ஐபிஎல் 2022 : முதல் முறையாக கப் வாங்கி தருவாரா டு பிளேஸிஸ் – முந்தைய கேப்டன்ஷிப் எப்படி, ஒரு அலசல்

Faf
- Advertisement -

ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 26-ஆம் தேதியன்று கோலாகலமாக துவங்கி மே 29-ஆம் தேதி வரை 2 மாதங்களுக்கும் மேல் ரசிகர்களுக்கு த்ரில் விருந்து படைக்க காத்திருக்கிறது. இந்த தொடரில் கோப்பையை வெல்வதற்காக நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட அனைத்து அணிகளும் மிகத் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வெல்ல டெல்லி, பெங்களூர், பஞ்சாப் போன்ற அணிகள் இந்த வருடம் எப்படியாவது கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் போராட தயாராகி வருகின்றன.

faf du plessis RCB

- Advertisement -

இந்த தொடரில் அதிக ரசிகர்களை கொண்ட ஒரு அணியாக கருதப்படும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இந்த வருடமாவது சாம்பியன் பட்டம் வெல்லும் என்ற எதிர்பார்ப்பு அந்த அணி ரசிகர்ளிடையே காணப்படுகிறது. ஏனெனில் இந்த வருடம் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த அனுபவ வீரர் பப் டு பிளேஸிஸ் தலைமையில் அந்த அணி புத்துணர்ச்சியுடன் புது ஜெர்ஸியையுடன் களமிறங்க தயாராகியுள்ளது.

பெங்களூரு அணியும் கைக்கு எட்டாத கோப்பையும்:
பொதுவாகவே நட்சத்திர தரம் நிறைந்த இந்திய மற்றும் வெளிநாட்டு வீரர்களுடன்
ஒவ்வொரு வருடம் ஐபிஎல் தொடங்கும் போதும் “ஈ சாலா கப் நம்தே” என்ற கோசத்துடன் பெங்களூரு அணி கோப்பையை வெல்ல கங்கணம் கட்டுவது வழக்கமான ஒன்றாகும். ஆனால் அதற்கு ஏற்றார்போல் எந்த ஒரு வருடத்திலும் அந்த அணியின் செயல்பாடு மிகச்சிறந்ததாக இருந்ததில்லை என்றே கூற வேண்டும். இத்தனைக்கும் அந்த அணியின் கிறிஸ் கெயில், ஏபி டிவிலியர்ஸ், கேஎல் ராகுல் என எத்தனையோ தரமான வீரர்கள் விளையாடிய போதிலும் ஏதோ ஒரு முக்கியமான நேரத்தில் சறுக்கும் அந்த அணி கோப்பையை சர்வ சாதாரணமாக கோட்டைவிட்டு வருகிறது.

RCB

இத்தனைக்கும் இதுநாள் வரை அனில் கும்ப்ளே, விராட் கோலி போன்றவர்கள் கேப்டன்ஷிப் செய்த போதிலும் அந்த அணியால் கோப்பையை நெருங்க முடிந்ததே தவிர முத்தமிட முடியவில்லை. 2011-ஆம் ஆண்டு கும்ப்ளே தலைமையில் இறுதிப்போட்டி வரை முன்னேறி தோல்வியடைந்த அந்த அணி 2016-ஆம் ஆண்டு மீண்டும் பைனல் வரை சென்று பரிதாப தோல்வி அடைந்தது. குறிப்பாக அந்த தொடரில் கேப்டன் விராட் கோலி 976 ரன்கள் குவித்து தனி ஒருவனாக போராடிய போதிலும் இறுதி போட்டியில் முக்கால்வாசி வெற்றியை எட்டிப்பிடித்த அந்த அணி கடைசி நேரத்தில் சொதப்பி கோப்பையை ஹைதராபாத் அணிக்கு பரிசளித்தது.

- Advertisement -

சாதிப்பாரா டு பிளேஸிஸ்:
இதனால் ஒவ்வொரு முறையும் இப்படி தோல்வி அடைந்து கேலி கிண்டலுக்கு உள்ளாகி வரும் அந்த அணி ஒரு கோப்பையை வெல்ல வேண்டுமென்ற வெறியுடன் இந்த வருடம் களமிறங்குகிறது. அப்படிப்பட்ட நிலையில் புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள டு பிளேஸிஸ் கோப்பையை வாங்கி தரும் அளவுக்கு தகுதியானவரா என்பதை பற்றி பார்ப்போம்.

Faf-1

1. தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த டு பிளேஸிஸ் அந்த அணிக்கு 36 டெஸ்ட், 39 ஒருநாள், 40 டி20 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு 3 வகையான கிரிக்கெட்டிலும் தென் ஆப்பிரிக்காவை வழி நடத்திய அனுபவம் கொண்டவர். குறிப்பாக கடந்த 2019-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பை போன்ற மிகப்பெரிய தொடரில் கேப்டன்ஷிப் செய்த அனுபவம் நிறைந்தவர்.

- Advertisement -

2. தற்போது 37 வயது கடந்துள்ள அவர் முதல் முறையாக கடந்த 2011-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்காவுக்கு விளையாடினார். அதில் அபாரமாக செயல்பட்டதன் காரணமாக கடந்த 2013-ஆம் ஆண்டு அந்த அணியின் டி20 கேப்டன் பதவி அவரைத் தேடி வந்தது.

faf

3. ஐபிஎல் ஒரு டி20 கிரிக்கெட் தொடர் என்பதால் இதற்கு முன் தென்ஆப்பிரிக்காவுக்கு அவர் 40 டி20 போட்டிகளில் கேப்டன்ஷிப் செய்துள்ளார். அவர் அதில் 25 வெற்றிகளையும் 15 தோல்விகளையும் பதிவு செய்துள்ளார். மேலும் 2014 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் நடந்த ஐசிசி டி20 உலகக் கோப்பைகளில் தென்ஆப்பிரிக்காவை வழிநடத்தினார்.

- Advertisement -

4. அது மட்டுமல்லாமல் மசான்சி பிரீமியர் லீக், கரீபியன் பிரீமியர் லீக், வங்கதேச பிரிமியர் லீக் போன்ற டி20 தொடர்களிலும் இதற்கு முன் அவர் கேப்டன்ஷிப் செய்துள்ளார்.

faf 1

5. மொத்தமாக 79 டி20 போட்டிகளில் கேப்டன்ஷிப் செய்துள்ள அவர் அதில் 43 வெற்றிகளையும் 34 தோல்விகளையும் பதிவு செய்துள்ளார். 1 போட்டி டை, 1 போட்டி முடிவின்றி போனது. அவரின் டி20 கேப்டன்ஷிப் வெற்றி சராசரி விகிதம் 55% ஆகும்.

6. பேட்டிங்கில் ஓபனிங் இடத்தில் அதிரடியாக விளையாடக் கூடிய அவர் இதற்கு முன் தன்னை ஒரு திறமையான பேட்ஸ்மேனாகவும் நிரூபித்தவர். குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கடந்த பல வருடங்களாக விளையாடி வந்த அவர் அந்த அணியின் பல சரித்திர வெற்றிகளில் பங்காற்றியிருந்தார். அதிலும் குறிப்பாக 2018 அரைஇறுதி 2021 இறுதி போட்டிகளில் மிகச் சிறப்பாக செயல்பட்டு ஆட்டநாயகன் விருது வென்ற அவர் அந்த 2 வருடங்களில் சென்னை அணி கோப்பையை வெல்ல முக்கிய துருப்பு சீட்டாக இருந்தார்.

Faf Du Plessis RCB

மொத்தத்தில் ஒரு பேட்ஸ்மேனாகவும் ஒரு கேப்டனாகவும் பெங்களூர் அணியை மிகச் சிறப்பாக வழிநடத்தி முதல் கோப்பையை வாங்கித் தருவதற்கு டு பிளசிஸ் தகுதியானவராக இருக்கிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Advertisement