TNPL : டி.என்.பி.எல் தொடர் நடைபெறுவது எதற்காக தெரியுமா? இதனால் தமிழக வீரர்களுக்கு என்ன பயன்? – முழு வரலாறு இதோ

TNPL-Final
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரானது நடைபெற்று வருகிறது. அதே போன்று தமிழக வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் கடந்த 2016-ஆம் ஆண்டு டிஎன்பிஎல் என்கிற தொடரை அறிமுகப்படுத்தியது. இந்த தொடரானது கடந்த 2016-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த தொடரின் முதல் சீசனை இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனி துவங்கி வைத்தார். அந்தத் தொடரில் மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்று விளையாடின. கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை 6 சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இடையில் 2020 ஆம் ஆண்டு சீசன் மட்டும் கொரோனா காரணமாக நடத்த முடியாமல் போனது.

- Advertisement -

இப்படி டிஎன்பிஎல் நடைபெறுவதற்கு முக்கிய காரணம் யாதெனில் : இந்த டிஎன்பிஎல் தொடரில் சிறப்பாக செயல்படும் வீரர்கள் அடுத்த கட்டமாக ipl தொடருக்காகவும், இந்திய அணிக்காகவும் விளையாடும் வாய்ப்பைப் பெறவும், தமிழக வீரர்களுக்கு ஊதியம் கிடைக்கும் வகையிலும் இந்த தொடரானது நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்று முடிந்துள்ள ஆறு சீசன்களில் அதிகபட்சமாக சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியானது நான்கு முறை கோப்பையை வென்றுள்ளது. அது தவிர்த்து மதுரை சூப்பர் ஜெயன்ட்ஸ் ஒருமுறையும், தூத்துக்குடி ஒரு முறையும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

இப்படி தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் இந்த டிஎன்பிஎல் தொடரில் அசத்திய சில வீரர்கள் ஐபிஎல் தொடருக்காகவும் தற்போது விளையாடி வருகின்றனர். அந்த வகையில் வருண் சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர், ஷாருக்கான், சாய் கிஷோர், ஹரி நிஷாந்த், நாராயணன் ஜெகதீசன், ஹரி நிஷாந்த், விஜய் ஷங்கர் ஆகியோர் தற்போது ஐபிஎல் தொடரில் விளையாடுகின்றனர்.

TNPL

அது தவிர்த்து இந்திய அணியிலும் சிலர் பங்கேற்று விளையாடியுள்ளனர். அந்த வகையில் இந்த ஆண்டு ஏழாவது சீசன் இன்று ஜூன் 12-ஆம் தேதி துவங்குகிறது. இம்முறை சென்னையில் போட்டிகள் நடைபெறாத வேளையில் கோயம்புத்தூர், சேலம், நெல்லை மற்றும் திண்டுக்கல் ஆகிய நகரங்களில் இந்த டி.என்.பி.எல் தொடரானது நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் இந்த தொடரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியும் நேரலையில் ஒளிபரப்பி வருகிறது.

- Advertisement -

டிஎன்பிஎல் தொடரில் இதுவரை சாம்பியன் பட்டம் வென்றவர்களின் பட்டியல் இதோ :

2016 ஆம் ஆண்டு – தூத்துக்குடி
2017 ஆம் ஆண்டு – சேப்பாக் சூப்பர் கில்லீஸ்
2018 ஆம் ஆண்டு – மதுரை சூப்பர் ஜெயன்ட்ஸ்
2019 ஆம் ஆண்டு – சேப்பாக் சூப்பர் கில்லீஸ்
2020 ஆம் ஆண்டு – சேப்பாக் சூப்பர் கில்லீஸ்
2021 ஆம் ஆண்டு – சேப்பாக் சூப்பர் கில்லீஸ்
2022 ஆம் ஆண்டு – சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

இதையும் படிங்க : ஆமாமா தோனி அப்டியே ஒத்த கைல உ.கோ வாங்கி கொடுத்துட்டாரு, ரசிகரை விளாசிய ஹர்பஜன் – நடந்தது என்ன?

இந்த டி.என்.பி.எல் தொடரில் அதிகபட்சமாக பாபா அபாரஜித் 118 ரன்கள் குவித்து ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் அடித்த வீரராக திகழ்கிறார். அதோடு சாய் கிஷோர் அதிக விக்கெட்டுகளை (85 விக்கெட்டுகள்) வீழ்த்திய வீரராக திகழ்கிறார். இந்த டிஎன்பிஎல் தொடரில் அதிகபட்ச ரன்கள் அடித்தவராக நாராயணன் ஜெகதீசன் (1240 ரன்கள்) திகழ்கிறார். மேலும் இதுவரை 10 அணிகள் இந்த டி.என்.பி.எல் தொடரில் பங்கேற்றுள்ள வேளையில் இந்த சீசனில் 8 அணிகள் பங்கேற்று கோப்பையை வெல்ல பலபரீட்சை நடத்த காத்திருக்கின்றன.

Advertisement