டி20 அணியில் விராட் கோலியை கழற்றி விட்டா சுயநலமற்ற அவருக்கு சான்ஸ் கொடுங்க – தினேஷ் கார்த்திக் கோரிக்கை

- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 தொடரை 2 – 1 (3) என்ற கணக்கில் வென்ற இந்தியா தன்னை நம்பர் ஒன் கிரிக்கெட் அணி என்பதை நிரூபித்துள்ளது. முன்னதாக 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட பெரும்பாலான சீனியர்கள் சுமாராக செயல்பட்டது தோல்வியை சந்திக்க முக்கிய காரணமாக அமைந்ததால் 2024 டி20 உலக கோப்பைக்கு முன்பாக ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் அணியை உருவாக்கும் வேலையை பிசிசிஐ துவங்கியுள்ளது. அதனாலேயே உலக கோப்பைக்கு பின் இதுவரை நடைபெற்ற நியூசிலாந்து, இலங்கை, நியூசிலாந்து ஆகிய 3 டி20 தொடர்களில் ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர்கள் விளையாடவில்லை.

Rahul Tripathi

- Advertisement -

அந்த 3 தொடர்களிலும் 1 – 0 (3), 2 – 1 (3), 2 – 1 (3) என்ற கணக்கில் கோப்பை வென்ற பாண்டியா தலைமையிலான அணியில் சுப்மன் கில், உம்ரான் மாலிக் போன்ற தரமான இளம் வீரர்களும் கிடைத்து வருகிறார்கள். அந்த வரிசையில் இந்தியாவுக்காக விளையாடும் லட்சியத்தில் நீண்ட காலமாக ஐபிஎல் தொடரில் போராடி நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்திய ராகுல் திரிபாதி ஒரு வழியாக இலங்கைக்கு எதிரான தொடரில் அறிமுகமானார். அதில் இதுவரை வாய்ப்பு பெற்ற 5 போட்டிகளில் 97 ரன்களை 144.77 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்துள்ள அவர் பெரும்பாலும் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.

சுயநலமற்ற திரிபாதி:
குறிப்பாக அறிமுகப் போட்டியில் சொதப்பியதால் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்வதற்காக அடுத்த போட்டிகளில் அசத்த வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளான அவர் 35 (16), 44 (22) என 2 முக்கிய இன்னிங்ஸ்சில் 200 ஸ்ட்ரைக் ரேட்டில் அதிரடியாக ரன்களை குவித்து சுயநலமின்றி அரை சதத்தை தொடுவதற்கு முன்பாகவே அவுட்டானார். அதனால் ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்ற அவருக்கு 2024 டி20 உலக கோப்பையில் விராட் கோலி விளையாடாத பட்சத்தில் 3வது இடத்தில் விளையாடும் வாய்ப்பை கொடுக்கலாம் என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

virat kohli 166

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “அது தான் அவரது டிஎன்ஏவின் அழகாகும். போட்டியும் தொடரும் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் அதிரடியாக விளையாடும் அவரைப் போன்ற வீரர்கள் தான் உங்களுக்கு தேவை. அதை நாம் அடுத்த 3 அல்லது 6 மாதத்தில் மறந்து விடக்கூடாது. ஒருவேளை அடுத்து நடைபெறும் ஐபிஎல் தொடரில் சுமாராக செயல்பட்டாலும் 3வது இடத்தில் விளையாடுவதற்கு அவர் தகுதியானவர். மேலும் விராட் கோலி விளையாடினால் அதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஒருவேளை அவர் டி20 கிரிக்கெட்டில் விளையாடவில்லை என்றால் அந்த இடத்தில் அவர் தான் முதலில் விளையாட வேண்டும்”

- Advertisement -

“ஒவ்வொரு முறையும் அவர் மைதானத்திற்கு விளையாட செல்லும் போது இருக்கும் சூழ்நிலைகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக தனது கேரியர் ஆபத்தில் இருக்கிறது என்பதை தெரிந்தும் அவர் எப்போதும் சுயநலமின்றி அதிரடியாக விளையாடுவதை பின்பற்றி வருகிறார். ஏனெனில் கட்டாயம் வென்றாக வேண்டிய போட்டியில் அதை செய்தாக வேண்டியது கட்டாயம் என்பதால் அவர் அதை செய்கிறார். குறிப்பாக தனது கேரியர் கேள்விக்குறியாக இருக்கும் நிலைமையில் இலங்கைக்கு எதிரான கடைசி போட்டியில் அவர் மிகச் சிறப்பாக விளையாடினார்”

Dinesh-Karthik-1

“அதிலும் குறிப்பாக தமக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்காது என்பதை தெரிந்தும் ஆபத்தான ஷாட்டுகளை அடித்த அவர் அதிரடியாக விளையாடி அணி மற்றும் பயிற்சியாளர்களுக்கு என்ன தேவையோ அதை செய்கிறார். தற்போது நான் சொல்வதெல்லாம் ராகுல் திரிபாதிக்காக அல்ல மாறாக இந்திய கிரிக்கெட்டை உன்னிப்பாக கவனித்து வரும் ரசிகர்களுக்கானது”

இதையும் படிங்க: IND vs AUS : இதுலயே ஆஸ்திரேலியா பயந்துட்டாங்கன்னு தெரியுது – ஆடம் கில்கிறிஸ்ட் கருத்துக்கு முகமது கைப் பதிலடி

“அதாவது தயவு செய்து அடுத்த சில மாதங்களில் அனைத்தையும் மறந்து விட்டு அவரை மாற்றுவதற்கு வேறு ஒரு பெயரை பரிந்துரைக்காதீர்கள். குறிப்பாக அவர் 30 – 40 ரன்கள் மட்டும் தானே அடித்துள்ளார் என்று கூறாதீர்கள்” என ராகுல் திரிபாதிக்கு தொடர்ந்து ஆதரவு கொடுக்குமாறு ரசிகர்களையும் கேட்டுக் கொண்டார்.

Advertisement