மும்பைக்கு சாதகமா எவ்வளவு தீர்ப்பு கொடுப்பீங்க.. அம்பயரிங் பேனலில் இந்த மாற்றத்தை செய்ங்க.. டாம் மூடி

Tom Moody
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் பஞ்சாப்பை 9 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த மும்பை இந்தியன்ஸ் தங்களுடைய 3வது வெற்றியை பதிவு செய்தது. முன்னதாக பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் மும்பை அணிக்கு டாஸ் வீசியது முதல் பல தருணங்களில் நடுவர்கள் சாதகமாக நடந்து கொண்டதாக ரசிகர்கள் விமர்சித்தனர்.

அந்த சூழ்நிலையில் பஞ்சாப்புக்கு எதிரான இப்போட்டியில் ஹர்ஷல் படேல் வீசிய ஒரு பந்தை எதிர்கொண்ட ரோகித் சர்மா அடிக்காமல் காலில் வாங்கினார். அப்போது களத்தில் இருந்த நடுவர் எல்பிடபிள்யூ முறையில் அவுட் கொடுத்ததை தொடர்ந்து ரோஹித் சர்மா ரிவ்யூ செய்தார். ஆனால் அப்போது தெரியாத காரணத்திற்காக சில நிமிடங்கள் தாமதத்திற்கு பின் டிஆர்எஸ் நேரலையில் ஒளிபரப்பப்பட்டது.

- Advertisement -

சாதகமாக அம்பயர்கள்:
அந்த சோதனையில் ஹர்ஷல் வீசிய நேரான பந்து உண்மையில் அதிகம் நகரவில்லை. ஆனால் அந்தப் பந்து ரோகித்திடமிருந்து ஃபைன் லெக்கை நோக்கி நகர்வது போல் ஹாக்-ஐ டெக்னாலஜியில் காண்பிக்கப்பட்டது. அதனால் பந்து லெக் ஸ்டம்ப்பில் படாததால் 3வது நடுவர் களத்தில் இருந்த நடுவர் கொடுத்த தீர்ப்பை மாற்றி நாட் அவுட் வழங்கியது பஞ்சாப் அணியினரால் நம்ப முடியாததாக அமைந்தது.

அதை விட 15வது ஓவரின் கடைசி பந்தை அர்ஷிதீப் சிங் ஒய்ட் யார்கராக வீசினார். அந்த பந்தை சூரியகுமார் யாதவ் ஒதுங்கி சென்று அடிக்க முயற்சித்து தவற விட்டதால் களத்தில் இருந்த நடுவர் ஒயிட் கொடுக்கவில்லை. ஆனால் அப்போது பெவிலியினில் இருந்த டிம் டேவிட், பொல்லார்ட் உள்ளிட்ட மும்பை அணியினர் ரிவ்யூ எடுக்குமாறு சொன்னார்கள். அதைக் கேட்டு சூரியகுமார் ரிவ்யூ எடுத்தார். அதற்கு பெவிலியனில் இருப்பவர்கள் சொல்லி எப்படி ரிவ்யூ எடுக்கலாம்? என பஞ்சாப் கேப்டன் சாம் கரண் எதிர்ப்பை தெரிவித்தார்.

- Advertisement -

ஆனால் அதையெல்லாம் மதிக்காத நடுவர் ரிவியூவை ஏற்றுக்கொண்டார். அதை சோதித்த 3வது நடுவர் மும்பைக்கு சாதகமாக ஒயிட் வழங்கினார். அதே போல 19வது ஓவரில் சாம் கரண் வீசிய பந்து டிம் டேவிட்டின் பேட்டுக்கு கீழே சென்றதால் களத்தில் இருந்த நடுவர் ஒய்ட் கொடுக்கவில்லை. ஆனால் அதை டிம் டேவிட் ரிவிய எடுத்ததும் 3வது நடுவர் நித்தின் மேனன் மும்பைக்கு சாதகமாக ஒய்ட் வழங்கினார்.

இதையும் படிங்க: பாண்டியாவை மதிக்காத இளம் வீரர்.. தண்டனை நேரத்தில் பொறுப்பேற்று முடித்த ரோஹித் சர்மா.. நடந்தது என்ன?

இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டாம் மூடி 3வது அம்பயர்கள் ஸ்பெஷலிஸ்ட்டாக இருக்க வேண்டுமென ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “கேள்விக்குறிய பல முடிவுகள் ஒருதலைப்பட்சமாக எடுக்கப்பட்டுள்ளன. எனவே இது ஸ்பெசலிஸ்ட் 3வது அம்பயர்களை கருத்தில் கொள்ள வேண்டிய நேரமாகும். சில அம்பயர்கள் களத்தில் மட்டுமே செயல்பட பொருந்துமார்கள். எனவே 3வது அம்பயருக்கு குறிப்பிட்ட திறமையும் அனுபவமும் அவசியம்” என்று கூறியுள்ளார்.

Advertisement