IPL 2023 : விராட் கோலியை விட சுப்மன் கில் அடிச்ச செஞ்சுரி தான் பெஸ்ட் – காரணத்தை விளக்கும் முன்னாள் ஆஸி வீரர்

- Advertisement -

கோடைகாலத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2023 டி20 தொடரின் 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்று முடிந்துள்ள நிலையில் நடப்பு சாம்பியன் குஜராத், சென்னை, லக்னோ மற்றும் மும்பை ஆகிய அணிகள் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன. இருப்பினும் தங்களுடைய லட்சிய முதல் கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மீண்டும் முக்கிய நேரத்தில் சொதப்பி வரலாற்றில் 16வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டது. குறிப்பாக குஜராத்துக்கு எதிராக சொந்த ஊரில் நடைபெற்ற கடைசி போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த அந்த அணி பரிதாபமாக வெளியேறியது.

- Advertisement -

மழையால் தாமதமாக துவங்கிய அந்த போட்டியில் பிட்ச் பேட்டிங்க்கு சவாலாக இருந்த நிலையில் கேப்டன் டு பிளேஸிஸ் 28, மேக்ஸ்வெல் 11 என முக்கிய பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை எடுக்க தவறிய போதும் தனி ஒருவனாக போராடிய நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 13 பவுண்டரி 1 சிக்சருடன் சதமடித்து 101* (61) ரன்கள் குவித்து காப்பாற்றினார். அதைத்தொடர்ந்து 198 ரன்களை துரத்திய குஜராத்துக்கு ஆரம்ப முதலே அடித்து நொறுக்கிய இளம் வீரர் சுப்மன் கில் பெங்களூருவுக்கு கொஞ்சம் கூட கருணை காட்டாமல் 5 பவுண்டரி 8 சிக்சருடன் சதமடித்து 104* (52) ரன்கள் குவித்து வெற்றி பெற வைத்தார்.

சிறந்த சதம்:
அதனால் மும்பை தகுதி பெற்ற அந்த போட்டியில் இந்திய கிரிக்கெட்டின் தற்போதைய நாயகனாக கருதப்படும் விராட் கோலியை (165.57) மிஞ்சும் அளவுக்கு 200.00 ஸ்ட்ரைக் ரேட்டில் சதமடித்து தம்முடைய அணியை வெற்றி பெற வைத்த சுப்மன் கில் ஆட்டநாயகன் விருதை வென்றார். அதனாலேயே தமது அணி தோற்றாலும் போட்டியின் முடிவில் அவரை கட்டிப்பிடித்து சிரித்த முகத்துடன் கை கொடுத்து விராட் கோலி மனதார பாராட்டினார்.

Shubman Gill

இந்நிலையில் அந்தப் போட்டியில் இருவரது சதமே சிறப்பானது என்றாலும் சேசிங் செய்யும் போது இருந்த அழுத்தங்களை தாண்டி 8 சிக்ஸர்களை அடித்து அசத்திய சுப்மன் கில் சதம் மிகவும் மதிப்பானது என்று முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டாம் மூடி பாராட்டியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “சுப்மன் கில் விளையாடுவதை பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியை கொடுக்கிறது. அவர் களத்தில் மிகவும் பொறுமையுடன் விளையாடுகிறார். குறிப்பாக அவருடைய முக பாவனைகள் மற்றும் பாடி லாங்குவேஜ் ஆகிய அவர் முழுமையான கட்டுப்பாட்டுடன் விளையாடுகிறார் என்பதை காட்டுகிறது”

- Advertisement -

“அந்தப் போட்டியில் அடிக்கப்பட்ட 2 சதங்களில் சுப்மன் கில் அடித்த 8 சிக்ஸர்கள் தான் வித்தியாசமாகும். அந்த 2 சதங்களுமே அபாரமானது. ஆனால் விராட் கோலி ஒரு சிக்சர் மட்டுமே அடித்தார். மறுபுறம் சுப்மன் கில் 8 சிக்ஸர்களை அதுவும் 200 ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசினார். அதை விட அழுத்தமான சேசிங் செய்யும் போது அந்த சதத்தை அடித்ததே மற்றுமொரு பெரிய வித்தியாசமாகும். அவருக்கு தலை வணங்குகிறேன்” என்று கூறினார்.

இருப்பினும் இதை விட அழுத்தமான போட்டிகளில் மகத்தான வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ள விராட் கோலி சேஸ் மாஸ்டர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் எப்படி பார்த்தாலும் அந்தப் போட்டியில் யார் வென்றார்கள் என்பதை விட நவீன இந்திய கிரிக்கெட்டின் நாயகனாக கொண்டாடப்படும் விராட் கோலியும் வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக சமீப காலங்களில் சிறப்பாக செயல்பட்டு அனைவரது பாராட்டுகளை பெற்றுள்ள சுப்மன் கில்லும் சதமடித்து நல்ல பார்மில் இருக்கிறார்கள்.

இதையும் படிங்க:IPL 2023 : அப்டின்னா ஃபைனலுக்கு சிஎஸ்கே – மும்பை வராதா? ரோஹித் – தோனியை அடக்கி ஆளும் பாண்டியா பிரதர்ஸ், புள்ளிவிவரம் இதோ

அதே பார்மில் அடுத்ததாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக லண்டன் ஓவலில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் அந்த இருவருமே சிறப்பாக செயல்பட்டு இந்தியாவுக்கு கோப்பையை வென்று கொடுப்பார்கள் என்று இந்திய ரசிகர்கள் உறுதியாக நம்பலாம்.

Advertisement