ஓப்பனிங் இடத்தை பிடித்த சுப்மன் கில் – விரைவில் உடைக்க வாய்ப்புள்ள ஷிகர் தவானின் 3 முக்கிய சாதனைகள்

INd vs SA Shubman Gill Dhawan
- Advertisement -

2023 அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலக கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் செயல்பட்டு வரும் இந்திய கிரிக்கெட் அணி அதற்கு தயாராகும் வகையில் களமிறங்கிய இலங்கை மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை தலா 3 – 0 (3) என்ற கணக்கில் கைப்பற்றி ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் அணியாக முன்னேறியது. மேலும் இந்த உலகக் கோப்பையில் ரோகித் சர்மாவுடன் கேஎல் ராகுல் – சிகர் தவான் ஆகியோரில் தொடக்க வீரராக களமிறங்க போவது யார் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அந்த இருவருமே சமீபத்திய தொடர்களில் சுமாராக செயல்பட்ட காரணத்தால் 2022இல் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடர்களில் அடுத்தடுத்த தொடர் நாயகன் விருது வென்று அசத்திய சுப்மன் கில் வாய்ப்பு பெற்றார்.

அந்த வாய்ப்பை வீணடிக்காத வகையில் இலங்கைத் தொடரில் சதமடித்த அவர் நியூசிலாந்து தொடரில் ஒரு படி மேலே சென்று இளம் வயதில் இரட்டை சதமடித்த வீரராக உலக சாதனை படைத்து அசத்தினார். மேலும் நியூசிலாந்து டி20 தொடரிலும் சதமடித்து அசத்திய அவர் டெஸ்ட், ஒருநாள், டி20 என 3 வகையான கிரிக்கெட்டிலும் அசத்தப் போகும் வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக தன்னை அடையாளப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

3 சாதனைகள்:
அத்துடன் 2023 உலக கோப்பையில் ரோகித் சர்மாவுடன் களமிறங்கும் தொடக்க வீரராகவும் தன்னை அடையாளப்படுத்தியுள்ள அவரால் 37 வயதை நெருங்கி விட்ட சிகர் தவானுடைய வாய்ப்பு முடிந்து போனதாகவே பார்க்கப்படுகிறது. அப்படி சிகர் தவான் இடத்தை பிடித்துள்ள சுப்மன் கில் விரைவில் உடைப்பார் என்று கருதப்படும் அவருடைய 3 முக்கிய சாதனைகளைப் பற்றி பார்ப்போம்:

Shubman Gill

1. அதிவேக 2000: சமீபத்திய நியூசிலாந்து தொடரில் அதிரடியாக செயல்பட்ட சுப்மன் கில் ஒருநாள் கிரிக்கெட்டில் 1000 ரன்களை அதிவேகமாக அடித்த இந்திய வீரர் என்ற சிகர் தவான் சாதனையை உடைத்து புதிய சாதனை படைத்தார். அதைத்தொடர்ந்து ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 2000 ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற தவானுடைய மற்றொரு சாதனையும் அவர் முறியடிக்க வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளது.

- Advertisement -

ஏனெனில் இதற்கு முன் 48 இன்னிங்ஸ்சில் சிகர் தவான் 2000 ரன்களை எடுத்து சாதனை படைத்துள்ள நிலையில் சுப்மன் கில் இதுவரை 21 இன்னிங்ஸ்சிலேயே 1254 ரன்களை எடுத்துள்ளார். அதனால் அடுத்த 27 இன்னிங்ஸ்சில் இன்னும் 746 ரன்களை எடுத்தால் அந்த சாதனையை அவர் எளிதாக உடைத்து விடலாம்.

Shuman Gill

2. 5 சதங்கள்: அதேபோல் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 4 சதங்களை அடித்த இந்திய வீரர் என்ற ஷிகர் தவான் சாதனையையும் (24 இன்னிங்ஸ்) சமீபத்திய நியூசிலாந்து ஒருநாள் தொடரில் உடைத்த சுப்மன் கில் (21 இன்னிங்ஸ்) அடுத்ததாக அதிவேகமாக 5 சதங்கள் அடித்த இந்திய வீரர் என்ற அவருடைய சாதனையை உடைப்பதற்கும் அதிக வாய்ப்புகள் உருவாகியுள்ளது.

- Advertisement -

இதற்கு முன் ஷிகர் தவான் 28 இன்னிங்ஸில் 5 சதங்களை அடித்த நிலையில் அடுத்த 7 போட்டிகளுக்குள் சதத்தை அடிக்கும் பட்சத்தில் அந்த சாதனையும் சுப்மன் கில் பெயரில் சொந்தமாகும். தற்போது அவர் உள்ள ஃபார்முக்கு அதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்றே சொல்லலாம்.

3. ஐசிசி நாயகன்: முன்னதாக சாதாரண இரு தரப்பு தொடர்களை விட ஐசிசி தொடர்களில் அபாரமாக செயல்பட்டது தான் சிகர் தவான் மிகச் சிறந்த வீரராக ஜொலிப்பதற்கு முக்கிய காரணமாகும். ஏனெனில் 2013 சாம்பியன்ஸ் டிராபியில் அதிக ரன்கள் குவித்து தங்க பேட் விருது வென்று இந்தியா கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றிய அவர் 2015 உலக கோப்பையில் 400க்கும் மேற்பட்ட ரன்களை எடுத்து 2017 சாம்பியன்ஸ் டிராபியில் மீண்டும் அதிக ரன்கள் குவித்து வெற்றிக்கு போராடினார்.

இதையும் படிங்க:வீடியோ : அஷ்வின் சாய்க்க அஷ்வின் போலவே பந்து வீசும் பவுலரை எதிர்கொள்ளும் ஸ்மித் – ஆஸி வீரர்கள் வெறியுடன் பயிற்சி

அதனால் மிஸ்டர் ஐசிசி என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அவர் ஐசிசி தொடர்களில் அதிவேகமாக 1000 ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளார். குறிப்பாக சச்சின் 18 இன்னிங்ஸில் எடுத்த 1000 ரன்களை 16 இன்னிங்ஸில் எடுத்து அந்த சாதனையை ஷிகர் தவான் படைத்துள்ளார். இந்த சாதனையை விரைவில் உடைக்க முடியாது என்றாலும் 2023 உலகக்கோப்பை முதல் தன்னுடைய ஐசிசி பயணத்தை துவங்குவார் என்று எதிர்பார்க்கப்படும் சுப்மன் கில் இன்னும் ஓரிரு வருடத்திற்குள் முறியடிக்க வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement