TNPL 2023 : டிஎன்பிஎல் தொடரில் கவனிக்க வேண்டிய டாப் 7 தரமான தமிழக வீரர்களின் பட்டியல் – எந்த சேனலில் பார்க்கலாம்

- Advertisement -

தமிழகத்தில் நிறைந்திருக்கும் தரமான கிரிக்கெட் வீரர்களை அடையாளப்படுத்தும் தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 தொடரின் 2023 சீசன் ஜூன் 12ஆம் தேதி கோலாகலமாக துவங்குகிறது. கடந்த 2016இல் துவங்கப்பட்ட இந்த தொடரில் இம்முறை நடைபெறும் 7வது சீசனில் சேப்பாக், திருச்சி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, சேலம், நெல்லை, மதுரை உள்ளிட்ட 8 அணிகள் களமிறங்குகின்றன. அதில் முதலாவதாக ஒவ்வொரு அணியும் மற்றொரு அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும் என்ற அடிப்படையில் லீக் சுற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

TNPL-Final

- Advertisement -

அதில் வெற்றி பெறும் 2 அணிகள் ஜூலை 12ஆம் தேதி நடைபெறும் மாபெரும் இறுதி போட்டியில் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்த உள்ளன. இந்த போட்டிகள் அனைத்தும் கோவையில் இருக்கும் எஸ்என்ஆர் காலேஜ், சேலத்தில் இருக்கும் சேலம் பவுண்டேஷன், திண்டுக்கல்லில் இருக்கும் என்பிஆர் காலேஜ், நெல்லையில் இருக்கும் இந்தியா சிமெண்ட் கம்பெனி மைதானங்களில் நடைபெற உள்ளது. இந்த தொடரை ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் தொலைக்காட்சி மற்றும் ஃபேன் கோட் மொபைல் ஆப் வாயிலாக பார்க்கலாம். இந்த தொடரில் அசத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் டாப் வீரர்களை பற்றி பார்ப்போம்:

1. சாய் சுதர்சன்: ஐபிஎல் 2023 ஃபைனலில் 96 ரன்களை குஜராத்துக்காக அடித்து தோனி தலைமையிலான சென்னைக்கு சவாலை கொடுத்த இவர் அந்த அணியில் கொடுக்கப்படும் சம்பளத்தை விட (20 லட்சம்) இந்தத் தொடரில் கோவை அணிக்காக அதிக தொகைக்கு (21.6 லட்சம்) விளையாடி வருகிறார்.

இதுவரை டிஎன்பிஎல் தொடரில் 694 ரன்களி 57.83 என்ற சராசரியில் எடுத்துள்ள அவர் தற்போது ஐபிஎல் ஃபைனலில் விளையாடி சச்சின் போன்ற ஜாம்பவான்களின் பாராட்டுகளை பெற்று முன்பை விட தன்னம்பிக்கையுடன் களமிறங்குவதால் எதிரணிகளை பந்தாடுவார் என்று நம்பலாம்.

- Advertisement -

2. வருண் சக்கரவர்த்தி: தமிழகத்தின் நட்சத்திர ஸ்பின்னராக வலம் வரும் இவர் ஐபிஎல் 2023 தொடரில் கொல்கத்தா அணிக்காக 20 விக்கெட்டுகளை 8.15 என்ற சிறப்பான எக்கனாமியில் எடுத்தார்.

Varun-Chakaravarthy

மேலும் இந்த டிஎன்பிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவுக்காக விளையாடும் அளவுக்கு உயர்ந்த அவர் இம்முறை திண்டுக்கல் அணிக்காக விளையாடி சுழலில் மாயாஜாலம் நிகழ்த்தி எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடிப்பார் என்று நம்பலாம்.

- Advertisement -

3. வாஷிங்டன் சுந்தர்: சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டரான இவரும் இந்தியாவுக்காக காபா போன்ற சில வெற்றிகளில் முக்கிய பங்காற்றியுள்ள நிலையில் காயத்தால் 2023 ஐபிஎல் தொடரில் பாதியிலேயே வெளியேறினார்.

sundar 1

இருப்பினும் தற்போது குணமடைந்துள்ள அவர் 599 ரன்களையும் 26 விக்கெட்களையும் எடுத்து எப்போதுமே சிறப்பாக செயல்பட்டு வரும் டிஎன்பிஎல் தொடரில் இம்முறை மீண்டும் மதுரை அணிக்காக விளையாட உள்ளார். இதில் சிறப்பாக செயல்பட்டு அவர் இந்திய அணிக்குள் மீண்டும் நுழைவதற்கு போராடுவார் என்று நம்பலாம்.

- Advertisement -

4. கணேசன் பெரியசாமி: லசித் மலிங்கா போல ஸ்லிங்கா ஆக்சனுடன் ஒற்றைக்கண் பார்வையிலேயே தெறிக்க விடும் திறமை கொண்ட இவர் பெரும்பாலும் பவர் பிளே மற்றும் டெத் ஓவர்களில் பந்து வீசியும் 6.5 என்ற எக்கனாமியை எப்போதும் தாண்டியதில்லை. அந்த வகையில் டிஎன்பிஎல் தொடரில் ஏற்கனவே ரசிகர்களிடம் புகழ்பெற்ற இவர் இம்முறையும் திருப்பூர் அணிக்காக அசத்துவதற்கு தயாராகியுள்ளார்.

Vijay Shankar

5. விஜய் சங்கர்: இந்தியாவுக்காக 2019 உலகக்கோப்பையில் விளையாடிய ஆல் ரவுண்டரான இவர் 2023 ஐபிஎல் தொடரில் 301 ரன்களை 160.11 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்து வாங்கி அனைவரது பாராட்டுகளைப் பெற்றார். எனவே தற்போது நல்ல ஃபார்மில் இருக்கும் இவர் இந்தத் தொடரில் திருப்பூர் அணிக்காக அதிரடியாக விளையாட உள்ளார்.

6. சஞ்சய் யதாவ்: கடந்த டிஎன்பிஎல் தொடரில் சதமடித்து 452 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருது வென்ற இவர் இம்முறையும் அதிரடி தொடக்க வீரராக ரசிகர்களுக்கு விருந்து படைத்து தனது நெல்லை அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுப்பார் என்று உறுதியாக நம்பலாம்.

Nattu

7. நடராஜன்: டிஎன்பிஎல் தொடரில் அபாரமாக செயல்பட்டு இந்தியாவுக்காக 3 விதமான கிரிக்கெட்டிலும் விளையாடி காபா வெற்றியில் பங்காற்றி தமிழகத்திற்கு பெருமை சேர்த்த இந்த சின்னப்பம்பட்டி எக்ஸ்பிரஸ் மீண்டும் இம்முறை திருச்சி அணிக்காக விளையாட உள்ளார்.

இதையும் படிங்க: 2011 உ.கோ வெற்றியின் மொத்த பராட்டையும் பணத்துக்காக அவங்க தான் தோனிக்கு கொடுத்துட்டாங்க – கம்பீர் பரபரப்பு குற்றசாட்டு

குறிப்பாக காயத்தால் இந்திய அணியிலிருந்து வெளியேறிய அவர் இதில் சிறப்பாக செயல்பட்டு மீண்டும் நிலையான இடத்தைப் பிடிக்கப் போராட உள்ளார்.

Advertisement