ஒருநாள் கிரிக்கெட்டில் மிகவும் இளம் வயதில் இரட்டை சதமடித்த டாப் 5 வீரர்களின் பட்டியல்

- Advertisement -

டெஸ்ட் சாம்பியன்ஷிப், டி20 உலக கோப்பை என புதிய ஐசிசி உலகக்கோப்பைகள் வந்தாலும் சர்வதேச கிரிக்கெட்டின் உண்மையான சாம்பியனை 50 ஓவர் போட்டிகளை அடிப்படையாகக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட்டை மையமாக வைத்தே இப்போதும் தீர்மானித்து வருகிறோம். அதில் ஹாட்ரிக் முதல் அதிவேக சதங்கள் வரை பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டு வந்தாலும் இரட்டை சதம் மட்டும் எட்டாத கனியாகவே இருந்து வந்தது. அதை சார்லஸ் கவன்ட்ரி, சயீத் அன்வர் ஆகியோர் 190 ரன்களை தாண்டியும் 200 என்ற கனியை மட்டும் சுவைக்க முடியாமல் தோல்வியை சந்தித்தனர்.

- Advertisement -

அப்படியே காலங்கள் உருண்டோடியாதல் 200 ரன்கள் என்பது எப்போதுமே தொட முடியாத சாதனையாக பார்க்கப்பட்டது. ஆனால் சாதிக்க பிறந்தவனாக ஏற்கனவே ஒருநாள் கிரிக்கெட்டில் பேட்டிங் துறையில் அத்தனை சாதனைகளையும் தன்வசப்படுத்திய இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கடந்த 2010ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக குவாலியரில் குதிரைக்கொம்பாக கருதப்பட்ட இரட்டை சதத்தை முதல் முறையாக தொட்டு வரலாறு படைத்தார். 35 வயதில் அனுபவத்தால் சாதித்த அவர் இந்த உலகிற்கே ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதத்தை எப்படி அடிக்க வேண்டும் என்ற வித்தையை கற்றுக் கொடுத்தார்.

இளம் இரட்டை சதங்கள்:
அதாவது தொடக்க வீரராக களமிறங்கி எந்தளவுக்கு நிலைத்து நிற்கிறோமோ அந்தளவுக்கு அதிரடியாக விளையாடி இரட்டை சதத்தை தொட முடியும் என்ற இலக்கணத்தை உருவாக்கிய அவரைப் பின்பற்றி தற்போது நிறைய வீரர்கள் எளிதாக இரட்டை சதமடிக்கிறார்கள். அவரை பின்பற்றி ஒருநாள் கிரிக்கெட்டில் மிகவும் இளம் வயதில் இரட்டை சதமடித்த வீரர்களை பற்றி பார்ப்போம்:

5. மார்ட்டின் கப்டில்: கடந்த 2015 உலக கோப்பையில் ஆக்லாந்து மைதானத்தில் வெஸ்ட் இண்டீக்ஸ்க்கு எதிரான காலிறுதி போட்டியில் சாதாரணமாகவே வெளுத்து வாங்கக்கூடிய அவர் சிறிய மைதானத்தையும் சொந்த மண் சாதகத்தையும் பயன்படுத்தி 24 பவுண்டரி 11 சிக்ஸருடன் இரட்டை சதமடித்து 237* (163) ரன்கள் விளாசினார்.

- Advertisement -

அதனால் நியூஸிலாந்து 393/6 ரன்கள் குவிக்க உதவி பின்னர் 143 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவிய அவர் 28 வருடம் 171 நாட்களில் உலக கோப்பையில் இளம் வயதில் இரட்டை சதமடித்த வீரர் என்ற உலக சாதனை படைத்தார்.

4. பக்கார் ஜமான்: கடந்த 2018இல் புலவாயோ நகரில் கத்துக்குட்டியான ஜிம்பாப்வேயை அடித்து நொறுக்கிய இவர் 24 பவுண்டரி 5 சிக்ஸருடன் கடைசி வரை அவுட்டாகாமல் 210* (156) ரன்கள் விளாசி பாகிஸ்தான் 399/1 ரன்கள் குவிக்க உதவி பின்னர் 244 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவினார்.

- Advertisement -

குறிப்பாக 28 வருடம் 100 நாட்களில் 210 ரன்கள் குவித்த அவர் இந்த பட்டியலில் 4வது இடம் பிடித்து ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதமடித்த முதல் பாகிஸ்தான் வீரராகவும் சாதனை படைத்தார்.

Rohith

3. ரோஹித் சர்மா: கடந்த 2013ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெங்களூருவில் வெற்றியாளரை தீர்மானிக்கும் 7வது போட்டியில் விஸ்வரூபம் எடுத்து வெளுத்து வாங்கிய ரோஹித் சர்மா 12 பவுண்டரி 16 சிக்ஸருடன் 209 (158) ரன்கள் விளாசி இந்தியா 383/6 ரன்கள் குவிக்க உதவி இறுதியில் 57 ரன்கள் வித்தியாசத்தில் கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருது வென்றார்.

- Advertisement -

26 வருடம் 186 நாட்களில் அந்த இலக்கை முதல் முறையாக தொட்டு இந்த பட்டியலில் 3வது இடம் பிடித்துள்ள அவர் மேற்கொண்டு 2 இரட்டை சதங்களை அடித்து ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக இரட்டை சதங்கள் அடித்த வீரராகவும் உலக சாதனை படைத்துள்ளார்.

Ishan Kishan Vs BAN

2. இஷான் கிசான்: கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற ஒருநாள் தொடரின் கடைசி போட்டியில் கத்துக்குட்டி வங்கதேசத்தை அடித்து நொறுக்கிய இவர் 24 பவுண்டரி 10 சிக்ஸருடன் 210 (131) ரன்கள் குவித்து அதிவேகமாக இரட்டை சதமடித்த வீரர் (126 பந்துகள்) என்ற உலக சாதனை படைத்தார்.

24 வருடம் 145 நாட்களில் 210 ரன்கள் விளாசிய அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் வெளிநாட்டு மண்ணில் இளம் வயதில் இரட்டை சதமடித்த வீரராக உலக சாதனை படைத்து இந்தியா 227 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவினார்.

Shubman Gill

இதையும் படிங்க: பும்ரா கண்டிப்பா ஐ.பி.எல் மேட்ச் முழுசா ஆடனும். அப்போதான் தெரியும் – ராபின் உத்தப்பா கருத்து

1. சுப்மன் கில்: 2023 ஜனவரியில் நியூசிலாந்துக்கு எதிராக ஹைதராபாத் நகரில் நடைபெற்ற முதல் கிரிக்கெட் போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கி 19 பவுண்டரி 9 சிக்சரை பறக்க விட்ட இவர் 23 வருடம் 132 நாட்களில் 208 (149) ரன்கள் குவித்து ஒருநாள் கிரிக்கெட்டில் இளம் வயதில் இரட்டை சதமடித்த வீரராக சாதனை படைத்தார். அவரது அதிரடியால் 349/8 ரன்கள் குவித்த இந்தியா இறுதியில் 12 ரன்கள் வித்யாத்தில் போராடி வென்றது.

Advertisement