கிங் ஆஃப் நாக் அவுட்ஸ் : ஐபிஎல் வரலாற்றில் பிளே ஆஃப் சுற்றில் அதிக ரன்கள் குவித்த டாப் 5 வீரர்களின் பட்டியல்

csk
- Advertisement -

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 26-ஆம் தேதியன்று கோலாகலமாக துவங்குகிறது.  இந்தத் தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள அட்டவணையின்படி முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. ஐபிஎல் எனும் கோப்பையை வெல்வது மும்பை, சென்னை போன்ற அணிகளுக்கு மிக சுலபமான ஒன்றாக இருந்து வருகிறது.

final

- Advertisement -

கிங் ஆஃப் நாக்-அவுட்ஸ்:
மறுபுறம் பெங்களூர் போன்ற அணிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வருகிறது. இவை அனைத்தும் முதலில் நடைபெறும் ஏலத்தில் தரமான வீரர்களை கண்டறிந்து வாங்குவத்தில் இருக்கிறது. அப்படியே தரமான வீரர்களை வாங்கி லீக் சுற்றில் அசத்தி பிளே ஆஃப் சுற்றுக்கு சென்றாலும் கூட அதில் சிறப்பாக செயல்படுவதற்கு மிக மிக தரமான வீரர்கள் தேவைப்படுகிறது. அதே சமயம் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் கூட பிளே ஆஃப் சுற்று எனப்படும் நாக்-அவுட் சுற்றில் விளையாடினால் சற்று பதட்டப்படுவார்கள்.

ஏனெனில் பைனல் உட்பட நாக்-அவுட் சுற்று போட்டிகளில் தோற்றால் நடையை கட்டுவதுடன் கோப்பையையும் வெல்ல முடியாது என்ற அழுத்தம் நிறைந்த சூழ்நிலை ஏற்படும். அது போனற நேரத்தில் வெறும் ஒரு நொடி தடுமாறினால் போட்டியின் முடிவு தலைகீழாக மாறிவிடும். அப்படிப்பட்ட அழுத்தம் நிறைந்த நாக்-அவுட் சுற்று போட்டிகளில் கெத்தாக நின்று தில்லாக விளையாடி அதிக ரன்களை குவித்து தங்கள் அணிக்கு கோப்பையை வென்று கொடுத்த வீரர்களை பற்றி பார்ப்போம்.

5. முரளி விஜய்: ஐபிஎல் தொடங்கிய ஆரம்ப காலங்களில் தமிழகத்தைச் சேர்ந்த நட்சத்திர வீரர் முரளி விஜய் தனது சொந்த ஊரான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாடினார். ஆரம்ப காலங்களில் அதிரடியாக விளையாடிய அவர் ஆஸ்திரேலிய ஜாம்பவான்கள் மேத்தியூ ஹைடன், மைக் ஹசி போன்றவர்களுடன் இணைந்து ஓபனிங் பேட்ஸ்மேனாக எதிரணிகளை பந்தாடியதை சென்னை ரசிகர்களால் மறக்க முடியாது. குறிப்பாக 2011 ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிராக நடந்த பைனல் போட்டியில் அதிரடி காட்டிய இவர் 52 பந்துகளில் 95 ரன்கள் விளாசி சென்னை அணி 2-வது முறையாக கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார். மொத்தத்தில் பிளே ஆப் போட்டிகளில் 364 ரன்களை குவித்த அவர் இந்தப் பட்டியலில் 5-வது இடம் பிடித்துள்ளார்.

- Advertisement -

4. மைக் ஹசி: மிஸ்டர் கிரிக்கெட் என ரசிகர்களால் கொண்டாடப்படும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நட்சத்திர வீரர் மைக் ஹஸ்ஸி மற்றொரு ஆஸ்திரேலிய வீரர் மேத்தியூ ஹைடனின் ஓய்வுக்கு பின் சென்னை அணியின் தொடக்க வீரராக விளையாடினார்.

Hussey Brothers

ஹைடன் இல்லாத குறையை அப்படியே நிவர்த்தி செய்த இவர் பெங்களூர் அணிக்கு எதிரான 2011 ஐபிஎல் இறுதிப் போட்டியில் முரளி விஜய் உடன் இணைந்து 159 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து சென்னையின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார். அந்த போட்டியில் அவர் அடித்த 63 ரன்களையும் சேர்த்து பிளே ஆஃப் போட்டிகளில் மொத்தம் 388 ரன்கள் அடித்துள்ள அவர் இந்தப் பட்டியலில் 4வது இடம் பிடிக்கிறார்.

- Advertisement -

3. ஷேன் வாட்சன்: இந்தப் பட்டியலில் மற்றுமொரு ஆஸ்திரேலிய வீரராக ஆல்-ரவுண்டர் ஷேன் வாட்சன் இடம் பிடித்துள்ளார். கடந்த 2008-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்கப்பட்ட வருடத்தின் முதல் கோப்பையை வென்ற ஷேன் வார்னே தலைமையிலான ராஜஸ்தான் அணியில் முக்கிய பங்காற்றிய அவர் அதன்பின் பெங்களூர் போன்ற அணிகளுக்கு விளையாடினார். இறுதியில் கடந்த 2018 – 2020 வரை எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை அணிக்காக விளையாடிய அவர் 2018 ஐபிஎல் தொடரில் அபாரமாக செயல்பட்டு வந்தார்.

watson

குறிப்பாக ஹைதராபாத் அணிக்கு எதிராக நடந்த மாபெரும் இறுதி போட்டியில் அந்த அணி நிர்ணயித்த 179 ரன்கள் இலக்கை தனி ஒருவனாக துரத்திய அவர் சதமடித்து 117* ரன்கள் விளாசி சென்னை 3-வது முறையாக கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார். இதுபோல பிளே ஆப் போட்டிகளில் மொத்தம் 389 ரன்களைக் குவித்துள்ள அவர் இந்த பட்டியலில் 3-வது இடம் பிடிக்கிறார்.

- Advertisement -

2. எம்எஸ் தோனி: இந்தப் பட்டியலில் எம்எஸ் தோனி இடம் பிடிப்பதில் நிச்சயமான ஆச்சரியமாகும். ஏனெனில் இந்த பட்டியலில் இடம் பிடிக்கும் எஞ்சிய 4 பேட்ஸ்மேன்களும் டாப் ஆர்டர் வீரர்களாக இருக்க ஒரு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக கருதப்படும் எம்எஸ் தோனி இந்தப் பட்டியலில் இடம் பிடிப்பது உண்மையாகவே அவரின் தரத்தை காட்டுகிறது என்றே கூறலாம். சென்னை அணிக்காக 4 கோப்பைகளை வென்று கொடுத்த அவர் பிளே போட்டிகளில் 504 ரன்களை குவித்து இந்த பட்டியலில் 2-வது இடத்தை பிடித்துள்ளார்.

Dhoni

1. சுரேஷ் ரெய்னா: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக காலம் காலமாக விளையாடி வந்த சுரேஷ் ரெய்னா ஆரம்ப காலங்களில் உலகின் எப்பேர்பட்ட தரமான பந்துவீச்சாளர்களையும் அசால்டாக எதிர்கொண்டு பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்கவிட்டு வந்தார். அதன் காரணமாக அவருக்கு பந்து வீசுவது என்றாலே அந்த சமயங்களில் எதிரணி பந்துவீச்சாளர்கள் தயங்குவார்கள். அந்த அளவுக்கு அதிரடியாக பேட்டிங் செய்து பல சாதனைகளை படைத்த அவரை சின்னத் தல என சென்னை ரசிகர்கள் கொண்டாடினர்.

சொல்லப்போனால் இன்று சென்னை அணி 4 கோப்பைகளை வென்று ஒரு வெற்றிகரமான அணியாக திகழ்வதற்கு அவர் பிளே ஆஃப் சுற்றில் தைரியமாகவும் அதிரடியாகவும் விளையாடியதே காரணமாகும். அப்படிப்பட்ட அவர் 714 ரன்களை குவித்து ஐபிஎல் வரலாற்றில் பிளே ஆஃப் சுற்றில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற மாபெரும் சாதனையை படைத்துள்ளார்.

இதையும் படிங்க : ஐபிஎல் 2022 : முதல் முறையாக கப் வாங்கி தருவாரா டு பிளேஸிஸ் – முந்தைய கேப்டன்ஷிப் எப்படி, ஒரு அலசல்

குறிப்பாக 2010 ஆம் ஆண்டு மும்பை அணிக்கு எதிராக நடந்த ஐபிஎல் பைனலில் 57 ரன்கள் குவித்த அவர் சென்னை அணி முதல் முறையாக கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருது பெற்றார். இதன் காரணமாகவே மிஸ்டர் ஐபிஎல் என அழைக்கப்படும் அவரை சென்னை அணி நிர்வாகம் இம்முறை வாங்காதது ரசிகர்களுக்கு பெரிய வருத்தமாக உள்ளது. இந்த பட்டியலில் இடம் இடித்துள்ள அனைவருமே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியவர்கள் என்பது ஆச்சர்யமான ஒன்றாகும்.

Advertisement