டெஸ்ட் வரலாற்றில் ஆல்-அவுட்டான இன்னிங்ஸ்சில் அதிகமுறை டாப் ஸ்கோர் அடித்த டாப் 5 ஜாம்பவான்கள்

Sachin Tendulkar
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் நாட்டுக்காக 11 பேர் இணைந்து எதிரணியில் இருக்கும் 11 வீரர்களை எதிர்த்து மிகச் சிறப்பாக செயல்பட்டால் தான் வெற்றியை பெற முடியும். அதனாலேயே கிரிக்கெட் என்பது அணி விளையாட்டு அழைக்கப்படும் நிலையில் பெரும்பாலான போட்டிகளில் குறைந்தது 4 – 5க்கும் மேற்பட்ட வீரர்கள் சிறப்பாக செயல்பட்டால் தான் வெற்றியை பெறமுடியும். ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பது போல் ஒரு போட்டியில் எந்தளவுக்கு நிறைய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு பங்காற்றுகிறார்களோ அந்த அளவுக்கு வெற்றி நிச்சயமாக அந்த அணிக்கு எளிதாக வந்து சேரும்.

- Advertisement -

குறிப்பாக பேட்டிங்கில் முதலில் பேட்டிங் செய்தாலும் இலக்கை சேசிங் செய்தாலும் வெற்றிக்கு குறைந்தது 2 – 3 பேட்ஸ்மேன்கள் சேர்ந்து ரன்களை குவிப்பது அவசியமாகும். ஆனாலும் சில சமயங்களில் எதிரணியில் இருக்கும் பவுலர்கள் தங்களது முழு திறமையை வெளிப்படுத்தி பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவாலை கொடுத்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை எடுத்து தங்களது அணியின் வெற்றிக்கு போராடுவார்கள்.

அதற்கு பேட்டிங் செய்யும் அணியில் இருக்கும் பெரும்பாலான வீரர்கள் வளைந்து கொடுத்தாலும் தரத்திற்கும் திறமைக்கும் பிறந்த வீரனாக எதிரணிக்கு அஞ்சாமல் தனி ஒருவனாக நிற்கும் ஒரு பேட்ஸ்மேன் மட்டும் முடிந்த வரை முழு மூச்சை கொடுத்து பெரிய ரன்களை எடுத்து வெற்றிக்காக போராடுவார். இறுதியில் வெற்றி தோல்வி என்பதையும் தாண்டி அப்போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரராக நிற்கும் அந்த பேட்ஸ்மேன் ரசிகர்களின் மனதை வென்று உலகின் மிகச்சிறந்த வீரர் என்று போற்றப்படுவார். அந்த வகையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு அணி ஆல் அவுட்டான இன்னிங்ஸ்களில் அதிக முறை அதிகபட்ச ஸ்கோர் எடுத்த 5 பேட்ஸ்மேன்கள் பற்றி பார்ப்போம்:

Border

5. ஆலன் பார்டர் 37: முன்னாள் நட்சத்திர பேட்ஸ்மேன் மற்றும் ஜாம்பவான் கேப்டன் ஆலன் பார்டர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 10000 ரன்களை குவித்த முதல் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் என்ற வரலாற்றை படைத்தவர்.

- Advertisement -

அந்த வகையில் தனது அபார பேட்டிங்கால் ஆஸ்திரேலியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக்கொடுத்த இவர் அந்த அணிகாக விளையாடியபோது ஆல் அவுட்டான போட்டிகளில் 37 இன்னிங்ஸ்களில் அதிகபட்ச ஸ்கோர் அடித்த பேட்ஸ்மேனாக வெற்றிக்காகப் போராடி பட்டியலில் 5-வது இடம் பிடிக்கிறார்.

gavaskar 1

4. சுனில் கவாஸ்கர் 38: 80களில் உலகையே மிரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் இருந்த முரட்டுத்தனமான பவுலர்களையும் தனது அற்புதமான பேட்டிங்கில் தெறிக்கவிட்ட இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 10000 ரன்களை எடுத்த முதல் பேட்ஸ்மேன் என்ற வரலாற்றை படைத்தவர்.

- Advertisement -

இவர் விளையாடிய போட்டிகளில் 141 இன்னிங்சில் இந்திய ஆல் அவுட்டானபோது அதில் 38 முறை அதிகபட்ச ஸ்கோர் எடுத்து இந்தியாவின் வெற்றிக்காக போராடியவராக இப்பட்டியலில் இடம் 4-வது இடம் பிடிக்கிறார்.

Chanderpaul 1

3. சிவ்நரேன் சந்தர்பால் 52: 90களின் இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வந்த இவர் வித்தியாசமாக பேட்டிங் செய்யும் யுத்தியை வைத்து பல உலகத் தரம் வாய்ந்த பவுலர்களையும் திணறடித்தவர்.

- Advertisement -

டெஸ்ட் கிரிக்கெட்டில் 10000 ரன்களை எடுத்த மகத்தான ஜாம்பவான்களில் ஒருவரான இவர் அந்த அணிக்காக விளையாடிய போது 52 ஆல் அவுட்டான இன்னிங்ஸ்களில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேனாக இப்பட்டியலில் 3-வது இடம் பிடிக்கிறார்.

lara

2. பிரையன் லாரா 53: கிரிக்கெட்டின் மகத்தான பேட்ஸ்மேன்களில் முக்கியமானவராக போற்றப்படும் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாரா தனது அணியின் வெற்றிக்காக போராடிய எத்தனையோ போட்டிகளில் இதர வீரர்கள் கைகொடுக்க தவறியதால் தோற்றதை ரசிகர்கள் மறக்கவே முடியாது.

10000க்கும் மேற்பட்ட ரன்களை குவித்த இவர் தமது காலத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடிய போட்டிகளில் 193 இன்னிங்சில் அந்த அணி ஆல் அவுட்டான போது 53 இன்னிங்ஸ்சில் அதிகபட்ச ஸ்கோரை எடுத்து தனி ஒருவனாக வெற்றிக்கு போராடியுள்ளார். குறிப்பாக கடந்த 2001இல் இலங்கைக்கு எதிராக நடந்த ஒரு டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எடுத்த 652 ரன்களில் இவர் மட்டும் 351 (221, 130) ரன்கள் எடுத்து போராடிய போதிலும் இறுதியில் தோல்வி கிடைத்தது யாராலும் மறக்க முடியாது.

Sachin 1

1. சச்சின் டெண்டுல்கர் 55: கிரிக்கெட் கண்ட மகத்தான மாணிக்கம் சச்சின் டெண்டுல்கர் இந்திய பேட்டிங்கை தனது தோள் மீது 24 வருடங்கள் சுமந்த பெருமைக்குரியவர். வெளிப்படையாக சொல்ல வேண்டுமெனில் 90களில் இவர் அடித்தால்தான் இந்தியா வெற்றி இல்லையேல் தோல்வி என்ற மோசமான நிலைமை இருந்ததை மறக்கவே முடியாது.

இதையும் படிங்க : IND vs ENG : இந்தியாவின் வெற்றியை காலி செய்த ஒற்றை கேட்ச், எப்போதான் திருந்துவாங்க இந்திய பீல்டர்கள்

அந்த வகையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன் என்ற மகத்தான சாதனை படைத்துள்ள இவர் தாம் விளையாடிய காலத்தில் இந்திய ஆல்-அவுட்டான 232 இன்னிங்சில் 55 இன்னிங்ஸ்களில் தனி ஒருவனாக போராடி அதிகபட்ச ஸ்கோர் எடுத்த பேட்ஸ்மேனாக இந்த பட்டியலில் முதலிடம் பிடிக்கிறார்.

Advertisement