ஆமாமா தோனி அப்டியே ஒத்த கைல உ.கோ வாங்கி கொடுத்துட்டாரு, ரசிகரை விளாசிய ஹர்பஜன் – நடந்தது என்ன?

Harbhajan SIngh
- Advertisement -

இங்கிலாந்தின் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 2023 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதி போட்டியில் 209 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்த ஆஸ்திரேலியா புதிய சாம்பியனாக சாதனை படைத்தது. மறுபுறம் தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக இருந்தும் அஸ்வின் போன்ற சரியான வீரர்களை தேர்வு செய்யாமல் டாஸ் அதிர்ஷ்டத்தை சரியாக பயன்படுத்தாமல் பேட்டிங், பவுலிங் ஆகிய அனைத்து துறைகளிலும் சொதப்பிய இந்தியா தோல்வியை சந்தித்துள்ளது. அதனால் 2013க்குப்பின் தொடர்ந்து 10வது வருடமாக ஐசிசி தொடரில் தோல்வியை சந்தித்துள்ள இந்தியாவின் கோப்பை கனவு மீண்டும் தகர்த்துள்ளது.

இத்தனைக்கும் 2016 – 2021 வரை தொடர்ந்து உலகின் நம்பர் ஒன் அணியாக இந்தியாவை வெற்றி நடை போட வைத்து ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் சரித்திர வெற்றிகள் பெற்றுக் கொடுத்த விராட் கோலியால் கோப்பையை வென்று கொடுக்க முடியாத நிலையில் ரோகித் சர்மா புதிய கேப்டனாக பொறுப்பேற்றதால் ரசிகர்களிடம் நம்பிக்கை ஏற்பட்டது. ஏனெனில் அசால்டாக 5 கோப்பைகளை வென்ற அனுபவம் நிறைந்த அவர் சாதாரண வீரராகவும் கேப்டனாகவும் இதுவரை ஐபிஎல், ஆசிய கோப்பை மற்றும் நிதஹாஸ் கோப்பை உட்பட எந்த ஒரு தொடரின் ஃபைனலிலும் தோல்வியை சந்தித்ததில்லை.

- Advertisement -

ஒத்த கைல வாங்கிட்டாரா:
இருப்பினும் அவரது தலைமையில் ஏற்கனவே 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் நாக் அவுட் சுற்றில் தோல்வியை சந்தித்த இந்தியா தற்போது முதல் முறையாக ஃபைனலிலும் தோற்றுள்ளது. அதன் காரணமாக எத்தனை பேர் வந்தாலும் தோனிக்கு நிகராக முடியாது என அவருடைய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

ஏனெனில் உள்ளூர் போட்டிகளில் கூட கேப்டன்ஷிப் செய்த அனுபவமில்லாத நிலையில் 2007ஆம் ஆண்டு பெரும்பாலும் இளம் வீரர்களை சிறப்பாக வழி நடத்தி முக்கிய முடிவுகளை எடுத்து மாபெரும் ஃபைனலில் பரம எதிரி பாகிஸ்தானை தோற்கடித்து டி20 உலக கோப்பையை வென்று காட்டிய அவர் 2010ஆம் ஆண்டு வரலாற்றிலேயே முதல் முறையாக தரவரிசையில் இந்தியாவை உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாகவும் முன்னேற்றினார்.

- Advertisement -

அத்துடன் 2011இல் கங்குலி உருவாக்கிய வீரர்களை வைத்து 28 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் உலகக் கோப்பையை வென்று காட்டிய அவர் 2013இல் இதே இங்கிலாந்து மண்ணில் தாம் உருவாக்கிய விராட் கோலி, ரோஹித் சர்மா, அஸ்வின் உள்ளிட்ட இளம் வீரர்களை வைத்து சாம்பியன்ஸ் டிராபியை வென்றார். அதன் வாயிலாக 3 விதமான உலகக் கோப்பைகளை வென்ற முதல் கேப்டன் என்ற ரிக்கி பாண்டிங் கூட படைக்காத சாதனை படைத்த அவர் 2014 டி20 உலக கோப்பை தவிர்த்து 4 ஃபைனல்களில் இந்தியாவுக்கு 3 உலக கோப்பையை வென்றுள்ளார்.

மறுபுறம் வரலாற்றில் இதர கேப்டன்கள் தலைமையில் 7 ஃபைனல்களில் களமிறங்கிய இந்தியா 1983இல் கபில் தேவ் தலைமையில் மட்டுமே கோப்பையை வென்றது. அந்த நிலையில் பயிற்சியாளர், ஆலோசகர் இல்லாமல் சீனியர் வீரர்கள் பங்கேற்காத நிலையில் இளம் வீரர்களை வைத்து அதற்கு முன் உள்ளூர் போட்டிகளில் கூட கேப்டன்ஷிப் செய்த அனுபவமில்லாத போதிலும் வலுவான ஆஸ்திரேலியாவை செமி ஃபைனலில் தோற்கடித்து 48 நாட்கள் கழித்து உலக கோப்பையை இவர் வென்று கொடுத்தார் என தோனியை ஒரு ரசிகர் ட்விட்டரில் பாராட்டினார்.

- Advertisement -

அதை பார்த்த முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் “ஆம் அந்த போட்டிகளில் இந்த இளம் வீரர் மட்டுமே இந்தியாவுக்காக விளையாடினார். மற்ற 10 பேர் அல்ல. எனவே அவர் தனியாளாக உலக கோப்பையை வென்று விட்டார். பொதுவாக ஆஸ்திரேலியா அல்லது இதர நாடுகள் உலக கோப்பையை வெல்லும் போது தலைப்புச் செய்தியாக ஆஸ்திரேலியா அல்லது நாட்டின் பெயர் வரும். ஆனால் இந்தியாவில் மட்டும் வென்றால் கேப்டனின் பெயர் வரும். இந்த அணி விளையாட்டில் வெற்றியும் தோல்வியும் ஒன்றாகப் பெறுகிறோம்” என்று பதிலடி கொடுத்தார்.

இதையும் படிங்க:தோனி கேப்டனா இருக்கும்போது மட்டும் இது நடந்திருந்தா இன்னும் 2 ஐ.சி.சி கோப்பையை ஜெயிச்சிருப்பாரு – பாண்டிங் புகழாரம்

இருப்பினும் தோனி எப்போதும் தாம் ஒற்றை கையில் உலக கோப்பையை வென்று கொடுத்தேன் என்று சொன்னதில்லை. மேலும் கோப்பையை வென்ற போதெல்லாம் இதர வீரர்களிடம் கொடுத்து விட்டு கடைசியாக நிற்பதும் தோற்றால் செய்தியாளர்களுக்கு முன்பே சென்று பொறுப்பை ஏற்பதுமே அவருடைய ஸ்டைலாகும்.

Advertisement