IPL 2023 : அப்டின்னா ஃபைனலுக்கு சிஎஸ்கே – மும்பை வராதா? ரோஹித் – தோனியை அடக்கி ஆளும் பாண்டியா பிரதர்ஸ், புள்ளிவிவரம் இதோ

IPL 2023 Play OFFs
- Advertisement -

இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2023 டி20 தொடரின் 70 போட்டியில் கொண்ட லீக் சுற்றின் முடிவில் நடப்பு சாம்பியன் குஜராத், சென்னை, லக்னோ மற்றும் வெற்றிகரமான மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இதை அடுத்து மே 23ஆம் தேதி நடைபெறும் குவாலிபயர் 1 போட்டியில் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடித்த குஜராத் மற்றும் சென்னை ஆகிய அணிகளும் மே 24ஆம் தேதி நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் 3, 4 ஆகிய இடங்களைப் பிடித்த லக்னோ மற்றும் மும்பை ஆகிய அணிகளும் மோதுகின்றன.

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இருக்கும் சேப்பாக்கத்தில் நடைபெறும் இந்த போட்டிகளில் வெல்லப்போவது யார் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக 5 மற்றும் 4 கோப்பைகளை வென்று வரலாற்றின் வெற்றிகரமான அணிகளாக ஜொலிக்கும் மும்பை மற்றும் சென்னை ஆகிய அணிகள் ஃபைனலில் மோதுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் கடந்த 15 வருட ஐபிஎல் வரலாற்றில் இந்த 2 அணிகளும் நாக் அவுட் போட்டிகளில் அனல் பறக்கும் மோதி நிறைய கோப்பைகளை வென்று வெற்றிகரமாக செயல்பட்டுள்ளன.

- Advertisement -

வெல்லப்போவது யார்:
அதை விட எம்எஸ் தோனி மற்றும் ரோஹித் சர்மா என ஐபிஎல் வரலாற்றில் 2 மகத்தான வெற்றிகரமான கேப்டன்கள் வழி நடத்தும் அந்த அணிகள் இந்த நாக் அவுட் சுற்றில் வெல்லும் என்ற எதிர்பார்ப்பு பெரும்பாலானவர்களிடம் காணப்படுகிறது. ஆனால் கடந்த வருடம் தோற்றுவிக்கப்பட்டு முதல் சீசனிலேயே ஹர்திக் பாண்டியா தலைமையில் சொல்லி அடித்து புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து குவாலிபயர் 1 போட்டியில் வென்று நேரடியாக ஃபைனலுக்கு தகுதி பெற்ற குஜராத் கோப்பையை வென்று சாதனை படைத்தது.

அதை விட தோனி தலைமையிலான சென்னையை கடந்த வருடம் லீக் சுற்றில் 2 போட்டிகளில் எதிர்கொண்ட குஜராத் இரண்டிலும் தோற்கடித்திருந்தது. அந்த நிலையில் மிகச் சரியாக இந்த சீசனிலும் அதே போல் செயல்பட்டு முதலிடம் பிடித்துள்ள அந்த அணி இந்த வருடத்தின் முதல் போட்டியிலேயே சென்னையை தோற்கடித்தது. மொத்தத்தில் ஐபிஎல் தொடரில் இதுவரை சென்னையை எதிர்கொண்ட 3 போட்டிகளிலும் ஒன்றில் கூட தோற்காமல் தொடர்ந்து குஜராத் வெற்றி நடை போடுகிறது.

- Advertisement -

மறுபுறம் வரலாற்றில் எத்தனையோ அணிகளை தெறிக்க விட்ட சென்னை கடந்த வருடம் தோற்றுவிக்கப்பட்ட குஜராத்திடம் இதுவரை ஒரு போட்டியில் கூட வெல்லவில்லை. அந்த வரிசையில் சேப்பாக்கத்தில் நடைபெறும் குவாலிபயர் 1 போட்டியிலும் சென்னையை 4வது முறையாக தோற்கடித்து குஜராத் நேரடியாக ஃபைனலுக்கு தகுதி பெறும் என்று அந்த அணி ரசிகர்கள் நம்புகின்றனர். அதே போல கடந்த வருடம் தோற்றுவிக்கப்பட்ட மற்றொரு அணியான லக்னோ முதல் வருடத்திலேயே பிளே ஆப் சுற்றுக்கு சென்று அசத்தியதை போலவே வெற்றிகரமான மும்பையை 2022 சீசனில் எதிர்கொண்ட 2 லீக் போட்டிகளிலும் அடுத்தடுத்து தோற்கடித்திருந்தது.

அந்த நிலையில் இந்த வருடம் லீக் சுற்றில் எதிர்கொண்ட போட்டியிலும் வெறும் 5 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை க்ருனால் பாண்டியா தலைமையிலான லக்னோ தோற்கடித்தது. அந்த வகையில் ஐபிஎல் தொடரில் இதுவரை மோதிய 3 போட்டிகளிலும் வெற்றிகரமான மும்பையை அசால்டாக தோற்கடித்துள்ள லக்னோ இந்த பிளே ஆப் சுற்றில் எலிமினேட்டரில் மீண்டும் எதிர்கொள்கிறது.

- Advertisement -

அதனால் 4வது முறையாக வென்று லக்னோ குவாலிபயர் 2 போட்டிக்கு தகுதி பெறுமா என்ற எதிர்பார்ப்பு அந்த அணி ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. மொத்தத்தில் வெற்றிகரமான ரோகித் சர்மா தலைமையிலான மும்பையையும் தோனி தலைமையிலான சென்னையையும் நேற்று முளைத்த காளான்களாக கடந்த வருடம் தோற்றுவிக்கப்பட்ட லக்னோ மற்றும் குஜராத் இதுவரை எதிர்கொண்ட அனைத்து போட்டிகளில் அடக்கியுள்ளது.

இதையும் படிங்க:IPL 2023 : ஆர்சிபி’ல இருந்தா என்னைக்குமே கப் ஜெயிக்க முடியாது, அந்த டீம்ல விளையாடுங்க – விராட் கோலிக்கு பீட்டர்சன் அட்வைஸ்

அந்த வரிசையில் பிளே ஆஃப் சுற்றிலும் வென்று ஃபைனலில் பாண்டியா சகோதரர்கள் விளையாடுவார்களா அல்லது அவர்களை முதல் முறையாக தோற்கடித்து மகத்தான தோனியும் ரோகித்தும் மோதுவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement