2021 டி20 உ.கோ’யில் சொதப்பிய அவர் 6 மாசத்துக்கு ஒரு டைம் தான் அடிப்பாரு – இளம் வீரரை விளாசும் சபா கரீம்

Karim
Advertisement

நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 தொடரை 2 – 1 (3) என்ற கணக்கில் வென்ற இந்தியா தன்னை உலகின் நம்பர் ஒன் டி20 கிரிக்கெட் அணி என்பதை நிரூபித்துள்ளது. முன்னதாக 2022 ஆசிய மற்றும் டி20 உலகக் கோப்பையில் தோல்வியை சந்திக்கும் வகையில் கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட பெரும்பாலான சீனியர்கள் சுமாராக செயல்பட்டதால் 2024 டி20 உலக கோப்பைக்கு முன்பாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து ஹர்திக் பாண்டியா தலைமையில் புதிய அணியை உருவாக்கும் வேலையை பிசிசிஐ துவங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக அடித்து நொறுக்க வேண்டிய ஓப்பனிங் இடத்தில் தடவலாக செயல்பட்ட கேஎல் ராகுலுக்கு பதிலாக இசான் கிசான் வாய்ப்பு பெற்றார்.

ஆனால் இலங்கை மற்றும் நியூசிலாந்து ஆகிய 2 தொடர்களிலுமே படு மோசமாக செயல்பட்ட அவர் கடைசியாக இந்தியாவுக்காக விளையாடிய 14 டி20 போட்டிகளில் ஒரு அரை சதம் கூட அடிக்காமல் கொடுக்கப்பட்ட வாய்ப்புகளை வீணடித்து வருகிறார். கடந்த 2020, 2021 ஆகிய ஐபிஎல் தொடரில் மும்பை அணியில் அதிரடியாக செயல்பட்டதால் இந்தியாவுக்காக அறிமுகமாகி முதல் போட்டியிலேயே அரை சதமடித்த அவர் 2022 சீசனில் மும்பை அணியில் 15 கோடிக்கு தக்க வைக்கப்பட்டார்.

- Advertisement -

6 மாசத்துக்கு ஒருமுறை:
ஆனால் அதில் ஃபார்மை இழந்து மோசமாக செயல்பட்ட அவர் வரலாற்றில் முதல் முறையாக புள்ளி பட்டியலில் மும்பை கடைசி இடத்தை பிடிப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்தார். இருப்பினும் இந்தியாவுக்காக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஓரளவு சிறப்பாக செயல்பட்ட அவர் கடந்த டிசம்பரில் வங்கதேச மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் அதிரடியாக இரட்டை சதமடித்து சாதனை படைத்தார். அதனால் முழுமையாக ஃபார்முக்கு திரும்பி விட்டார் என்றும் இந்தியாவுக்கு அதிரடியான இடதுகை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கிடைத்து விட்டார் என்றும் ரசிகர்கள் அவரை நினைத்து மகிழ்ச்சியடைந்தனர்.

Ishan-Kishan

ஆனால் அதன்பின் வாய்ப்பு பெற்ற எந்த ஒரு போட்டியிலும் அசத்தாத அவர் இயற்கையாகவே சுழல் பந்து வீச்சை அடித்து நொறுக்கும் இந்திய வீரர்களுக்கு மத்தியில் சுழல் பந்துகளில் க்ளீன் போல்ட்டாவதை வழக்கமாக வைத்துள்ளார். மேலும் நியூசிலாந்து டி20 தொடரில் வெறும் 24 ரன்கள் மட்டுமே எடுத்த அவர் ஒருநாள் தொடரில் வெறும் 30 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதை விட அதிக பந்துகளை எதிர்கொண்டு சொற்ப ரன்களில் ஆட்டமிழக்கும் அவர் கேஎல் ராகுலை மிஞ்சி சில மோசமான சாதனைகளை படைத்து புதிய தடவல் நாயகனாக உருவெடுத்துள்ளது ரசிகர்களை கடுப்பாக வைத்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் 2021 ஐபிஎல் தொடரில் அதிரடியாக செயல்பட்டதால் 2021 டி20 உலக கோப்பையில் தேர்வு செய்யப்பட்ட இசான் கிசான் மொத்தமாக சொதப்பி தோல்விக்கு காரணமாக அமைந்ததாக முன்னாள் தேர்வுக்குழு தலைவர் சபா கரீம் விமர்சித்துள்ளார். அதாவது தொடர்ச்சியாகவும் அழுத்தமான போட்டிகளிலும் இசான் கிசான் அசத்துவதில்லை என்று தெரிவிக்கும் 6 மாதத்திற்கு ஒருமுறை அடித்தால் எப்படி இந்திய அணியில் தொடர்ந்து இடம் கிடைக்கும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Karim

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “இஷான் கிசான் இவ்வாறு சொதப்புவது முதல் முறையல்ல. 2021 டி20 உலக கோப்பைக்கு முன்பாக அவர் நிறைய ரன்களை அடித்தார். ஆனால் உலகக்கோப்பையில் அவர் மொத்தமாக சொதப்பினார். அதனால் தான் அதன்பின் இந்திய அணியிலிருந்து அவர் கழற்றி விடப்பட்டார். இந்திய அணியில் இடம் பிடிக்க நீங்கள் தொடர்ந்து ரன்கள் அடிக்க வேண்டும். அவர் பொறுமை அணுகுமுறை ஷாட்களை தேர்ந்தெடுப்பதில் பயிற்சி எடுக்க வேண்டும்”

இதையும் படிங்க: ஓப்பனிங் இடத்தை பிடித்த சுப்மன் கில் – விரைவில் உடைக்க வாய்ப்புள்ள ஷிகர் தவானின் 3 முக்கிய சாதனைகள்

“6 மாதத்திற்கு ஒருமுறை பெரிய இன்னிங்ஸ் விளையாடி விட்டு பின்னர் ரன்கள் அடிக்க முடியாமல் தடுமாறுவது ஏன்? உங்களுக்கு திறமையும் வாய்ப்புகளும் கிடைக்கும் போது அதில் நீங்கள் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்த வேண்டும்” என்று கூறினார். அப்படி சொதப்பி வரும் அவருக்கு பதிலாக பிரிதிவி ஷா’க்கு வாய்ப்பு கொடுக்குமாறு ஏற்கனவே கோரிக்கைகள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement