IND vs AUS : இதுலயே ஆஸ்திரேலியா பயந்துட்டாங்கன்னு தெரியுது – ஆடம் கில்கிறிஸ்ட் கருத்துக்கு முகமது கைப் பதிலடி

- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் மோதும் வரலாற்று சிறப்புமிக்க பார்டர் – கவாஸ்கர் கோப்பை வரும் நவம்பர் 9ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இம்முறை இந்திய மண்ணில் நடைபெறும் இத்தொடரில் குறைந்தபட்சம் 3 போட்டிகளை வென்றால் தான் வரும் ஜூலை மாதம் லண்டனில் நடைபெறும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலைமையில் இந்தியா களமிறங்குகிறது. மறுபுறம் ஏற்கனவே பைனல் வாய்ப்பை உறுதி செய்து விட்டதால் 2004க்குப்பின் இந்திய மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து சந்தித்து வரும் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்க ஆஸ்திரேலியா போராட உள்ளது.

Steve Smith Virat Kohli IND vs AUS

- Advertisement -

அதை விட கடைசியாக 2014/15இல் பார்டர் – கவாஸ்கர் கோப்பையை வென்றிருந்த ஆஸ்திரேலியா 2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் தங்களது சொந்த மண்ணில் இந்தியாவிடம் முதல் முறையாக வரலாற்று தோல்வியை சந்தித்தது. எனவே அதற்கு இம்முறை இந்தியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து பழி தீர்க்க காத்திருக்கும் ஆஸ்திரேலியா நிச்சயமாக 2004க்குப்பின் வெற்றி பெறும் என்று முன்னாள் ஆஸ்திரேலிய ஜாம்பவான் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் சமீபத்தில் தெரிவித்திருந்தார். கடைசியாக 2004இல் ரிக்கி பாண்டிங் தலைமையில் இந்திய மண்ணில் வெற்றி வாகை சூடிய அணியில் இடம் பிடித்திருந்த அவர் அப்போதைய அணிக்கும் இப்போதைய அணிக்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பதால் நிச்சயம் இம்முறை ஆஸ்திரேலியா வெல்லும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

ஆரம்பத்திலேயே பயந்துட்டாங்க:
இந்நிலையில் இத்தொடருக்காக அறிவிக்கப்பட்ட ஆஸ்திரேலியா அணியில் வெறும் 18 வீரர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளது தமக்கு ஆச்சரியமளிப்பதாக தெரிவிக்கும் முன்னாள் வீரர் முகமது கைஃப் வரலாற்றில் எப்போதும் இந்திய தொடருக்கு ஆஸ்திரேலியா இவ்வளவு குறைவான வீரர்களை அறிவித்ததை பார்த்ததில்லை என்று கூறியுள்ளார். இந்தியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடிக்க முடியாது என்பது தெரிந்த காரணத்தாலேயே அதிக வீரர்களை வீணடிக்க விரும்பாமல் ஆஸ்திரேலியா பின் வாங்கியுள்ளதாக தெரிவிக்கும் அவர் இதுவே அவர்கள் பயந்து விட்டதை காட்டுவதாகவும் கூறியுள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு.

Adam Gilchrist

“இந்தியாவுக்கு ஆஸ்திரேலியா வெறும் 18 வீரர்களுடன் பயணித்துள்ளது. அதுவே அவர்கள் பயந்து விட்டார்கள் என்பதை தெளிவாக காட்டுகிறது. அவர்கள் தங்களால் வெல்ல முடியுமா என்ற சந்தேகத்துடன் வந்துள்ளார்கள். ஏனெனில் வரலாற்றில் இந்தியாவுக்கு அவர்கள் வெறும் 18 வீரர்களுடன் எப்போதும் வந்ததில்லை. மேலும் அவர்களுக்கு இந்தியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடிப்பது அவ்வளவு சுலபமல்ல என்பது தெரியும். அவர்கள் இந்தியாவை தோற்கடிப்பது மிகவும் கடினமாகும்”

- Advertisement -

“மேலும் கடைசியாக மோதிய காபா போட்டியில் இல்லாத விராட் கோலி தற்போது இந்திய அணியில் உள்ளார். ஆஸ்திரேலிய அணியும் வலுவானது என்பதுடன் நல்ல பார்மில் இருக்கிறார்கள். ஆனால் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடிப்பது சுலபமானதல்ல. அவர்களால் முழுமையாக பேட்டிங் செய்ய முடியுமா? அவர்களால் அஷ்வின், ஜடேஜா, அக்சர், குல்தீப் ஆகியோருக்கு எதிராக தாக்குப் பிடிக்க முடியுமா? ஒருவேளை அவர்களால் சுழல் பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டால் மட்டுமே நல்ல போட்டியை கொடுக்க முடியும்”

Kaif

“மேலும் 2004இல் இந்தியாவுக்கு வந்த ஆஸ்திரேலிய அணி மிகவும் வலுவாக இருந்தது. தற்போதைய அணியும் சமீப காலங்களில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளது. ஆனால் கேப்டன்ஷிப் அம்சத்தில் ஆஸ்திரேலியா பிரச்சினைகளை சந்தித்துள்ளது. குறிப்பாக டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் அகியோர் கேப்டன்ஷிப் தடை பெற்றது போன்ற விமர்சனங்களும் பிரச்சனைகளும் அவர்களது அணியில் உள்ளன. அதை விட சமீப காலங்களில் இளம் இந்திய அணி ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணிலேயே தோற்கடித்துள்ளது”

இதையும் படிங்க:பாகிஸ்தானை பாத்து அப்டியே காப்பி அடிச்சு ஜெயிக்கிறாங்க – இந்தியாவை மீண்டும் விமர்சித்த ரமீஸ் ராஜா

“அந்த காயங்களில் தான் அவர்கள் இவ்வாறு பேசுகிறார்கள். இருப்பினும் இந்தியாவை தோற்கடிப்பது மிகவும் கடினமாகும்” என்று கூறினார். பொதுவாகவே வரலாற்றில் ரிக்கி பாண்டிங் உட்பட நிறைய ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் தரமான சுழல் பந்து வீச்சை எதிர்கொள்ள திணறியிருக்கிறார்கள். கடந்த 2017 இந்திய சுற்றுப்பயணத்தில் கூட ஸ்டீவ் ஸ்மித் தவிர்த்து பெரும்பாலான ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் தடுமாறினார்கள். அதனால் இந்தியாவை தோற்கடிப்பது மிகவும் கடினம் என்று முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.

Advertisement