பும்ரா கண்டிப்பா ஐ.பி.எல் மேட்ச் முழுசா ஆடனும். அப்போதான் தெரியும் – ராபின் உத்தப்பா கருத்து

Uthappa-and-Bumrah
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா கடந்த பல மாதங்களாகவே காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். பந்துவீச்சில் இந்திய அணியின் முதுகெலும்பாக பார்க்கப்படும் பும்ரா கடந்த ஆண்டு காயத்தால் பெரும்பாலான போட்டிகளை தவற விட்டார். அதிலும் குறிப்பாக இந்திய அணி பங்கேற்ற ஆசிய கோப்பை தொடர், டி20 உலக கோப்பை தொடர் என பெரிய பெரிய தொடர்களில் அவர் இல்லாமல் போனது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பாக பார்க்கப்பட்டது.

Bumrah 1

- Advertisement -

அதேபோன்று தேசிய கிரிக்கெட் அகாடமியில் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் தவற விட்டுள்ளார் என்ற தகவல் அண்மையில் வெளியாகியிருந்தது. இப்படி பும்ரா தொடர்ச்சியாக காயத்திலிருந்து மீளாமல் இருந்து வருவது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

அவ்வப்போது அவர் காயத்திலிருந்து மீண்டுவிட்டார் அணிக்கு திரும்புவார் என்ற செய்திகள் வெளியாவதும் அதன்பிறகு மீண்டும் காயமடைந்து அவர் அணியிலிருந்து வெளியேறுவதும் தற்போது வாடிக்கையாகிவிட்டது. ஏற்கனவே இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரின் போது இந்திய அணியில் சேர்க்கப்பட்ட பும்ரா கடைசி நேரத்தில் அணியில் இருந்து மீண்டும் காயம் காரணமாக வெளியேற்றப்பட்டார்.

Bumrah 1

இப்படி தொடர்ச்சியான காயங்களை சந்தித்து வரும் பும்ரா இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடரிலும் முக்கிய வீரராக பார்க்கப்படுகிறார். ஆனால் அவரது உடல்நிலை எவ்வாறு இருக்கும் என்பது குறித்து இப்பொழுது வரை உறுதியான தகவல் வெளியாகவில்லை. இந்நிலையில் இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரில் அவர் முழுமையாக விளையாட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறுகையில் : என்னை பொருத்தவரை பும்ரா ஐபிஎல் தொடர் முழுவதும் விளையாட வேண்டும். ஏனெனில் அவர் ஒரு தொடர் முழுவதும் விளையாடினால்தான் அவரால் உலகக் கோப்பை தொடரில் விளையாடும் அளவிற்கு ஃபிட்னஸ் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள முடியும். ஒருவேளை அவர் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு உடற்தகுதியை நிரூபித்தால் நிச்சயம் உலக கோப்பை தொடரிலும் விளையாடும் அளவிற்கு தகுதியாக உள்ளார் என்று அர்த்தம்.

இதையும் படிங்க : டி20 அணியில் விராட் கோலியை கழற்றி விட்டா சுயநலமற்ற அவருக்கு சான்ஸ் கொடுங்க – தினேஷ் கார்த்திக் கோரிக்கை

எனவே எதிர்வரும் ஐபிஎல் தொடர் அவருக்கு ஒரு சோதனை களமாகவே மாறவுள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் அவர் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் கட்டாயம் அவர் இந்திய அணிக்காக உலகக் கோப்பை தொடரிலும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என ராபின் உத்தப்பா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement