தோனி ரொம்ப ஈஸியா அதை செய்ஞ்சி காமிச்சிட்டாரு. 10 ஆண்டுகள் கழித்து தோனிக்கு பாராட்டு தெரிவித்த – ரவி சாஸ்திரி

Shastri
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணியானது இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றி அசத்தியுள்ளது. கடந்த ஜூன் 7-ஆம் தேதி லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கிய இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி தங்களது முதல் இன்னிங்சில் 469 ரன்களை குவித்தது.

Rohit

- Advertisement -

பின்னர் தொடர்ந்து விளையாடிய இந்திய அணியானது தங்களது முதல் இன்னிங்சில் 296 ரன்களை மட்டுமே குவிக்க ஆஸ்திரேலியா அணி 173 ரன்கள் முன்னிலையுடன் விளையாட துவங்கி இரண்டாவது இன்னிங்சில் 270 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. அதன் காரணமாக இந்திய அணியின் வெற்றிக்கு 444 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

பின்னர் தொடர்ந்து விளையாடிய இந்திய அணியானது தங்களது இரண்டாவது இன்னிங்ஸில் 234 ரன்கள் மட்டுமே குவிக்க ஆஸ்திரேலியா அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று முதல் முறையாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றியது. அதே வேளையில் இரண்டு முறையும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி தோல்வியையே சந்தித்து பரிதாபமாக வெளியேறியது.

Lyon 1

இப்படி இந்த ஐசிசி தொடரையும் இந்திய அணி தவறவிட்டது ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி பல்வேறு முன்னாள் வீரர்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோன்று இந்த போட்டியில் தோல்வியடைந்த பிறகு இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா மீதும், அணித்தேர்வு குறித்தும், டாஸ் முடிவு குறித்தும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

- Advertisement -

இந்நிலையில் இந்த இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது குறித்து வருத்தம் தெரிவித்த இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தோனியையும் பாராட்டி பேசி உள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : இந்திய அணி இந்த தொடரின் இறுதிப்போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது மிகவும் வருத்தம் அளிக்கிறது.

இதையும் படிங்க : WTC Final : நாங்க எவ்ளோ சொல்லியும் கேட்கல, அந்த முடிவு தான் இந்தியாவின் தோல்விக்கு காரணம் – சச்சின் ஆதங்கம்

அதே வேளையில் தோனி 3 ஐசிசி கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். ஐசிசி கோப்பைகளை வெல்வது என்பது சாதாரணமான விடயம் கிடையாது. ஆனால் அதனை மகேந்திர சிங் தோனி எளிதானது போல் காட்டிவிட்டார் என்று தோனிக்கு இத்தனை ஆண்டுகள் காலம் கழித்து அவர் பாராட்டுகளை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement