு கொல்கத்தாவில் நடைபெறும் 2வது செமி ஃபைனலில் புள்ளிப்பட்டியலில் 2, 3வது இடங்களைப் பிடித்த தென்னாபிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இதில் தென்னாப்பிரிக்கா ஆரம்பத்திலிருந்தே நெதர்லாந்து மற்றும் இந்தியாவுக்கு எதிரான சந்தித்த தோல்விகளை தவிர்த்து அதிரடியாக விளையாடும் வலுவான அணியாக இருக்கிறது.

அந்த அணியை பொறுத்த வரை பேட்டிங்கில் கேப்டன் பவுமா மட்டுமே பின்னடைவை ஏற்படுத்துபவராக இருக்கிறார். மற்றபடி டீ காக், ஐடன் மார்க்ரம், வேன் டெர் டுஷன் ஆகியோர் டாப் ஆர்டரில் எதிரணி பவுலர்களை பந்தாடும் திறமையை கொண்டுள்ளனர். அவர்களை விட மிடில் ஆர்டரில் ஹென்றிச் கிளாசின், டேவிட் மில்லர் ஆகியோர் அடித்து நொறுக்கி வேகமாக ரன்களை எடுத்து வரும் நிலையில் மார்கோ யான்சென் இந்த உலகக்கோப்பையில் நல்ல வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டராக வெற்றிகளில் பங்காற்றி வருகிறார்.

- Advertisement -

வெல்லப்போவது யார்:
அதே போல தப்ரிஸ் சம்சி, கேசவ் மகாராஜ் ஆகியோர் சுழலில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு கண்டிப்பாக மிகப்பெரிய சவாலை கொடுப்பார்கள். இவர்களுடன் ரபாடா, ஜெரால்ட் கோட்ஸி, லுங்கி நிகிடி, லிசார்ட் வில்லியம்ஸ் ஆகியோர் தரமான வேகப்பந்து வீச்சாளர்களாக இருக்கிறார்கள். மறுபுறம் ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர் – டிராவிஸ் ஹெட் ஆகியோர் ஆரம்பத்திலேயே அதிரடியாக விளையாடக்கூடிய தரமும் அனுபவமும் கொண்டுள்ள நிலையில் ஆல் ரவுண்டர் மிட்சேல் மார்ஷ் மீண்டும் இணைந்துள்ளது பேட்டிங், பவுலிங் துறையை வலுப்படுத்துகிறது.

அவர்களைத் தொடர்ந்து மிடில் ஆர்டரில் ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஸ்ஷேன் ஆகியோர் நங்கூரமாக விளையாடக்கூடிய கிளாஸ் நிறைந்தவர்களாக இருக்கும் நிலையில் விக்கெட் கீப்பர் ஜோஸ் இங்லிஷ் அல்லது அலெக்ஸ் கேரி ஆகிய இருவருமே சுமாரான ஃபார்மில் இருப்பது பின்னடைவாகும். இருப்பினும் கிளன் மேக்ஸ்வெல் பேட்டிங், ஃபீல்டிங், பவுலிங் துறையில் அசத்தும் தன்மை கொண்டிருப்பதுடன் ஃபினிஷராகவும் செயல்படும் திறமையை கொண்டுள்ளது ஆஸ்திரேலியாவுக்கு மிகப்பெரிய பலமாகும்.

- Advertisement -

அதே போல ஆடம் ஜாம்பா இந்திய மைதானங்களில் எப்போதுமே அபாரமாக செயல்பட்டு வரும் நிலையில் கேப்டன் கமின்ஸ், ஜோஸ் ஹேசல்வுட், மிட்சேல் ஸ்டார்க் ஆகியோர் தென்னாப்பிரிக்க கூட்டணியை விட அனுபவமிக்க வேகப்பந்து வீச்சு கூட்டணியாக ஆஸ்திரேலியாவுக்கு வலுசேர்க்கின்றனர். மொத்தத்தில் இரு அணிகளுமே வெற்றியைப் பெறும் அளவுக்கு சமமான திறமை கொண்டுள்ளனர். ஆனால் இதில் தென்னாப்பிரிக்காவை விட அழுத்தமான நாக் அவுட் போட்டிகளில் சொதப்பாமல் வெற்றி காண்பதில் ஆஸ்திரேலியா கில்லாடியாக இருக்கிறது. எடுத்துக்காட்டாக ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 91/7 என சரிந்தும் வெல்லும் அளவுக்கு மன உறுதியைக் கொண்ட ஆஸ்திரேலியாவுக்கே இம்முறையும் சற்று அதிக வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க: 2011 மாதிரி அது கொஞ்சம் தேவை.. அதை பத்தி கவலைப்படாம ஆடுங்க.. இந்திய அணியை வாழ்த்திய சேவாக்

வரலாற்று புள்ளிவிவரம்:
ஒருநாள் கிரிக்கெட்டில் தென்னாபிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இதுவரை 109 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் தென்னாபிரிக்கா 55 ஆஸ்திரேலியா 50 வெற்றிகளை பெற்றுள்ளது. 3 போட்டி சமன் 1 போட்டி மழையால் கைவிடப்பட்டது. உலகக்கோப்பை வரலாற்றில் இவ்விரு அணிகள் மோதிய 7 போட்டிகளில் இரு அணிகளும் தலா 3 வெற்றிகளை பெற்றுள்ளன. 1999 செமி ஃபைனல் சமனில் முடிந்து ஆஸ்திரேலியா வென்றதை யாராலும் மறக்க முடியாது.

Advertisement