பாண்டியாவை மதிக்காத இளம் வீரர்.. தண்டனை நேரத்தில் பொறுப்பேற்று முடித்த ரோஹித் சர்மா.. நடந்தது என்ன?

Akash Madhwal
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் பஞ்சாப்பை 9 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த மும்பை இந்தியன்ஸ் தங்களுடைய 3வது வெற்றியை பதிவு செய்துள்ளது. ஏப்ரல் 18ஆம் தேதி முல்லான்பூரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை 193 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக சூரியகுமார் யாதவ் 78, ரோஹித் சர்மா 36 ரன்கள் எடுத்தனர்.

அதை சேசிங் செய்த பஞ்சாப்புக்கு சாம் கரண், லியாம் லிவிங்ஸ்டன், ஜிதேஷ் சர்மா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் பெரிய ரன்களை எடுக்க தவறினார்கள். அதனால் 14/4 என்ற மோசமான துவக்கத்தை பெற்ற பஞ்சாப்புக்கு கடைசியில் சசாங் சிங் 41, அசுடோஸ் சர்மா 61 ரன்கள் எடுத்தும் வெற்றி காண முடியவில்லை. மும்பை சார்பில் அதிகபட்சமாக ஜஸ்பிரித் பும்ரா, ஜெராலட் கோட்சி தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

- Advertisement -

மதிக்காத இளம் வீரர்:
முன்னதாக இப்போட்டியில் கடைசி நேரத்தில் பும்ரா உள்ளிட்ட அனைத்து பவுலர்களையும் வெளுத்து வாங்கிய அசுடோஸ் சர்மா போராடி அவுட்டானார். அப்போது கிட்டத்தட்ட வெற்றி உறுதியானாலும் 18 ஓவரின் முடிவில் மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் 20 ஓவர்களை வீசி முடிக்கவில்லை. அதனால் கடைசி 2 ஓவர்களில் உள்வட்டத்திற்கு வெளியே ஒரு ஃபீல்டரை குறைத்து அம்பையர் தண்டனை கொடுத்தார்.

அந்த சூழ்நிலையில் 19வது ஓவரை வீசிய ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக ககிஸோ ரபாடா சிக்சரை பறக்க விட்டதால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது. அதனால் கடைசி ஓவரில் பஞ்சாப்பின் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்ட போது இளம் வீரர் ஆகாஷ் மாத்வாலை பந்து வீசுமாறு கேப்டன் பாண்டியா அழைத்தார். ஆனால் அப்போது தமக்கு தேவையான ஃபீல்டிங்கை செட்டிங் செய்வதற்காக ஹர்திக் பாண்டியாவின் உதவியை கேட்காத ஆகாஷ் மாத்வால் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவிடம் உதவி கேட்டார்.

- Advertisement -

அருகில் இருந்த பாண்டியா பேச்சு கொடுத்தும் ஆகாஷ் மாத்வால் அவரை கண்டுகொள்ளவில்லை. மறுபுறம் ஏற்கனவே 4 ஃபீல்டர்கள் மட்டுமே உள்வட்டத்திற்கு வெளியே அனுமதிக்கப்பட்டிருந்த கடினமான சூழ்நிலையில் அவருக்கு தகுந்த ஃபீல்டிங்கை செட்டிங் செய்வதற்கு முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா உதவினார். கடைசியில் 2 ரன் எடுக்க முயற்சி ரபாடா ரன் அவுட்டானதால் மும்பை வெற்றி பெற்றது.

இதையும் படிங்க: பிஹச்டி பட்டமே கொடுக்கலாம்.. ரிட்டையராகும் முன்பே பும்ரா இதை செய்யணும்.. இயன் பிஷப் கோரிக்கை

மொத்தத்தில் ஆரம்பத்தில் ரோஹித் சர்மாவை சீனியர் என்று மதிக்காத பாண்டியா பவுண்டரி எல்லைக்கு அருகே சென்று ஃபீல்டிங் செய்யுமாறு வற்புறுத்தினார். ஆனால் இப்போட்டியில் ஒரு இளம் வீரர் பாண்டியாவை மதிக்கவில்லை. அதைப் பார்க்கும் ரசிகர்கள் அன்று ரோகித்தை மதிக்காத பாண்டியாவை இன்று ஒரு இளம் வீரர் மதிக்கவில்லை என்று சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர்.

Advertisement