2011 உ.கோ வெற்றியின் மொத்த பராட்டையும் பணத்துக்காக அவங்க தான் தோனிக்கு கொடுத்துட்டாங்க – கம்பீர் பரபரப்பு குற்றசாட்டு

Gambhir
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்தின் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை மாபெரும் இறுதிப் போட்டியில் 209 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்த இந்தியா மீண்டும் வெறும் கையுடன் நாடு திரும்பியது. இத்தனைக்கும் ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் அணியாக இருந்தும் அஸ்வின் போன்ற சரியான வீரர்களை தேர்வு செய்யாமல் டாஸ் அதிர்ஷ்டத்தை பயன்படுத்தாமல் பேட்டிங், பவுலிங் ஆகிய துறைகளில் நட்சத்திர வீரர்கள் சொதப்பலாக செயல்பட்டது தோல்வியை கொடுத்தது ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. அதனால் 2013க்குப்பின் தொடர்ந்து 10வது வருடமாக ஐசிசி கோப்பையை வெல்ல தவறிய இந்தியாவின் கனவு மீண்டும் உடைந்தது.

- Advertisement -

அதன் காரணமாக 2014 டி20 உலக கோப்பை தவிர்த்து 2007 டி20 உலகக் கோப்பை, 2011 உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் ட்ராபி ஆகிய 4 ஃபைனல்களில் 3 ஐசிசி கோப்பையை வென்று கொடுத்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்த முன்னாள் கேப்டன் தோனியை சமூக வலைதளங்களில் இந்திய ரசிகர்கள் நினைவு கூர்ந்து பாராட்டி வருகின்றனர். ஏனெனில் மறுபுறம் கங்குலி முதல் ரோஹித் சர்மா வரை இதர இந்திய கேப்டன்கள் தலைமையில் 1983ஆம் ஆண்டு மட்டுமே கபில் தேவ் தலைமையில் இந்தியா கோப்பையை வென்றது.

பாராட்டை வாங்கிட்டாரு:
இந்நிலையில் 2011 உலகக் கோப்பையை யுவராஜ் சிங் மற்றும் தாம் உட்பட 11 பேரும் சேர்ந்து வென்ற நிலையில் கேப்டன் தோனி மட்டும் வென்றதைப் போன்ற பிம்பத்தை ஒளிபரப்பாளர்களும் மக்கள் தொடர்பு ஊடகங்களும் பணத்துக்காக உருவாக்கி விட்டதாக முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் விமர்சித்துள்ளார். கடந்த 10 வருடங்களில் இது பற்றி பலமுறை பல்வேறு கோணங்களில் விமர்சித்த அவர் தற்போது புதிதாக சமீபத்திய தொலைக்காட்சி நிகழ்ச்சியில் விமர்சித்து பேசியது பின்வருமாறு.

worldcup

“யுவராஜ் எப்போதுமே நான் உலகக் கோப்பையை வென்று கொடுத்ததாக சொல்வார். ஆனால் நான் யுவராஜ் சிங் தான் 2007 மற்றும் 2011 உலகக் கோப்பைகளில் நம்மை ஃபைனலுக்கு அழைத்துச் சென்றதாக நம்புகிறேன். அவர் தான் அந்த 2 உலகக் கோப்பைகளிலும் தொடர் நாயகன் என்று நினைக்கிறேன். அதைப் பற்றி எனக்கு உறுதியாக தெரியாது (2007இல் ஷாஹித் அப்ரிடி தொடர் நாயகன், 2011இல் யுவராஜ் தொடர் நாயகன்). ஆனால் துரதிஷ்டவசமாக 2007 மற்றும் 11 உலகக் கோப்பைகளை பற்றி நாம் பேசும் போது யுவராஜ் சிங் பெயரை எடுத்துக் கொள்வதில்லை”

- Advertisement -

“ஏன் அப்படி நடக்கிறது? அதற்கான காரணம் என்னவெனில் மார்க்கெட்டிங் மற்றும் மக்கள் தொடர்பு ஊடகங்கள் சிலரை (தோனி) பெரியவராகவும் மற்ற அனைவரையும் சிறியவராகவும் காட்டி விட்டார்கள். இங்கே யாருமே திறமை குறைந்தவர்கள் கிடையாது. மாறாக மக்கள் தொடர்பு மற்றும் மார்க்கெட்டிங் ஊடகங்கள் தான் அவ்வாறு செய்து விட்டன. எனவே 2007 மற்றும் 2011 உலக கோப்பைகளை யாரும் தனியாளாக வென்று விடவில்லை மொத்த அணியாக சேர்ந்து வென்றோம். ஏனெனில் தனி நபராக யாரும் ஐசிசி தொடர்களை வெல்ல முடியாது”

Dhoni world cup

“அந்த நிலைமை இருந்தால் இந்நேரம் இந்தியா 5 முதல் 10 உலக கோப்பைகளை வென்றிருக்கும். நிறைய பேர் இங்கே உண்மையை பேசுவதில்லை. ஆனால் நான் உண்மையை சொல்கிறேன். ஏனெனில் இது அனைவருக்கும் தெரிய வேண்டும். அதாவது நமது நாடு ஒரு அணிக்காக வெறியுடன் ஆதரவு கொடுக்கும் நாடு அல்ல. மாறாக தனிநபர் வெற்றியை வெறியுடன் கொண்டாடும் நாடாகும். இங்கே அணியை விட தனிநபரை பெரிதாக நினைக்கிறோம். ஆனால் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் தனிநபரை விட அணியையே பெரிதாக நினைக்கின்றனர்”

- Advertisement -

“அதனாலேயே நம்மால் நீண்ட நாட்களாக ஐசிசி தொடர்களை வெல்ல முடியவில்லை. அதாவது இங்கே நாம் அணியின் வெற்றியை கொண்டாடாமல் தனிநபரின் வெற்றியை கொண்டாடுகிறோம்” என்று கூறினார். இருப்பினும் தோனி எப்போதுமே 2011 உலக கோப்பையை தாம் மட்டும் தான் வென்றேன் என சொன்னதில்லை.

இதையும் படிங்க:TNPL : டி.என்.பி.எல் தொடர் நடைபெறுவது எதற்காக தெரியுமா? இதனால் தமிழக வீரர்களுக்கு என்ன பயன்? – முழு வரலாறு இதோ

அத்துடன் எப்போதுமே கோப்பையை மற்ற வீரர்களின் கையில் கொடுத்து கடைசியில் நிற்கும் வழக்கத்தை கொண்ட அவர் தோல்வியை சந்தித்தால் செய்தியாளர்களுக்கு முன்பே அதை ஏற்பதை வழக்கமாகக் கொண்ட மனம் கொண்டவராக இருக்கிறார். இருப்பினும் சில முன்னாள் வீரர்கள் தொடர்ந்து அவரை விமர்சித்து வருவதை புரிந்து கொள்ள முடியவில்லை.

Advertisement