ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக கேட்ச்களை பிடித்த டாப் 6 மிகச்சிறந்த பீல்டர்களின் பட்டியல்

Mohammed Azharuddin Sachin tendulkar
- Advertisement -

கிரிக்கெட்டில் வெற்றி பெறுவதற்கு ஒரு இன்னிங்சில் பெரிய ரன்களை சேசிங் செய்வதற்கும் அல்லது குவிப்பதற்கும் குறைந்தது 3 – 4 பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் ரன்கள் குவிப்பது அவசியமாகும். அதேப்போல் பந்துவீச்சு துறையிலும் 2 – 3 பவுலர்கள் துல்லியமாக பந்து வீசுவதுடன் விக்கெட்டுகளையும் எடுப்பது இன்றியமையாத ஒன்றாகும். அந்த வகையில் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் வெற்றி பெறும் போது அதில் சிறப்பாக செயல்படும் பேட்ஸ்மேன்களும் பவுலர்களுமே வெற்றிக்கு நேரடியாக பங்காற்றியவர்களாக ரசிகர்களுக்கு காட்சியளிப்பார்கள்.

Rahul Dravid Catch

- Advertisement -

ஆனால் அந்த போட்டி முழுவதும் முடிந்த அளவுக்கு ஓடிஓடி ரன்களை தடுப்பதுடன் முக்கிய நேரங்களில் பேட்ஸ்மென்கள் கொடுக்கும் கேட்ச்சை கச்சிதமாக பிடிக்கும் ஃபீல்டர்கள் அந்த வெற்றியின் மறைமுக நாயகர்கள் என்றே கூறலாம். ஏனெனில் என்னதான் பவுலர்கள் பந்து வீசி எதிரணி பேட்ஸ்மேன்களை தங்களது வலையில் சிக்கவைத்து கேட்ச் கொடுக்க வைத்தாலும் அதை பீல்டர்கள் சரியாக பிடித்தால் தான் விக்கெட் முழுமையாகும். அதை பிடிக்க தவறினால் அதே பேட்ஸ்மேன் அடுத்ததாக பெரிய அளவில் ரன்களைக் குவித்து தோல்வியை அளித்து விடுவார்கள் என்பதால் எந்த வகையான கிரிக்கெட்டாக இருந்தாலும் கேட்ச்களை கச்சிதமாக பிடிப்பது பீல்டர்களின் அடிப்படையான கடமையாகும்.

ஒன்டே பீல்டர்கள்:
இருப்பினும் ஒருநாள் கிரிக்கெட்டில் கேட்ச்களை பிடிப்பது பீல்டர்களுக்கு மிகவும் சவாலான ஒன்றாகும். ஏனெனில் பெரும்பாலான ஒருநாள் போட்டிகள் பகலிரவாக நடைபெறும் நிலையில் பகலில் சூரிய வெளிச்சம் மற்றும் மேக மூட்டத்தில் மத்தியில் பறந்து வரும் வெள்ளை பந்தை சரியாக பிடிக்க வேண்டும். அதேபோல் இரவு நேரத்தில் பனியின் தாக்கம் இருக்கும் என்பதால் ஈரத்தால் பிடித்த கேட்ச் கூட கை நழுவிப் போகும் நிலைமை ஏற்படும். எனவே இத்தனை சவால்களையும் தாண்டி ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக காட்சிகளை பிடித்த டாப் 6 பீல்டர்களை பற்றி பார்ப்போம்:

Kohli

6. விராட் கோலி 138*: நவீன கிரிக்கெட்டில் மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக அதிரடியான ரன்களையும் சதங்களையும் அடித்து வரும் இந்தியாவின் விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 10000 ரன்களை அடித்த பேட்ஸ்மேன் உள்ளிட்ட ஏராளமான உலக சாதனை படைத்துள்ளார். அதைவிட எப்போதுமே வெறித்தனமான உடற்பயிற்சிகளை செய்து ஃபிட்டாக காட்சியளிக்கும் அவர் களத்தில் பவர்பிளே ஓவர்களில் உள் வட்டத்திற்குள் ஸ்லிப் பகுதிகளில் நின்று மின்னல் வேகத்தில் வரும் பந்துகளை கேட்ச்களாக பிடிப்பதிலும் ரன் அவுட் செய்வதிலும் வல்லவர்.

- Advertisement -

அதேபோல் இவரின் திறமையை உணர்ந்த கேப்டன் தோனி எப்போதுமே கடைசி கட்ட ஓவர்களில் பவுண்டரி எல்லைக்கு அனுப்பி வைத்து விடுவார். அந்த அளவுக்கு தரமான இவர் ஒருநாள் கிரிக்கெட்டில் 260 இன்னிங்ஸ்சில் 138* கேட்ச்களை பிடித்து நவீன கிரிக்கெட்டின் சிறந்த பீல்டராக இந்த பட்டியலில் 6-வது இடம் பிடிக்கிறார்.

sachin

5. சச்சின் டெண்டுல்கர் 140: நான் இல்லாத சாதனைப் பட்டியலா என்பது போல் வரலாற்றில் 463 போட்டிகளில் விளையாடி 18426 ரன்களை குவித்த மகத்தானவராக போற்றப்படும் சச்சின் டெண்டுல்கர் சிறப்பாக பீல்டிங் செய்யவும் எப்போதும் தவறியதில்லை.

- Advertisement -

உள்வட்டம், பவுண்டரி எல்லை உட்பட அனைத்து பகுதிகளிலும் சிறப்பாக ஃபீல்டிங் செய்யும் திறமை பெற்ற இவர் தனது கேரியரில் களமிறங்கிய 456 இன்னிங்ஸ்சில் 140 கேட்ச்களை பிடித்து இந்த பட்டியலில் 5-வது இடம் பிடிக்கிறார்.

taylor 1

4. ராஸ் டய்லர் 142: நவீன கிரிக்கெட்டில் மிகச்சிறந்த பேட்ஸ்மேங்களில் ஒருவராக போற்றப்படும் ராஸ் டெய்லர் ஒருநாள் கிரிக்கெட்டில் 8607 ரன்களுடன் அதிக ரன்கள் குவித்த நியூசிலாந்து பேட்ஸ்மேனாக சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

பேட்டிங்க்கு ஈடாக பீல்டிங் செய்வதிலும் மகத்தான இவர் 232 இன்னிங்சில் 142 கேட்ச்களை பிடித்து வரலாற்றின் மிகச்சிறந்த நியூசிலாந்து பீல்டராக இந்த சாதனை பட்டியலில் 4-வது இடம் பிடிக்கிறார்.

Azharuddin

3. முஹம்மது அசாருதீன் 156: 90களில் மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக அதிரடியாக ரன்களை குவித்த இவர் கேப்டனாகவும் ஜாம்பவான் கபில் தேவுக்கு பின் இந்தியாவை நீண்ட நாட்கள் வழிநடத்தி நிறைய வெற்றிகளை பெற்று கொடுத்தவர்.

தன்னுடைய அணியில் உள்ள இதர வீரர்கள் உத்வேகமடையும் அளவுக்கு எப்போதுமே பீல்டிங் துறையில் துடிப்பாக செயல்பட்ட அவர் தனது கேரியரில் பங்கேற்ற 332 இன்னிங்ஸ்களில் 156 கேட்ச்களை பிடித்து ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக கேட்ச்கள் பிடித்த இந்திய வீரராக இப்பட்டியலில் 3-வது இடம் பிடிக்கிறார்.

ponting-captaincy

2. ரிக்கி பாண்டிங் 160: அற்புதமான பேட்டிங் செய்யும் திறமை பெற்றிருந்த ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் சச்சினுக்கு நிகராக போற்றப்பட்ட மகத்தான பேட்ஸ்மேன் ஆவார். அதைவிட 2 உலகக் கோப்பைகளை வென்று வரலாற்றின் மகத்தான கேப்டன்களில் முதன்மையானவராக போற்றப்படும் இவர் பீல்டிங் செய்வதில் குறிப்பாக உள் வட்டத்திற்குள் ஸ்லீப் பகுதியில் எவ்வளவு வேகத்தில் பந்துகள் வந்தாலும் சூப்பர்மேனை போல் தாவி பிடித்த கேட்ச்களை இப்போதும் மறக்க முடியாது.

அந்த வகையில் தனது கேரியரில் களமிறங்கிய 372 இன்னிங்ஸ்களில் 160 கேட்ச்களை பிடித்துள்ள அவர் ஆஸ்திரேலியாவின் மிகச்சிறந்த பீல்டராக இந்த பட்டியலில் 2வது இடம் பிடிக்கிறார்.

Jayawardene

1. மகிளா ஜெயவர்தனே 218: இலங்கையின் மகத்தான பேட்ஸ்மேன்களில் ஒருவராக போற்றப்படும் இவர் கேப்டனாகவும் அந்த அணிக்கு நிறைய வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார். தன்னுடைய காலத்தில் முத்தையா முரளிதரன், சமிந்தா வாஸ் என சுழல் மற்றும் வேகத்தில் மிரட்டிய 2 தரமான பந்துவீச்சாளர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் தடுமாறிய பேட்ஸ்மேன்கள் கொடுத்த நிறைய கேட்ச்களை கச்சிதமாக பிடித்த இவர் தனது கேரியரில் களமிறங்கிய 443 இன்னிங்சில் 218 கேட்ச்களை பிடித்துள்ளார்.

வேறு எந்த வீரரும் 200 கேட்ச்களை கூட பிடித்ததில்லை என்ற நிலைமையில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக கேட்ச்களை பிடித்த மிகச்சிறந்த பீல்டராக இவர் உலக சாதனை படைத்துள்ளார்.

Advertisement