IPL 2023 : ஆர்சிபி’ல இருந்தா என்னைக்குமே கப் ஜெயிக்க முடியாது, அந்த டீம்ல விளையாடுங்க – விராட் கோலிக்கு பீட்டர்சன் அட்வைஸ்

- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் கடந்த 2 மாதங்களாக பரபரப்பான போட்டிகளுடன் நடைபெற்று வந்த 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்றில் முடிவில் நடப்பு சாம்பியன் குஜராத், முன்னாள் சாம்பியன் சென்னை, லக்னோ மற்றும் வெற்றிகரமான மும்பை ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. ஆனால் இம்முறையாவது முதல் கோப்பையை வெல்லுமா என்று எதிர்பார்க்கப்பட்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு நடப்பு சாம்பியன் குஜராத்துக்கு எதிரான கடைசி போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்று வரலாற்றில் 16வது முறையாக கோப்பையை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டது.

முன்னதாக 2008இல் ஐசிசி அண்டர்-19 உலக கோப்பையை இந்தியாவுக்கு கேப்டனாக வென்று கொடுத்த டெல்லியை சேர்ந்த கிரிக்கெட் வீரர் விராட் கோலியை பெங்களூரு நிர்வாகம் குறைந்த தொகைக்கு வாங்கியது. சர்வதேச கிரிக்கெட்டை போலவே ஆரம்ப காலங்களில் சுமாராக செயல்பட்டு வந்த அவர் ஐபிஎல் தொடரிலும் 2010 வரை தடுமாறினாலும் 2011 முதல் பெரிய ரன்களை குவித்து வெற்றிகளை பெற்றுக் கொடுக்கும் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்தார்.

- Advertisement -

பீட்டர்சன் கோரிக்கை:
அதே போல சர்வதேச அளவிலும் சச்சினுக்கு பின் இந்திய பேட்டிங் துறையின் முதுகெலும்பாக உருவெடுத்த அவர் 2013இல் பெங்களூருவின் கேப்டனாக நியமிக்கப்பட்டு ஒவ்வொரு சீசனிலும் மிகச்சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி வெற்றி போராடினார். குறிப்பாக 2016 சீசனில் விஸ்வரூபம் எடுத்து 973 ரன்களை விளாசி வெறித்தனமாக போராடி அவர் ஃபைனலில் சிறப்பாக செயல்பட்டும் வழக்கம் போல இதர வீரர்கள் கடைசி நேரத்தில் சொதப்பியதால் கையிலிருந்த வெற்றியை பெங்களூரு தாரை வார்த்தது. அதன் பின்பும் ரன் மெஷினாக செயல்பட்டு ரெய்னாவை முந்தி ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த வீரராக சாதனை படைத்து போராடியும் இதர வீரர்கள் சொதப்பியதால் வெற்றி காண முடியாத அவர் இருக்கும் வரை பெங்களூரு கோப்பையை தொடவே முடியாது என்ற விமர்சனங்கள் எழுந்தன.

அதனால் கடந்த வருடம் கேப்டன்ஷிப் பதவியை ராஜினாமா செய்து சுமாராக செயல்பட்ட அவர் இந்த வருடம் பழைய ஃபார்முக்கு திரும்பி 639 ரன்களை குவித்து வெற்றிக்கு போராடினார். குறிப்பாக ஹைதராபாத்துக்கு எதிரான கடந்த போட்டியில் சதமடித்து காப்பாற்றிய அவர் குஜராத்துக்கு எதிரான வாழ்வா – சாவா போட்டியிலும் சவாலான பிட்ச்சில் மீண்டும் சதமடித்து தனி ஒருவனாக நல்ல ஸ்கோரை எடுக்க உதவினார். ஆனாலும் தினேஷ் கார்த்திக் போன்ற முக்கிய வீரர்களும் பவுலர்களும் ரன்களை வாரி வழங்கியதால் வழக்கமான தோல்வியை சந்தித்த விராட் கோலி மனமுடைந்து சோகமாக பெவிலியனில் உட்கார்ந்திருந்தார்.

- Advertisement -

பொதுவாக கிரிக்கெட்டில் வெற்றி பெறுவதற்கு 11 வீரர்களும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற நிலைமையில் பெங்களூரு அணியில் மட்டும் அந்த காலம் முதல் இந்த காலம் வரை டு பிளேஸிஸ், விராட் கோலி, மேக்ஸ்வெல், சிராஜ் ஆகியோரை தவிர்த்து அனைவரும் தொடர்ந்து அசத்தவில்லை. அப்படியே சிறப்பாக செயல்பட்டாலும் ஏதோ ஒரு தருணத்தில் அதிர்ஷ்டமும் பெங்களூரு அணிக்கு கை கொடுப்பதில்லை. அதனால் சூரியன் மேற்கே உதித்தாலும் பெங்களூரு ஐபிஎல் கோப்பை வெல்லாது என்ற எதிரணி ரசிகர்களின் கருத்துக்கள் ஆழமாக மீண்டும் வரத் துவங்கியுள்ளது.

இந்நிலையில் 2008 முதல் ஒரே அணிக்காக விளையாடும் வீரராக சரித்திரம் படைத்து பெங்களூருக்கு போராடியும் வெற்றி காண முடியாத விராட் கோலி ஐபிஎல் கோப்பையை வெல்ல தம்முடைய சொந்த ஊரான டெல்லிக்கு விளையாட வேண்டும் என்று முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் கோரிக்கை வைத்துள்ளார். குறிப்பாக கால்பந்து ஜாம்பவான்கள் பேக்கம், ரொனால்டோ, மெஸி ஆகியோர் தங்களுடைய கேரியரில் ஒரு கட்டத்திற்கு பின் சொந்த ஊருக்காக சொந்த ரசிகர்கள் ஆதரவுடன் சொந்த மண்ணில் விளையாடி வெற்றி கண்டதை போல் விராட் கோலியும் டெல்லிக்கு விளையாட வேண்டும் என்று கடந்த சில வாரங்களுக்கு முன்பே அவர் ட்விட்டரில் கருத்து கணிப்பும் கேட்டிருந்தார்.

இதையும் படிங்க:CSK vs GT : சென்னை அணி பைனலுக்கு போகனும்னா இதுமட்டும் தான் ஒரே வழி – ஓர் முழு அலசல் இதோ

அதற்கு 57% ரசிகர்கள் சரியான ஆலோசனை தான் என்று கருத்து தெரிவித்த நிலையில் நேற்றைய தோல்விக்கு பின் விராட் கோலிக்கு அதே யோசனையை மீண்டும் ட்விட்டரில் கெவின் பீட்டர்சன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement