தோனி என்னையும் காதலியுடன் பாக்க வெச்சுட்டாரு.. அதையும் செஞ்சா நல்லாருக்கும்.. டேல் ஸ்டைன் மகிழ்ச்சி

Dale Styen
- Advertisement -

கோடைகாலத்தில் ஐபிஎல் 2024 தொடர் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. அதில் தங்களுடைய முதல் 7 போட்டிகளில் 4 வெற்றிகளை பதிவு செய்துள்ள சென்னை ஏப்ரல் 19ஆம் தேதி லக்னோவை எதிர்கொள்கிறது. இம்முறை வருங்காலத்தை கருத்தில் கொண்டு அந்த அணியின் கேப்டன்ஷிப் பொறுப்பை ருதுராஜ் கையில் ஒப்படைத்துள்ள ஜாம்பவான் எம்எஸ் தோனி விக்கெட் கீப்பராக மட்டும் விளையாடி வருகிறார்.

மேலும் 42 வயதை கடந்துள்ள அவர் 8வது இடத்தில் பேட்டிங் செய்யும் முடிவை எடுத்துள்ளார். அதனால் அரிதாகவே பேட்டிங் செய்ய வரும் அவர் டெல்லிக்கு எதிரான போட்டியில் கடைசி நேரத்தில் களமிறங்கி 37* (16) ரன்கள் விளாசி ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். அதை விட மும்பைக்கு எதிராக கடைசி 4 பந்துகளில் ஹாட்ரிக் சிக்ஸர்களுடன் 20* ரன்கள் அடித்த அவர் 2011 உலகக்கோப்பை ஃபைனல் போல சூப்பர் பினிஷிங் கொடுத்தார்

- Advertisement -

ஸ்டைன் மகிழ்ச்சி:
கடைசியில் அந்த 20 ரன்கள் வித்தியாசத்தில் தான் மும்பையை தோற்கடித்து சென்னை வென்றது. அந்த வகையில் 42 வயதிலும் மேட்ச் வின்னராக செயல்படும் தோனி வயதானாலும் ஃபினிஷிங் ஸ்டைல் மாறாது என்பதை நிரூபித்து வருகிறார். இந்நிலையில் பொதுவாக தாம் அதிகமாக தொலைக்காட்சியில் ஐபிஎல் போட்டிகளை பார்ப்பதில்லை என்று தென்னாபிரிக்க ஜாம்பவான் வீரர் டேல் ஸ்டைன் கூறியுள்ளார்.

இருப்பினும் 42 வயதிலும் அசத்தும் தோனி தம்முடைய காதலியுடன் ஐபிஎல் போட்டிகளை பார்க்க வைத்துள்ளதாக ஸ்டைன் பாராட்டியுள்ளார். எனவே இன்னும் சற்று மேலே வந்து தோனி பேட்டிங் செய்தால் அதை பார்ப்பது நன்றாக இருக்கும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இது ஐபிஎல்’லை மட்டுமல்ல என்னைப் போன்ற பல தென்னாபிரிக்கர்களையும் மூழ்கடித்தது. உண்மையை சொல்ல வேண்டுமெனில் நான் அதிகம் டிவி பார்ப்பதில்லை. ஆனால் ஐபிஎல் இருக்கும் போது நான் இருக்கையில் ஒட்டிக்கொண்டது போல் தெரிகிறது. அதனால் ஐபிஎல் துவங்கி நடைபெறும் போது என்னுடைய காதலி டிவி உடைந்து விட்டது என்று ஜாலியாக சொல்வார்”

இதையும் படிங்க: விதிமுறை மீறி கேப்டன்ஷிப் செய்த ஹர்டிக் பாண்டியாவுக்கு.. ஐபிஎல் நிர்வாகம் தண்டனை அறிவிப்பு

“அந்த வகையில் ஐபிஎல் தொடரில் மற்றொரு நாளின் இரவில் எம்எஸ் தோனியை பார்த்தேன். அதைத்தான் நாங்கள் செய்ய விரும்புகிறோம். இதற்கு முன் ஒரு பவுலராக தோனியிடம் பந்து வீச்சில் அடி வாங்க வேண்டிய இடத்தில் நான் இருந்தேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். இருப்பினும் தற்போது ரசிகர்களின் பார்வையில் பார்க்கும் போது நானும் அதை ரசிக்கிறேன். அது நல்ல மனநிலையையும் கொடுக்கிறது. எனவே எம்எஸ் தோனியை முன்கூட்டியே களமிறக்க முடியுமா? அப்படி நடந்தால் நன்றாக இருக்கும்” என்று கூறினார்.

Advertisement