பாகிஸ்தானை பாத்து அப்டியே காப்பி அடிச்சு ஜெயிக்கிறாங்க – இந்தியாவை மீண்டும் விமர்சித்த ரமீஸ் ராஜா

- Advertisement -

2023 புத்தாண்டில் இலங்கை மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடர்களை தலா 3 – 0 (3) என்ற கணக்கில் வென்ற இந்தியா தொடர் வெற்றிகளால் தரவரிசையில் உலகின் புதிய நம்பர் ஒன் கிரிக்கெட் அணியாக முன்னேறி சாதனை படைத்தது. வரும் அக்டோபர் மாதம் 50 ஓவர் உலகக் கோப்பை நடைபெறும் இந்த வருடத்தின் ஆரம்பத்திலேயே உலகின் நம்பர் ஒன் அணியாக மணிமகுடம் சூடியுள்ள இந்தியாவுக்கு சுப்மன் கில், முகமது சிராஜ், உம்ரான் மாலிக் போன்ற தரமான இளம் வீரர்களும் இந்தியாவுக்கு கிடைத்து வருவது இந்திய ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Umran Malik

- Advertisement -

அத்துடன் இலங்கை மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடர்களிலும் விராட் கோலி உள்ளிட்ட முதன்மை வீரர்கள் இல்லாமலேயே ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்களுடன் அசத்திய இந்தியா தலா 2 – 1 (3) என்ற கணக்கில் அடுத்தடுத்த கோப்பைகளை வென்று சொந்த மண்ணில் தங்களை வலுவான அணி என்பதையும் உலகின் நம்பர் ஒன் டி20 அணி என்பதையும் நிரூபித்துள்ளது. மேலும் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் (317) வித்தியாசத்தில் வென்ற அணியாக உலக சாதனை படைத்த இந்தியா நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் (168) வித்தியாசத்தில் வென்ற அணியாகவும் உலக சாதனை படைத்துள்ளது.

காப்பி அடிக்குறாங்க:
அந்த வகையில் சொந்த மண்ணில் கொஞ்சம் கூட சாய்க்க முடியாத முரட்டுத்தனமான அணியாக இந்தியா செயல்பட்டு வருவது எதிரணிகளுக்கு அச்சுறுத்தலாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சு கூட்டணியை பார்த்து காப்பி அடித்து தங்களது பவுலிங் அணுகுமுறையை பின்பற்றி தான் இந்தியா இந்த தொடர் வெற்றிகளை பெற்று வருவதாக முன்னாள் பாகிஸ்தான் வாரிய தலைவர் மற்றும் வீரர் ரமீஸ் ராஜா வித்தியாசமான கருத்தை தெரிவித்துள்ளார்.

Arshdeep-Singh

இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் வெளிப்படையாக பேசியது பின்வருமாறு. “சமீப காலங்களாகவே பாகிஸ்தானை பார்த்து இந்தியா தங்களுடைய பந்து வீச்சு கூட்டணியை உருவாக்கி வெற்றி காண்பதாக நான் உணர்ந்து வருகிறேன். ஏனெனில் ஹாரீஸ் ரவூப் போல அதிரடியான வேகத்தில் உம்ரான் மாலிக் பந்து வீசுகிறார். அதே போல் இடது கை ஸ்விங் வேகப்பந்து வீச்சாளரான அர்ஷிதீப் சிங் ஷாஹீன் அப்ரிடி போல செயல்படுகிறார்”

- Advertisement -

“அத்துடன் மிடில் ஓவர்களில் வாசிம் ஜூனியர் போல ஹர்டிக் பாண்டியா கணிசமான ஓவர்களை வீசுகிறார். அந்த இருவருமே கிட்டத்தட்ட ஒரே மாதிரியான வேகத்தைக் கொண்டவர்கள். சிவம் மாவியும் சப்போர்ட் செய்யும் பவுலராக செயல்பட்டு வருகிறார். இருப்பினும் இந்தியாவின் சுழல் பந்து வீச்சு கூட்டணி பாகிஸ்தானை விட சற்று சிறப்பாக உள்ளது. மொத்தத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் விளையாடும் போட்டிகளை பார்க்கும் போதெல்லாம் இந்தியாவை காட்டிலும் பாகிஸ்தான் எவ்வாறு முன்னேற வேண்டும் என்பதைப் பற்றி நான் பார்ப்பேன்” என்று கூறினார்.

Ramiz Raja

இதை பார்க்கும் இந்திய ரசிகர்கள் ஒப்பிடாக இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா என்று அவரை சரமாரியாக கலாய்க்கிறார்கள். ஏனெனில் அவர்கள் கூறும் அதே முதன்மை வேகப்பந்து வீச்சாளர்களை வைத்துக்கொண்டு கடந்த வருடம் சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியில் கூட வெல்ல முடியாமல் பாகிஸ்தான் வரலாற்றுத் தோல்விகளை கண்டது. மறுபுறம் ஆசிய மற்றும் உலக கோப்பையில் தோற்றாலும் சொந்த மண்ணில் பும்ரா உள்ளிட்ட முதன்மை பவுலர்கள் இல்லாமலேயே எதிரணிகளை அடித்து நொறுக்கிய இந்தியா தொடர் வெற்றிகளை பெற்றது.

இதையும் படிங்க: 2007 டி20 உலகக்கோப்பை ஹீரோ சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவிப்பு – அவரே வெளியிட்ட தகவல்

ஒருவேளை உங்களைப் பார்த்து காப்பி அடித்திருந்தால் நாங்கள் வெற்றி பெறுவதற்கு முன்பாக நீங்கள் உங்களது சொந்த மண்ணில் வெற்றி பெற்றிருக்க வேண்டுமே என்று ரமீஸ் ராஜாவை கலாய்க்கும் இந்திய ரசிகர்கள் எப்போதும் இந்தியாவை விமர்சிப்பதே உங்களுக்கு வேலையா என்றும் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

Advertisement