தோனி கேப்டனா இருக்கும்போது மட்டும் இது நடந்திருந்தா இன்னும் 2 ஐ.சி.சி கோப்பையை ஜெயிச்சிருப்பாரு – பாண்டிங் புகழாரம்

Ponting-and-Dhoni
- Advertisement -

லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் கடந்த 2021-ஆம் ஆண்டு விராட் கோலி தலைமையிலான இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருந்த வேளையில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியை சந்தித்து பரிதாபமாக முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பை இழந்தது. அதனை தொடர்ந்து இம்முறையும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஐசிசி கோப்பையை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

IND vs AUS

- Advertisement -

ஆனால் இந்த முறையும் இந்திய அணி தோல்வியை சந்தித்துள்ளது பெரிய அளவில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் 444 ரன்கள் அடித்தால் வெற்றி என்கிற நிலையில் தங்களது இரண்டாவது இன்னிங்சை துவங்கிய இந்திய அணியானது 234 ரன்களுக்கு ஆட்டமிழந்து 209 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது.

இந்த தோல்விக்கு பிறகு தற்போது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா குறித்தும், இந்த இறுதிப்போட்டிக்கான அணித்தேர்வு குறித்தும், அவரது டாஸ் முடிவு என பல்வேறு விடயங்களை முன்வைத்து விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. ஏனெனில் கடந்த 2013-ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி ஐசிசி கோப்பையை வென்றிருந்தது. அதன் பிறகு கடந்த 10 ஆண்டுகளாகவே இந்திய அணி எந்த ஒரு ஐசிசி தொடரிலும் இந்திய அணி கோப்பையை கைப்பற்றவில்லை.

Dhoni

2013 ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணி 10 முறை ஐசிசி தொடர்களில் பங்கேற்று நான்கு முறை இறுதிப்போட்டிக்கும், நான்கு முறை அரையிறுதி போட்டிக்கும் சிறப்பாக சென்று முக்கியமான நாக் அவுட் போட்டிகளில் தோல்வியை தழுவி வருகிறது. இந்நிலையில் இப்படி ஐசிசி தொடர்களை இந்திய அணி தவறவிட்டு வரும் வேளையில் தோனியின் கேப்டன்சி குறித்து பலரும் பாராட்டி வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங் தோனி மட்டும் டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்திருந்தால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை வெற்றி பெற்று தந்திருப்பார் என குறிப்பிட்டு பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : தோனி இந்திய அணிக்காக அனைத்து விதமான ஐசிசி கோப்பைகளையும் வெற்றி பெற்று தந்திருக்கிறார். கிரிக்கெட் வரலாற்றில் அதனை செய்து காட்டிய ஒரே கேப்டனாகவும் இருக்கிறார்.

இதையும் படிங்க : தோனி ரொம்ப ஈஸியா அதை செய்ஞ்சி காமிச்சிட்டாரு. 10 ஆண்டுகள் கழித்து தோனிக்கு பாராட்டு தெரிவித்த – ரவி சாஸ்திரி

அவர்மட்டும் டெஸ்ட் கேப்டனாக இருந்தபோது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரானது நடந்திருந்தால் கண்டிப்பாக குறைந்தபட்சம் இரண்டு முறை டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பைகளை அவர் இந்திய அணிக்காக பெற்று தந்திருப்பார். அவர் சென்ற பிறகு இந்திய அணி எந்தவித ஐ.சி.சி கோப்பையையும் கைப்பற்றவில்லை என ரிக்கி பாண்டிங் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement