2007 டி20 உலகக்கோப்பை ஹீரோ சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவிப்பு – அவரே வெளியிட்ட தகவல்

2007
- Advertisement -

கடந்த 2007-ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை அறிமுக ஆண்டிலேயே வென்று வரலாறு படைத்தது. சீனியர் வீரர்கள் இல்லாமல் அந்த தொடரில் இளம் வீரர்களை கொண்ட அணியுடன் களமிறங்கிய தோனி அணியை மிகச் சிறப்பாக வழி நடத்திச் சென்று இறுதியில் பாகிஸ்தான அணியை வீழ்த்தி உலகக் கோப்பையையும் கையில் ஏந்திய தருணத்தை இன்றளவும் எளிதில் யாராலும் மறந்துவிட முடியாது.

2007 t20 worldcup

அதிலும் குறிப்பாக பாகிஸ்தான் வீரர் மிஸ்பா உல் ஹக் கொடுத்த கேச்சை ஸ்ரீசாந்த் பிடித்ததும் இந்திய அணியின் உலகக்கோப்பை கனவு நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு நினைவான அந்த தருணம் ரசிகர்கள் மனதில் இன்றளவும் நீங்கா இடம் பிடித்துள்ளது. இந்நிலையில் அந்த உலகக் கோப்பை தொடரின் கடைசி ஓவரை வீசிய இந்திய வீரர் ஜோஹிந்தர் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டியில் கடைசி ஓவரை அனுபவமுள்ள வீரர்கள் இருந்தும் ஜோஹிந்தர் சர்மாவை நம்பி தோனி அவர் கையில் கொடுத்தார். அவரும் அந்த கடைசி ஓவரை அற்புதமாக வீசி கோப்பையை இந்திய அணிக்கு பெற்றுத்தந்தார். மேலும் அந்த இறுதி ஓவர் குறித்து ஏற்கனவே பேசியிருந்த அவர் கூறுகையில் : தோனி என்னிடம் வந்து எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம்.

joginder

தோல்வி வந்தால் நான் பொறுப்பு ஏற்றுக்கொள்கிறேன். உன்னுடைய திறமை எனக்கு என்னவென்று நன்றாக தெரியும். நீ உன்னுடைய விருப்பப்படியே பந்துவீசு நிச்சயம் அவரை உன்னால் ஆட்டமிழக்க வைக்க முடியும் என்று நம்பிக்கை அளித்தார். அதன்படியே நான் மிஸ்பா உல் ஹக்குக்கு எதிராக பந்தினை மெதுவாக வீசி விக்கெட்டை எடுத்ததாக ஜோஹிந்தர் சர்மா கூறினார்.

- Advertisement -

இந்நிலையில் தற்போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்துள்ள அவர் கூறுகையில் : அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்தும் நான் ஓய்வு பெறுகிறேன். 2002 முதல் 2017 ஆம் ஆண்டு வரை கிரிக்கெட் வாழ்க்கை எனக்கு மிகவும் அற்புதமாக இருந்தது. நான் தற்போது கிரிக்கெட்டில் இருந்து விலகி அடுத்த கட்டப் பணிகளில் ஈடுபட தயாராகி விட்டேன். எனவே நான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : 2021 டி20 உ.கோ’யில் சொதப்பிய அவர் 6 மாசத்துக்கு ஒரு டைம் தான் அடிப்பாரு – இளம் வீரரை விளாசும் சபா கரீம்

39 வயதான ஜோஹிந்தர் சர்மா இந்திய அணிக்காக 2004 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரை 4 ஒருநாள் போட்டிகள் மற்றும் 4 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். அதுமட்டும் இன்றி ஐபிஎல் தொடரிலும் அவர் 16 போட்டிகளில் பங்கேற்று விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement