பிஹச்டி பட்டமே கொடுக்கலாம்.. ரிட்டையராகும் முன்பே பும்ரா இதை செய்யணும்.. இயன் பிஷப் கோரிக்கை

Ian Bishop
- Advertisement -

ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் தங்களுடைய 3வது வெற்றியை பதிவு செய்துள்ளது. ஏப்ரல் 18ஆம் தேதி முல்லான்பூரில் நடைபெற்ற 33வது லீக் போட்டியில் பஞ்சாப்பை 9 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய அந்த அணி புள்ளிப்பட்டியலிலும் 7வது இடத்திற்கு முன்னேறியது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி சூரியகுமார் யாதர் 78 ரன்கள் எடுத்த உதவியுடன் 193 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

ஆனால் அதைத் துரத்திய பஞ்சாப்புக்கு கேப்டன் சாம் கரண், லியம் லிவிங்ஸ்டன், ஜிதேஷ் சர்மா உள்ளிட்ட முக்கிய பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் எடுக்க தவறினர். அதனால் கடைசி நேரத்தில் சசாங் சிங் 41, அசுடோஸ் சர்மா 61 ரன்கள் அதிரடியாக எடுத்துப் போராடியும் பஞ்சாப் 193 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. மும்பை சார்பில் அதிகபட்சமாக பும்ரா, ஜெரால்ட் கோட்சி தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

- Advertisement -

வேற லெவல் பாராட்டு:
இந்த வெற்றிக்கு 4 ஓவரில் 21 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்து முக்கிய பங்காற்றிய ஜஸ்ப்ரித் பும்ரா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். குறிப்பாக மற்ற பவுலர்கள் அனைவரும் 8க்கும் மேற்பட்ட எக்கனாமியில் ரன்களை கொடுத்த அதே பிட்ச்சில் 5.2 என்ற துல்லியமான எக்கனாமியில் பந்து வீசிய பும்ரா தம்முடைய தரத்தை நிரூபித்தார்.

சொல்லப்போனால் இதே ஐபிஎல் தொடரில் பல நட்சத்திர தரமான பவுலர்கள் ரன்களை வாரி வழங்கும் நிலையில் அவர் மட்டும் துருவ நட்சத்திரத்தை போல் தனித்துவமாக செயல்பட்டு வருகிறார் என்றே சொல்லலாம். இந்நிலையில் வேகப்பந்து வீச்சில் பிஹெச்டி என்னும் டிகிரி இருந்தால் அதை பும்ராவுக்கு கொடுக்கலாம் என வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இயன் பிஷப் பாராட்டியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “ஒருவேளை ஜஸ்பிரித் பும்ராவை “வேகப்பந்து வீச்சாளர் பிஹெச்டி” எனும் பட்டத்தின் வாயிலாக அபிஷேகம் செய்ய முடிந்தால் அதை நான் செய்வேன். அவர் ஒரு அற்புதமான தொடர்பாளர், அறிவுடைய தெளிவானவர். பல்வேறு நாடுகளில் அனைத்து மட்டங்களிலும் ஆர்வத்துடன் இருக்கும் இளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அவர் பந்து வீச்சு பற்றிய விரிவுரைகளை நடத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன்”

இதையும் படிங்க: தோனி என்னையும் காதலியுடன் பாக்க வெச்சுட்டாரு.. அதையும் செஞ்சா நல்லாருக்கும்.. டேல் ஸ்டைன் மகிழ்ச்சி

“அதற்காக அவர் ஓய்வு பெறும் வரை நான் காத்திருக்க மாட்டேன்” என்று பதிவிட்டுள்ளார். அந்த வகையில் இதுவரை 7 போட்டிகளில் 13 விக்கெட்டுகள் எடுத்துள்ள பும்ரா இந்த வருடம் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்து அதற்கான ஊதா தொப்பியையும் தன் வசமாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement